நாட் ரீச்சபிள் விமர்சனம்: நாட் ரீச்சபிள் க்ரைம் த்ரில்லர் பிரியர்களுக்கு வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறங்கியிருக்கிறது | ரேட்டிங்: 2.5/5

0
323

நாட் ரீச்சபிள் விமர்சனம்: நாட் ரீச்சபிள் க்ரைம் த்ரில்லர் பிரியர்களுக்கு வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறங்கியிருக்கிறது | ரேட்டிங்: 2.5/5

கோவையில் காணாமல் போன மூன்று இளம் பெண்களை தேடி கண்டுபிடிக்க விவாகரத்திற்கு காத்திருக்கும் தம்பதியரான போலீஸ் அதிகாரிகள் விஷ்வா மற்றும் சுபாவிடம் ஒப்படைக்கின்றனர். இருவரும் விசாரணையை தொடங்க திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. இந்த இளம் பெண்களில் இருவர் கொலை செய்யப்பட்டிருக்க, மற்ற ஒரு இளம் பெண் என்ன ஆனார் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. இறுதியில் கொலைக்கான காரணத்தையும், காணாமல் போன பெண்ணையும், அதை செய்த குற்றவாளியையும் கண்டு பிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.

இதில் விஷ்வா மற்றும் சுபா படம் முழுவதும் வரும் முக்கிய கதாபாத்திரங்களாகவும், மற்றும் சாய் தன்யா, ஹரிதாஸ்ரீ, காதல் சரவணன், காலங்கள் தினேஷ், பிர்லாபோஸ், ஷர்மிளா, கோவை குருமூர்த்திஇவக்கியா, சாய் ரோகிணி ஆகியோர் படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

சுகுமாரன்சுந்தரின் ஒளிப்பதிவும், சரண்குமார் இசையும் படத்தின் க்ரைம் களத்திற்கு ஏற்றவாறு காட்சிக்கோணங்களில் சிறப்பாக செய்துள்ளனர்.

நாட் ரீச்சபிள் படத்தை படத்தொகுப்பு செய்து எழுதி இயக்கியிருக்கிறார் சந்துரு முருகானந்தம். பாலினக்கவர்ச்சி, காதல், கொலை, விசாரணை என்ற திரைக்கதையில் ஆரம்பம் முதல் இறுதி வரை எதிர்பார்ப்புடன் கொடுத்து இறுதியில் திருப்பத்துடன் முடித்துள்ளார் இயக்குனர் சந்துரு முருகானந்தம்.

மொத்தத்தில் க்ராக்பிரையின் புரொடக்ஷன்ஸ் மற்றும் எம் கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் நாட் ரீச்சபிள் க்ரைம் த்ரில்லர் பிரியர்களுக்கு வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறங்கியிருக்கிறது.