நாடு விமர்சனம் : நாடு அனைவரையும் கவனிக்க வைத்து மனநிறைவு தரும் | ரேட்டிங்: 3/5

0
298

நாடு விமர்சனம் : நாடு அனைவரையும் கவனிக்க வைத்து மனநிறைவு தரும் | ரேட்டிங்: 3/5

ஸ்ரீஆர்ச் மீடியா அண்ட் எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் சக்ரா மற்றும் ராஜ் தயாரித்திருக்கும் நாடு படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எம்.சரவணன்.
இதில் தர்ஷன், மஹிமா நம்பியார், ஆர்.எஸ் சிவாஜி, சிங்கம் புலி, அருள் தாஸ், இன்பா ரவிக்குமார், வசந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள்:- இசை: சி.சத்யா, ஒளிப்பதிவு : கே.ஏ.சக்திவேல், கலை. : லால்குடி. என்.இளையராஜா, எடிட்டர் பி.கே, பிஆர்ஒ-ஆனந்த்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள தேவநாடு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத ஒரு சிறு கிராமம். இந்த ஊரில் ஒரு அரசு மருத்துவமனை இருந்தும் மருத்துவர்கள் இல்லாததால் நிறைய உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. அதற்கு காரணம் அந்த மருத்துவமனைக்கு அரசு நியமிக்கும் மருத்துவர்கள் ஒரு வாரத்தில் இடமாற்றம் பெற்றுக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த நாயகன் தர்ஷனின் தங்கையும் இறக்கிறார். உயிரிழப்பு அதிகரித்த நிலையில் அந்த கிராம மக்கள் போராடி  கலெக்டரிடம் மனு கொடுத்தும், தொடர்ந்து போராடி தங்கள் கிராமத்தில் உள்ள மருத்துவமனைக்கு ஒரு மருத்துவரை வர வைக்கின்றனர். இந்த ஊருக்கு மகிமா நம்பியார் மருத்துவராக வருகிறார். புதிதாக வந்த மருத்துவருக்கு உதவிகளை செய்து தருகிறார்கள் தேவநாடு ஊர் தலைவராக இருக்கும் சிங்கம் புலி, தர்ஷன் மற்றும் ஆர்.எஸ். சிவாஜி. மருத்துவர் மகிமா அந்த ஊர் மக்கள் சிலரது உயிரை காப்பாற்றியதால் இந்த ஊர் மக்கள் அவரை கடவுளாக பார்க்கின்றனர். ஆனால் அவருக்கும் அந்த ஊர் பிடிக்காததால் என்ற இடமாற்றத்திற்கான ஏற்பாடு செய்கிறார். விஷயம் அறிந்த ஊர் மக்கள் மருத்துவர் ஊரை விட்டு வெளியேறாமல் இருக்க சில முயற்சிகளை செய்கிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே ‘நாடு’ படத்தின் மீதிக்கதை.

ஒரு மலைவாழ் இளைஞனாக வாழ்ந்து சிறப்பான ஒரு நடிப்பை கொடுத்துள்ளார். அவரது உடல் மொழியும், பேச்சும் மற்றும் ஒரு கட்டத்தில் இயல்பான நடிப்பால் நம்மை கண்கலங்க வைத்து விடுகிறார்.
மருத்துவராக மஹிமா நம்பியார் கதையோடு பயணிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதுடன் இறுதி காட்சியில் நேர்த்தியாக செய்துள்ளார்.
தர்ஷனின் தந்தையாகவும், சித்தப்பா வாகவும் நடித்திருக்கும் மறைந்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி, ஊர் தலைவராக நடித்திருக்கும் சிங்கம் புலி, கலெக்டராக வரும் அருள்தாஸ், இன்பா ரவிக்குமார், வசந்தா உட்பட அனைத்து நடிகர்களும் கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாக வலம் வந்து சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இசை: சி.சத்யா, ஒளிப்பதிவு : கே.ஏ.சக்திவேல், கலை : லால்குடி. என்.இளையராஜா, எடிட்டர் பி.கே உட்பட அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்பு திரைக்கதையின் உயிர் நாடியாக திகழ்கிறார்கள்.
நாடு ஒரு நிஜ வாழ்க்கை சம்பவங்களுடன் சமூகத்தின் விளிம்புகளில் வாழும் ஆதரவற்றவர்களுக்கு மருத்துவ சேவை என்பது இன்னும் எட்டாத கனவாகவே உள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் நல்ல மருத்துவமனைகள் மற்றும் சேவை மனப்பான்மையுடன் நல்ல மருத்துவர் தேவை என்பதை வலியுறுத்தி திரைக்கதை அமைத்து யதார்த்தமாக படைத்திருக்கிறார் இயக்குனர் எம் சரவணன்.
மொத்தத்தில் ஸ்ரீஆர்ச் மீடியா அண்ட் எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் சக்ரா மற்றும் ராஜ் தயாரித்திருக்கும் நாடு அனைவரையும் கவனிக்க வைத்து மனநிறைவு தரும்.