நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம் : நட்சத்திரம் நகர்கிறது உணர்வுரீதியான புது முயற்சி | ரேட்டிங்: 2.5/5
கலையரசன், காளிதாஸ் ஜெயராம், துசாரா விஜயன், ஹரிகிருஷ்ணன், வினோத், ஞானபிரசாத், சுபத்ரா ராபர்ட், சபீர் கல்லாரக்கல், ரெஜின்ரோஸ், தாமு, ஷெரின் செலின் மேத்யூ, வின்சு ரேச்சல சாம், மனிஷா டைட், அர்ஜூன் பிரபாகரன், உதயசூர்யா, ஸ்டீபன்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
யாழி பிலிம்ஸ் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன் மற்றும் மனோஜ் லியோனல்ஜேசன் தயாரிப்பில் நட்சத்திரம் நகர்கிறது படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பா.ரஞ்சித்
ஒளிப்பதிவு-கிஷோர் குமார், படத்தொகுப்பு-செல்வா ஆர்.கே, இசை-டென்மா, கலை-எல்.ஜெயரகு, நடனம்-சாண்டி, சண்டைப்பயிற்சி-ஸ்டன்னர் சாம், பாடல்கள்-உமாதேவி, அறிவு, உடைகள்-அனிதா, ஏகாம்பரம், பிஆர்ஒ-குணா.
காளிதாஸ் ஜெயராம் மற்றும் துசாரா விஜயன் இருவரும் நாடகக்குழுவில் பயில்பவர்கள் காதலர்கள். சிறு ஊடல் ஏற்பட்டு இருவரும் பிரிகிறார்கள். இருந்தாலும் பாண்டிச்சேரி நாடகக்குழுவில் ஒன்றாக நடிப்பு பயிற்சி செய்கிறார்கள்.இந்த நாடக்குழுவில் பலதரப்பட்ட நடிகர்கள் இருக்க சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு கலையரசன் இந்த குழுவில் வந்து சேர்கிறார்.அதில் ஆண், பெண் ஒரின சேர்க்கை காதலர்கள், திருநங்கை காதலர்கள், அனைவரும் சுதந்திரமாக தங்கள் விருப்பம் போல் வாழ்வதைப் பார்த்து கலையரசன் அதிர்ச்சியாகிறார். அப்பொழுது நாடகக்குழுவில் அரசியல் கலந்த காதலைப் பற்றி நாடகம் போட திட்டமிட்டு அதற்கான ஒத்திகையை நடத்துகின்றனர். இந்த ஒத்திகையின் போது கலையரசன் கொஞ்சம் கொஞ்சமாக யதார்த்தத்தை புரிந்து கொள்ள முற்படும் போது துசாரா விஜயன் மீது காதல் கொள்கிறார். இறுதியில் அந்த நாடகம் வெற்றிக்கரமாக நடைபெற்றதா? துஷாரா விஜயன் – காளிதாஸ் காதல் என்னவானது என்பதே படத்தின் மீதிக்கதை.
தமிழ் என்கின்ற ரெனேவாக வரும் துஷாரா விஜயன், இனியனாக காளிதாஸ் ஜெயராம், சினிமா கனவோடு களமிறங்கும் ஆர்வமுள்ள இளைஞராக கலையரசன், சேகர், தன்பால், திருநங்கை என ஒவ்வொரு கதாபாத்திரமும் உணர்ச்சி பூர்வமாக நடித்துள்ளனர். இதில் ஹரிகிருஷ்ணன், வினோத், ஞானபிரசாத், சுபத்ரா ராபர்ட், சபீர் கல்லாரக்கல், ரெஜின்ரோஸ், தாமு, ஷெரின் செலின் மேத்யூ, வின்சு ரேச்சல சாம், மனிஷா டைட், அர்ஜூன் பிரபாகரன், உதயசூர்யா, ஸ்டீபன்ராஜ் அனைவருமே முக்கியமான கதாபாத்திரங்களாக படத்தின் காட்சிகளுக்கு உறுதுணையாக இருந்து கவர்ந்துள்ளனர்.
கிஷோர் குமார் ஒளிப்பதிவு, உமாவதி, அறிவு பாடல்களில் டென்மாவின் இசை இன்னிசை கலந்து இளையராஜாவின் தேனிசையோடு ஒலிக்கிறது.
படத்தொகுப்பு-செல்வா இன்னும் ஷார்பாக எடிட் செய்திருக்கலாம். “படத்தின் நீளம் பார்வையாளர்களை ஒரு கட்டத்திற்கு பிறகு நாற்காலியிலிருந்து நெளியவைக்கிறது.
காதலை புதுவித கோணத்தில் இன்றைய இளைய சமுதாயத்தின் பார்வையில் வலுவான நாடக குழுவின் கதாபாத்திரங்களாக வடிவமைத்து, வழக்கமான காதல் கதைகளிலிருந்து ஒரு வித்தியாசமான காதல் உலகிற்கு நம்மை அழைத்து சென்றுள்ளார் இயக்குனர் பா. இரஞ்சித்.
மொத்தத்தில் யாழி பிலிம்ஸ் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன் மற்றும் மனோஜ் லியோனல்ஜேசன் தயாரிப்பில் நட்சத்திரம் நகர்கிறது உணர்வுரீதியான புது முயற்சி.