தோழர் சேகுவேரா சினிமா விமர்சனம் (Thozhar cheguevara Movie Review): தோழர் சேகுவேரா அதிகார வர்கத்திற்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கும் இடையே நடக்கும் புரட்சிப் போர் | ரேட்டிங்: 2.5/5

0
303

தோழர் சேகுவேரா சினிமா விமர்சனம் (Thozhar cheguevara Movie Review): தோழர் சேகுவேரா அதிகார வர்கத்திற்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கும் இடையே நடக்கும் புரட்சிப் போர் | ரேட்டிங்: 2.5/5

கிரே மேஜிக் கிரியேஷன்ஸ் சார்பில் அனிஷ் எட்மண்ட் பிரபு தயாரித்திருக்கும் படம் தோழர் சேகுவேரா.

சத்யராஜுடன் இணைந்து மொட்டை ரஜேந்திரன், நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ், அலெக்ஸ், நீல் ஆனந்த், மற்றும் அனிஷ் எட்மண்ட் பிரபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்தாளர் அலெக்ஸ் ஏ.டி
இசை பி.எஸ் அஷ்வின்
ஒளிப்பதிவு சாம் அலன்
எடிட்டிங் கவுதம் ராஜேந்திரன்
மக்கள் தொடர்பு குணா.

ஒரு கிராமத்தில் சாதி ரீதியாக ஒடுக்கப்படும் சமுதாயத்தை சேர்ந்த ஒரு அப்பாவி சிறுவன் எப்படியாவது படித்து முன்னேற வேண்டும், என்று நினைக்க சாதி வெறியர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அவனுடைய உயிருக்கும் அவனது சமூகத்திற்கும் அச்சுறுத்தலாக அமைவதுடன் அவர்களை கொத்தடிமைகளாகவே வைக்கிறது. சாதி வெறியர்களின் செயலால், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வரும் நெப்போலியன் (அலெக்ஸ்), 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுவிட்டு மேலே படிக்க முடியாமல் பைக் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே, பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய சேகுவேரா (சத்யராஜ்), அங்கு நடக்கும் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வருவதோடு, நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களை பொறியியல் கல்லூரியில் சேர்க்க முயற்சிக்கிறார். இந்நிலையில் கல்லூரியில் நடக்கும் நுழைவுத் தேர்வில் நெப்போலியன்  வெற்றி பெற்று இட ஒதுக்கீடு மூலம் பொறியியல் கல்லூரியில் சேர்கிறார். கல்லூரியில் சேர்ந்த முதல் நாளில் இருந்தே உடன் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் அந்தக் கல்லூரியில் பணி புரியும் ஒரு சில பேராசிரியர்கள் மூலம் சாதி வன்முறைக்கு ஆளாகிறார். சாதி வன்முறைக்கு ஆளாகும் நெப்போலியன், அனைத்தையும் பொறுத்து போகிறான். இறுதி ஆண்டில் சாதி வன்முறைக்கு எதிராக துணிந்து எதிர்க்கும் போது உயிருக்கு ஆபத்து ஏற்படும் மோதல் வெடிக்கிறது. அதன் பின் நடக்கும் சம்பவங்கள் படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக ஏ.டி.அலெக்ஸ், நெப்போலியன் என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்.

சேகுவேரா கதாபாத்திரத்தில் சத்தியராஜ் கல்லூரி பேராசிரியராக சில காட்சிகளில் மட்டுமே திரையில் தோன்றுவதுடன், பின்னணி குரலில் கதை சொல்லி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார்.

மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ், நாஞ்சில் சம்பத், நீல் ஆனந்த், மற்றும் வில்லனாக அனிஷ் எட்மண்ட் பிரபு உட்பட அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு நடிப்பின் மூலம் நியாயம் சேர்த்து கவனம் பெறுகிறார்கள்.

40-க்கும் மேற்பட்ட சென்சார் கட்டுகள் இருந்தும் தான் சொல்ல நினைத்த கருத்தை ஒளிப்பதிவாளர் சாம் அலன், இசையமைப்பாளர் பி.எஸ்.அஸ்வின், படத்தொகுப்பாளர் கௌதம் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியுடன் மக்களிடம் நேர்த்தியாக கொண்டு சேர்க்க முயற்சித்துள்ளார் இயக்குனர் அலெக்ஸ் ஏ.டி.

மொத்தத்தில் கிரே மேஜிக் கிரியேஷன்ஸ் சார்பில் அனிஷ் எட்மண்ட் பிரபு தயாரித்திருக்கும் தோழர் சேகுவேரா அதிகார வர்கத்திற்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கும் இடையே நடக்கும் புரட்சிப் போர்.