தேஜாவு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லரை பார்க்கலாம், ரசிக்கலாம், கொண்டாடலாம்

0
332

தேஜாவு விமர்சனம்: தேஜாவு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லரை பார்க்கலாம், ரசிக்கலாம், கொண்டாடலாம் |மதிப்பீடு: 3.5/5

வைட் கார்பட் பிலிம்ஸ் விஜய் பாண்டி.கே மற்றும் பிஜி மீடியா வொர்க்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் தேஜாவு படத்தில் அருள்நிதி, மதுபாலா, அச்யுத்குமார், ஸ்மிருதி வெங்கட், சேதன், ராகவ் விஜய், காளி வெங்கட், மைம்கோபி,, சூப்பர் குட் பிலிம்ஸ் சுப்ரமணி, ஹர்வின் ராம், மரியா வெங்கட், செந்து மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தேஜாவு படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அரவிந்த் ஸ்ரீனிவாசன்.தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-ஜிப்ரான், ஒளிப்பதிவு-பி.ஜி.முத்தையா, பாடல்கள்-விவேகா, படத்தொகுப்பு-அருள் ஈ.சித்தார்த், கலை-வினோத் ரவீந்திரன், சண்டை-பிரதீப் தினேஷ், தயாரிப்பு நிர்வாகி-உமா மகேஷ்வர ராஜு, தயாரிப்பு மேற்பார்வை-ரவிச்சந்திரன்.கே, நிர்வாக தயாரிப்பு-ஆன்டோ.எல். பிஆர்ஒ-ஏய்ம் சதீஷ்.

டிஜிபி மதுபாலாவின் மகள் அலுவலகத்தில் இருந்து வரும் வழியில் காணாமல் போகிறார். இதனால் பதற்றமடையும் மதுபாலா, அண்டர் கவர் ஆபரேஷனாக அருள்நிதியை நியமனம் செய்து விசாரிக்க அனுப்புகிறார். அருள்நிதியும் தன் விசாரணையை தொடங்க எழுத்தாளர் அச்யுத்குமார் எழுதும் கதையில் சொல்வது போல் எல்லாம் நடக்கிறது என்பதை அறிகிறார். நடந்து முடிந்த சம்பவங்கள் மீண்டும் நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவது போல் இருக்கிறது. இதனால் குழப்பமடையும் அருள்நிதி என்ன செய்தார்? காணாமல் போன டிஜிபி பெண்ணை கண்டுபிடித்தாரா? உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தாரா? என்பதே கதையின் முடிவு.

போலீஸ் அதிகாரியாக விக்ரம் குமாராக அருள்நிதி  தன்னுடைய நடை, உடை, பாவனை, கூர்மையான சாதுர்யமான விசாரணையால் கண்டுபிடிக்கும் உண்மைகளை சாதகமாக, பாதகமாக பயன்படுத்தி இறுதியில் தன்னுடைய கதாபாத்திரத்தின் தன்மையை உணர்த்தும் இடத்தில் அற்புதமாக செய்துள்ளார்.
முக்கிய கதாபாத்திரத்தில் டிஜிபியாக மதுபாலா, அசத்தலான நடிப்பில் எழுத்தாளராக அச்யுத்குமார், டிஜிபியின் மகளாக ஸ்மிருதி வெங்கட், செகரெட்டரியாக சேதன், கான்ஸ்டபிளாக காளிவெங்கட், ராகவ் விஜய், மைம்கோபி, சூப்பர் குட் பிலிம்ஸ் சுப்ரமணி, ஹர்வின் ராம், மரியா வின்சென்ட், செந்து மோகன் ஆகியோர் படத்தின் அச்சாணியாக இருந்து வலு சேர்த்துள்ளனர்.

ஜிப்ரானின் இசை மற்றும் பின்னணி இசை படத்தின் முக்கியமான காட்சிகளுக்கு அசத்தாலாக கொடுத்து மனதில் பதிகிறார்.

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு தெளிவான நீரோடை போல் படத்திற்கு காட்சிக்கோணங்களால் அழகு சேர்த்து வெற்றிக்கு வழி வகை செய்துள்ளார்.

படத்தொகுப்பு-அருள் ஈ.சித்தார்த், கலை-வினோத் ரவீந்திரன் ஆகிய இருவரும் படத்தின் வித்தியாசமான களத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருந்து அசத்தியுள்ளனர்.

நடந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனக்கு நியாயம் கிடைக்க பல முயற்சிகள் செய்து தண்டனை வாங்கி கொடுப்பதை வைத்து திரைக்கதையமைத்திருக்கும் இயக்குனராக புது அவதாரம் எடுத்திருக்கும் பத்திரிக்கையாளர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். விடாமுயற்சி, தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் ஒரு உதாரணம். இரண்டு கதைகளின் சங்கமத்தை, இடியாப்ப சிக்கலை மெதுவாக வெளிக்கொணர்ந்து இறுதியில் முடிவையும் சொல்லி அசத்தியுள்ளார் இயக்குர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். இனி வரும் காலங்களில் மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் வைட் கார்பட் பிலிம்ஸ் விஜய் பாண்டி.கே மற்றும் பிஜி மீடியா வொர்க்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் தேஜாவு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லரை பார்க்கலாம், ரசிக்கலாம், கொண்டாடலாம்.