தென் சென்னை சினிமா விமர்சனம் : தென் சென்னை ஆக்ஷன் த்ரில்லர் பார்வையாளர்களை நிச்சயம் ஏமாற்றாது | ரேட்டிங்: 2.5/5
நடிகர்கள் :
ரங்கா – ஜேசன் (கதாநாயகன்)
ரியா – மேகா (கதாநாயகி)
இளங்கோ குமணன் – டோனி (கதாநாயகன் மாமா)
சுமா – மரியா (கதாநாயகன் தாய்)
தாரணி – தாரா (கதாநாயகன் அக்கா)
நிதின் மேஹ்தா – ருத்ரா (வில்லன் 1)
திலீபன் – சிவக்குமார் (இன்ஸ்பெக்டர்)
தன்ஷிவி, நித்யநாதன் – கிருஷ்ணா (குழந்தை)
வத்ஷன் எம் நட்ராஜன் – எஸ் கே (வில்லன் 2)
தொழில்நுட்ப வல்லுநர்கள் :
எழுத்து – இயக்கம் : ரங்கா
ஒளிப்பதிவாளர் : சரத்குமார் எம்
எடிட்டிங் தொகுப்பாளர் : இளங்கோவன் சி எம்
பின்னணி இசை : ஜென் மார்டின்
பாடல் இசை : சிவ பத்மயன்
பாடல் : ரங்கா
பாடியவர் : நரேஷ் ஐயர்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : மாரிமுத்து
வண்ணம் – சிட்டகாங்
தயாரிப்பாளர்: ரங்கா ஃபிலிம் கம்பெனி
மக்கள் தொடர்பு : ஹேமானந்த்
சென்னைக்கு பிழைப்பு தேடி வரும் தேவராஜன் தனக்கு தெரிந்த ஹோட்டல் தொழிலில் தன் திறமையால் 2010-ல் ஒரு ஹோட்டலை உருவாக்குகிறார். மதுரையில் சந்திக்கும் அண்ணன், தங்கையை தன்னுடன் அழைத்து வந்து அவர்களையும் தன் குடும்பமாக வளர்த்து, தொழிலையும் சேர்த்து வளர்க்கிறார். அவர்களை தன் வாரிசுகளுக்கு திருமணமும் செய்து வைக்கிறார். அவர் மறைவுக்கு பிறகு அந்த ஸ்தாபனத்தை நிர்வகிக்கிறார் அவரின் பேரன் தான் நாயகன் ரங்கா. இவை அனைத்தும் ஒரு சுவாரஸ்யமான குரல் பின்னணியுடன் தொடங்குகிறது. 2019-ல் அந்த உணவகத்தை நவீனப்படுத்தி மக்களை கவர்ந்திழுக்க மதுபான கூடத்துடன் கூடிய உணவகமாக மாற்ற நாயகனின் மாமா ஒரு சக்திவாய்ந்த கோல்டன் செக்யூரிட்டி என்ற கும்பலிடம் ஓட்டலை அடமானம் வைத்து கடன் வாங்குகிறார். மதுபான கூடத்துடன் கூடிய உணவகத்தின் வியாபாரம் அவர்கள் எதிர்பார்த்தபடி நடைபெறாததால் வட்டி கட்ட முடியாமல் மேலும் கடன் சுமை அதிகமாகிறது. அதனால் அந்த பார் கோல்டன் செக்யூரிட்டி நிறுவனம் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து தங்களுடைய சட்டவிரோத காரியங்களுக்காக இந்த கும்பல் பயன்படுத்துகிறார்கள். அந்த பாரில் நடைபெறும் சூதாட்டத்தின் மூலம் வரும் பணத்தை கொள்ளையடிக்க 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் திட்டமிடுகிறார்கள். முதலில் கொள்ளையர்கள் அவர்களின் திட்டத்தில் ஜெயிக்கிறார்கள். இந்நிலையில் நாயகன் ரங்கா ஒரு சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட கோல்டன் செக்யூரிட்டி குழுவிற்கும், அடையாளம் தெரியாத கொள்ளை கும்பலுக்கும் இடையே ஒரு பதட்டமான மோதலில் சிக்கிக் கொள்கிறான். அதே நேரத்தில் ஒரு குழந்தையை நாயகன் ரோட்டில் கண்டெடுக்கிறார். அந்த குழந்தை மூலம் நாயகியை சந்திக்கிறார். மறுபக்கம் கோபமடையும் கோல்டன் செக்யூரிட்டி தலைவன் அந்த மர்ம கும்பலில் உள்ள கூட்டாளிகளை வேட்டையாடி கொல்கிறான். அந்த கும்பலின் தலைவன் அடுத்த பெரிய கொள்ளைக்கு தயாராகும் போது நாயகனுக்கு அந்த தலைவன் யார் என்று தெரிய வருகிறது. கொள்ளை கூட்டத்தின் தலைவன் யார்? ரங்கா தன் உணவகத்தை மீட்டெடுத்தாரா? இல்லையா? அது யாருடைய குழந்தை? போன்ற கேள்விகளுக்கு தென் சென்னை பதில் சொல்லும்.
மருத்துவராக நாயகி ரியா, கோல்டன் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தும் நிதின் மேத்தா, நாயகியின் அக்காவாக வரும் சுபா (கதாநாயகன் தாய்), இளங்கோ குமணன் (கதாநாயகன் மாமா), தாரணி (கதாநாயகன் அக்கா), திலீபன் (இன்ஸ்பெக்டர்), வத்ஷன் எம் நட்ராஜன் (எஸ் கே) உட்பட அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாகக் கையாண்டு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
நீருக்கடியில் பயிற்சி செய்வது போன்ற காட்சிகளை தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சரத்குமார்.
சிவ பத்மயன் இசை, ஜென் மார்டின் பின்னணி இசை, இளங்கோவன் சி எம் படத்தொகுப்பு உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப முழு உழைப்பைத் கொடுத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
கதையின் நாயகனாக நடித்து, திரைக்கதை எழுதி தயாரித்து, இயக்கியிருக்கிறார் ரங்கா. முதல் படம் என்பதால் எல்லா பொறுப்புகளில் துல்லியமாக கவனம் செலுத்த முயன்றிருக்கிறார். ஒரு க்ரைம் த்ரில்லரை உணர்வுப்பூர்வமான ஆழத்துடன் கையாளும் போது, திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம், ஆனால் பரபரப்பு குறையவில்லை. நீச்சல் குளத்தில் அவர் எடுக்கும் பயிற்சி அற்புதம், அதற்காக அவர் உழைத்ததற்கு ஒரு கைத்தட்டல் மட்டும் கொடுக்க முடியும். நடிப்பில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.
மொத்தத்தில் ரங்கா ஃபிலிம் கம்பெனி தயாரித்திருக்கும் தென் சென்னை ஆக்ஷன் த்ரில்லர் பார்வையாளர்களை நிச்சயம் ஏமாற்றாது.