துரிதம் சினிமா விமர்சனம் : துரிதம் வேகமும் விவேகமும் கலந்த விறுவிறுப்பான காதல் பயணம் | ரேட்டிங்: 2.5/5

0
496

துரிதம் சினிமா விமர்சனம் : துரிதம் வேகமும் விவேகமும் கலந்த விறுவிறுப்பான காதல் பயணம் | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள்
‘சண்டியர்’ ஜெகன் –  மாரிமுத்து
ஈடன் – வானதி
ஏ.வெங்கடேஷ் – வானதி தந்தை
பாலசரவணன் – கரிகாலன்
பூ ராமு – மாஸ்டர்
ராமச்சந்திரன் (ராம்ஸ்) – வில்லன்
வைஷாலி , ஸ்ரீநிகிலா , ஐஸ்வர்யா – வானதி பிரண்ட்ஸ்
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் – சீனிவாசன்
இசை – நரேஷ்
ஒளிப்பதிவு – வாசன், அன்பு டென்னிஸ்
படத்தொகுப்பு – நாகூரான், சரவணன்
ஆக்சன் – மணி
தயாரிப்பு – திருவருள் ஜெகநாதன்
மக்கள் தொடர்பு – KSK செல்வா

சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநரான நாயகன் ஜெகன், அவரது காரில் தினமும் அலுவலகம் செல்லும் ஐடி நிறுவன ஊழியரான நாயகி ஈடனை ஒரு தலையாக காதலிக்கிறார். ஆனால், நாயகி ஈடன், ஜெகனை கார் ஒட்டுநராக மட்டுமே பார்க்கிறார். எப்படியாவது தன்  காதலை ஈடனிடம் சொல்லி விட வேண்டும் என் ஜெகன் முயலும் போது அது தோல்வியில் முடிகிறது. தீபாவளி நெருங்கும்போது கிராமத்தில் உள்ள கண்டிப்பான தந்தையின் நிர்ப்பந்தத்தினால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு கிளம்ப தயாராகிறார் ஈடன். இந்த நிலையில் ஈடன் ரெயிலை தவற விடுகிறார். எப்படி ஊருக்கு போவது என்று யோசிக்கும் போது, அவரது தோழிகள் மதுரைக்கு புறப்படும் ஜெகனை அழைத்து அவரது பைக்கிலேயே அவளை அனுப்பி வைக்கிறார்கள்.வழியில் பைக் பழுதாகி நிற்கிறது. அப்போது அந்த வழியாக காரை ஓட்டிக்கொண்டு வரும் ராம்ஸிடம் லிப்ட் கேட்கின்றனர். காரை நிறுத்தி ஈடன் ஏறியவுடன் ஜெகனை எமாற்றி ஈடனை கடத்தி விடுகிறார். கடத்தப்பட்ட ஈடனை நாயகன் ஜெகன் கண்டுபிடித்து காப்பாற்றினாரா? இல்லையா? ஜெகன் தன் காதலை ஈடனிடம் சொன்னாரா? இறுதியில்  இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே படத்தின் மீதி கதை.
கால் டாக்ஸி ஓட்டுநராக வரும் ஜெகன் முழுக்க முழுக்க சாலையில் பயணிக்கும் கதைக்கு பலம் சேர்க்க அதற்காக கடினமாக உழைத்து  அமைதியான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார்.
நாயகி ஈடனுக்கு, நாயகனுக்கு ஈடான கனமான கதாபாத்திரம். கதையோடு பயணிக்கும் வேடத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கி கவனம் பெறுகிறார்.
ஜெகனின் நண்பனாக வரும் பால சரவணன் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்து ரசிகர்களை நகைச்சுவை மூலம் கலகலப்பாக வைத்துள்ளார்.
கண்டிப்பான தந்தையாக வரும் வெங்கடேஷ், தோழிகளாக வரும் வைஷாலி, ஸ்ரீ நிகிலா, ஐஸ்வர்யா மற்றும் பூ ராமு, ராம்ஸ் திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.
வாசன் மற்றும் அன்புவின் ஒளிப்பதிவும், நரேஷின் பின்னணி இசையும், நாகூரான், சரவணனின் படத்தொகுப்பும், மணியின் ஆக்சன் காட்சிகள் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு, உழைப்பும் கதையோடு ஒன்ற வைத்து பைக்கில் பயணப்படும்; காதல் கதையின் த்ரில்ங்கை அனுபவபூர்வமாக உணர வைக்கிறது.
முழுக்க முழுக்க நெடுஞ்சாலையில் பயணிக்கும் எதார்த்தக் காதல் கதையை மனதில் நிற்கும் கிளைமாக்ஸ் காட்சியுடன், பைபாஸ் சாலை பயணத்தில் படப்படப்பை ஏற்படுத்தும் திரைக்கதை அமைத்து விறுவிறுப்பை கூட்டி இயக்கியிருக்கிறார் இயக்குனர் சீனிவாசன்.
மொத்தத்தில் திருவருள் ஜெகநாதன் தயாரித்துள்ள துரிதம் வேகமும் விவேகமும் கலந்த விறுவிறுப்பான காதல் பயணம்.