தி ஸ்மைல்மேன் சினிமா விமர்சனம் : தி ஸ்மைல்மேன்; சஸ்பென்ஸ் த்ரில்லர் இந்த சீரியல் கில்லர் | ரேட்டிங்: 2.5/5

0
376

தி ஸ்மைல்மேன் சினிமா விமர்சனம் : தி ஸ்மைல் மேன் – அச்சுறுத்தல் குறைவு | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள் : சரத்குமார், சிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ் மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன், ஜார்ஜ் மரியன், ராஜ்குமார், குமார் நடராஜன், பேபி ஆழியா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:
இயக்கம் : சியாம்-பிரவீன்
தயாரிப்பாளர்கள் : சலில்தாஸ், அனீஷ் ஹரிதாசன், ஆனந்தன் டி
இசை : கவாஸ்கர் அவினாஷ்
கதை : கமலா அல்கெமிஸ்​
ஒளிப்பதிவு : விக்ரம் மோகன்
எடிட்டர் : சான் லோகேஷ்
நிர்வாக தயாரிப்பாளர் : முகேஷ் சர்மா
ஆடை வடிவமைப்பாளர் : எம் முகமது சுபைர்
ஸ்டண்ட் : பிசி ஸ்டண்ட்ஸ், கே கணேஷ் குமார்
ஒலி வடிவமைப்பு : சதீஷ் குமார்
சவுண்ட் மிக்ஸிங் : ஹரிஷ்
விஎஃப்எக்ஸ் : ஃபயர் சூஃபாக்ஸ்
ஒப்பனை : வினோத் சுகுமாரன்
வண்ணக்கலைஞர் : லிஜு பிரபாகர்
டிஐ : ராங் ரேஸ் மீடியாவொர்க்ஸ்
ஸ்டில்ஸ் : வேலு
பப்ளிசிட்டி டிசைன்ஸ் : ரிஷி
பத்திரிக்கை தொடர்பு : சதீஷ், சிவா (ஏய்ம்)
வசனங்கள் : பிரதீப் கே விஜயன்

கோவையில் சி.பி.சி.ஐ.டி அதிகாரி சிதம்பரம் நெடுமாறனுக்கு (சரத்குமார்) கொலை குற்றவாளியை துரத்தி பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது ஏற்படும் விபத்தில், சைக்கோ கில்லர் தி ஸ்மைல் மேனின் தாக்குதல் காரணமாக ‘அல்சைமர்ஸ்’ எனப்படும் மறதி பாதிப்பு உண்டாகிறது. இன்னும் ஒரு வருட காலத்தில் அவரின் மொத்த நினைவுகளும் அழிந்துவிடும் என்ற நிலையில் ஓய்வு பெற்று மருத்துவ சிகிச்சையில் இருக்கும் போது மீண்டும் சீரியல் கில்லர் ஸ்மைல் மேனின் தொடர் கொலைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு கொலையானவரின் முகத்தை மிருகத்தனமாக சிதைத்து, அவர்களை கோரமான புன்னகையுடன் விட்டு செல்கிறார். சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மறைந்த சி.பி.சி.ஐ.டி அதிகாரி வெங்கடேசனின் மகன் (சுரேஷ் மேனன்) புதிதாக சேரும் அரவிந்த் (ஸ்ரீகுமார்), குற்றவாளியை பிடிப்பதற்காக இந்த வழக்கை இதற்கு முன்னர் கையாண்ட சிதம்பரம் நெடுமாறனிடம் உதவி கேட்கிறார். ஏனெனில் அவர் இதுபோன்ற வழக்குகளை வெளிக்கொணர்வதில் நிபுணர் என்று கருதப்படுகிறார்.  ஞாபக மறதியுடன் அவர் தனது புதிய வாழ்க்கை முறைக்கு மாற்றிக் கொள்ள முயற்சிக்கும் போது அவர் எதிர்கொள்ளும் பிரச்சனை என்ன? தொடர் கொலைகளில் ஈடுபடும் அந்த ஸ்மைல் மேன் யார்? அவனின் நோக்கம் என்ன? அரவிந்த்  மற்றும்  நெடுமாறன் சேர்ந்து குற்றவாளி ஸ்மைல் மேனை கண்டறிந்தனரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

பல சைக்கோ கில்லர் படங்கள், கொலையாளியை கண்டுபிடிக்கும் இன்ஸ்பெக்டர் சில பிரச்சனைகளுடன் போராடுவது வழக்கம். அதேபோல் இப்படத்தில் சரத்குமார், சி.பி.சி.ஐ.டி. அதிகாரி சிதம்பரம் நெடுமாறன், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கதாபாத்திரத்தின் குழப்பத்தையும் உறுதியையும் நுணுக்கமாக சித்தரித்து, உடல் மொழியின் மூலம் திடமான நடிப்பை வெளிப்படுத்துகிறார் சரத்குமார். ஆக்ஷன் காட்சிகளில் அவர் மிகவும் கவர்ந்துள்ளார்.

கலையரசன் இருப்பு த்ரில்லருக்கான தாக்கத்தை பெரிய அளவில் ஏற்படுத்த வில்லை.

சி.பி.சி.ஐ.டி. அதிகாரி வெங்கடேஷின் பாத்திரம் சரியாக மெருகூட்டபடாததால் சுரேஷ் மேனனின் இருப்பு வீணாகிறது. அதேபோல் சிஜா ரோஸ் வீணடிக்கப்பட்டு இருக்கிறார்.

ஜார்ஜ் மரியன், செவிலியராக வரும் இனியா, அவருடைய மகளாக வரும் பேபி ஆழியா, ஸ்ரீகுமார், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இசையமைப்பாளர்  கவாஸ்கர் அவினாஷ், ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் உட்பட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் உணர்வுகளை தூண்டி த்ரில்லர் படமாக்கியிருப்பது சற்று நிம்மதி.

இயக்குனர் ஷ்யாம் மற்றும் பிரவீன் இருவரும் யூகிக்கக்கூடிய கதைக்களத்துடன் ஸ்மைல் மேன், கொலையாளியின் நோக்கத்தையும் பின்னணியையும் சரியாக விளக்காமல், திரைக்கதையை உருவாக்குவதில் எந்தவித பரபரப்பும் இல்லாமல் பார்வையாளர்களை சற்றே சலிப்படையச் செய்திருக்கிறது.

மொத்தத்தில் சலில்தாஸ், அனீஷ் ஹரிதாசன், ஆனந்தன் டி இணைந்து தயாரித்துள்ள தி ஸ்மைல் மேன் – அச்சுறுத்தல் குறைவு.