தி லெஜண்ட் விமர்சனம் : தி லெஜண்ட் அருள் சரவணனின் பெரும் முயற்சிக்காக பார்க்கலாம் | ரேட்டிங்: 2.5/5

0
457

தி லெஜண்ட் விமர்சனம் : தி லெஜண்ட் அருள் சரவணனின் பெரும் முயற்சிக்காக பார்க்கலாம் | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள்: அருள் சரவணன், ஊர்வசி ரவுத்தேலா, இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ் ஒளிப்பதிவு: ஆர். வேல்ராஜ், எடிட்டர்: ரூபன் இயக்கியவர்: ஜேடி ஜெர்ரி தயாரிப்பாளர்: அருள் சரவணன்

சர்க்கரை நோய்க்கு நிரந்தரத் தீர்வு தரும் மருந்தைக் கண்டுபிடித்து சர்வதேச அளவில் புகழ் பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சரவணன் என்ற ஒரு விஞ்ஞானியின் கதை தான் லெஜென்ட் படத்தின் கதை

கதை: விஞ்ஞானி சரவணன் (அருள்; சரவணன்) உலகம் முழுவதும் பிரபலமான ஒரு அற்புதமான விஞ்ஞானி. மருத்துவத்துறையில் பல சாதனைகளை படைத்தவர், தனது கண்டுபிடிப்புகளால் நாட்டுக்கு உதவ விரும்புகிறார். சொந்த ஊரில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், அவரைப் போன்ற திறமைசாலிகளை அங்கே உருவாக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவருக்கு அங்கே மிகப் பெரிய குடும்பம் இருக்கிறது. கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரியும் துளசியை (கீதிகா திவாரி) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அவர் தனது கனவுகளை நினைவாக்க முயற்சிக்கும் போது உள்@ர் அரசியல்வாதிகளிடமிருந்து பல தடைகளை எதிர்கொள்கிறார். இந்நிலையில் சரவணனின் (ரோபோ சங்கர்) நண்பன் திருப்பதி குடும்பம் முழுவதும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். திடீரென்று திருப்பதி இறந்து போக, சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் சரவணன். மறுபுறம் விஜே (சுமன்) ஆசியாவிலேயே மிகப்பெரிய இன்சுலின் சப்ளையர். அவர் தனது தனிப்பட்ட ஆய்வகத்தில் அனைவருக்கும் சட்டவிரோத சோதனைகளை நடத்துகிறார். தொடக்கத்தில் விஞ்ஞானி சரவணனின் கண்டுபிடிப்பையே தடுக்க நினைக்கும் மருந்து நிறுவனக் கொள்ளையர்கள் பின்பு அம்மருந்தைக் கைப்பற்றத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் எண்ணம் பலித்ததா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

அறிமுக நாயகனான சரவணன் தனது முதல் படம் என்பதால் சுமாரான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் ஆக்ஷன் காட்சியில் தூள் கிளப்பியுள்ளார். இன்னும் கொஞ்சம் கடினமாக பயிற்சி எடுத்தால், நிச்சயம் அடுத்தடுத்த படங்களில் அருமையான நடிப்பை வெளிப்பபடுத்த முடியும்.

கீதிகா திவாரி, அழகான வில்லியாக ஊர்வசி ரட்டேலா, யாஷிகா ஆனந்த், ராய்லட்சுமி ஆகியோர் லெஜென்ட் நாயகனை உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள்.

விஜயகுமார், பிரபு, விவேக், யோகிபாபு, மன்சூர் அலிகான், வம்சி, சுமன், ரோபோ சங்கர், முனீஸ்காந்த், தேவதர்ஷினி உட்பட ஏராளமான நடிகர்கள் படத்தில் தங்களுடைய பங்களிப்பை முடிந்த அளவுக்கு கொடுத்து இருக்கிறார்கள்.
ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு மற்றும் ஹாரிஸ் ஜெயராஜின் கலர்ஃபுல்லான பாடல்கள் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

கேட்டதை அள்ளிக் கொடுத்த தொழிலதிபர் அருள் சரவணனுக்கு மெடிக்கல் மாஃபியா கதையை சுமாரான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்களான ஜே.டி–ஜெர்ரி

மொத்தத்தில், தி லெஜண்ட் அருள் சரவணனின் பெரும் முயற்சிக்காக பார்க்கலாம்.