தில்லு இருந்தா போராடு திரைப்பட விமர்சனம் : தில்லு இருந்தா போராடு படத்தை சும்மா தில்லோடு பார்க்கலாம்
அறிமுக இயக்குநர் எஸ்.கே.முரளிதரன் இயக்கத்தில், கே.பி.புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.பி.பிரசாத் தயாரிப்பில், வனிதா விஜயகுமார், கார்த்திக்தாஸ், அனுகிருஷ்ணா, யோகி பாபு, ராஜசிம்மன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, தென்னவன், மதுமிதா, கே.பி.சுமன், மீராகிருஷ்ணன், கிரேன் மனோகர். சாம்ஸ், ரிஷா, சேஷூ, ‘லொள்ளு சபா’ மனோகர், ராம்சந்திரன், சக்திவேல், லோகேஷ், பாலா, சாமிராஜ், ஸ்ரீநிக்கி, மதுரா, ஜட்டி ஜகன், ஆர்.பி.பாலா, மன்னாரு.டி.ஆர்.கோபி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘தில்லு இருந்தா போராடு’. விஜய்திருமூலம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜி.சாயீ தர்ஷன் இசையமைத்திருக்கிறார். ஆண்ட்ரோ படத்தொகுப்பு செய்ய, எஸ்.கே.முரளிதரன், ஸ்ரீவிஜய், சதீஷ்காந்த் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். மின்னல் முருகன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர். விஜயமுரளி மற்றும் கிளாமர் சத்யா மக்கள் தொடர்பாளர்களாக பணியாற்றுகிறார்கள். சோழிங்கர் எம்.குப்பன், ஜி.ஹரிபாபு, என்.சாய்பாபா, ஆகியோர் இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கும் இப்படத்திற்கு எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்களாக எஸ்.கே.முரளிதரன் மற்றும் எம்.மணிவண்ணன் பணியாற்றியிருக்கிறார்கள்.
பட்டப் படிப்பு படித்துள்ள ஏழை குடும்பத்தை சேர்ந்த கிராமத்து இளைஞன் பாண்டிக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. அதனால் ஊரில் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி திரிந்து வருகிறான். அப்போது ஊரில் வசதி படைத்த தென்னவனின் மகள் பிரியாவை பார்க்கிறான். முதல் பார்வையிலேயே காதல் வயப்படுகிறான். அவளிடம் தன் காதலை கூறுகிறான். அவள் அவனது காதலை ஏற்க மறுக்கிறாள். அப்படி இருந்தும் அவன் அவளை துரத்தி துரத்தி தன் காதலை சொல்கிறான். பொறுமை காத்த பிரியா ஒரு கட்டத்தில் கோபப்பட்டு இது பற்றி தன் அப்பாவிடம் கூறுகிறாள். அவர் பாண்டியை எச்சரிக்கிறார். பல முறை அவமானம் பட்டும் பாண்டி அவளை காதலிக்குமாறு மீண்டும் மீண்டும் தொல்லை கொடுக்கிறான். ஒரு கட்டத்தில் காவல் நிலையம் வரை பாண்டி செல்ல நேரிட பாண்டி பெற்றோர் வேண்டிய தன் பேரில் தென்னவன் மீண்டும் ஒருமுறை அவனை மன்னிக்கிறார். தன் காதலை ஏற்க மறுக்கும் காதலி பிரியாவை நினைத்து பாண்டி குடிக்கு அடிமையாகிறான். பிரியாவடம் அத்து மீறுகிறான். இதைப் பார்க்கும் அவனது தாய் அவனை வீட்டைவிட்டு விரட்டுகிறாள். அதன் பிறகு அவனது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபடுகிறது. அப்போது அவனுக்கு ‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’யின் உதவியும் கிடைக்கிறது. அதனால் மெல்ல காலூன்றும் வேளையில், பிரியாவின் காதலும் பாண்டிக்கு கிடைக்கிறது. அத்துடன் கூடவே புதுப் பிரச்சினைகளும் பாண்டிக்கு வந்து சேக்கின்றது. அதனால் அவனுக்கு ஏற்படும் விளைவுகளை எப்படி சமாளித்து ஜெயிக்கிறான் என்பது தான் ‘தில்லு இருந்தா போராடு படத்தின் மீதிக்கதை.
கார்த்திக்தாஸ் மற்றும் அனுகிருஷ்ணா இருவரும் போட்டி போட்டு சிறப்பாக நடித்துள்ளனர்.ஆண்களே மிரளும் ‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’ என்ற கதாபாத்திரத்தில் வனிதா விஜயகுமார் சும்மா வலம் வந்து போகிறார்.
யோகி பாபு, ராஜசிம்மன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, தென்னவன், மதுமிதா, கே.பி.சுமன், மீராகிருஷ்ணன், கிரேன் மனோகர். சாம்ஸ், ரிஷா, சேஷூ, ‘லொள்ளு சபா’ மனோகர், ராம்சந்திரன், சக்திவேல், லோகேஷ், பாலா, சாமிராஜ், ஸ்ரீநிக்கி, மதுரா, ஜட்டி ஜகன், ஆர்.பி.பாலா, மன்னாரு.டி.ஆர்.கோபி ஆகியோர் அந்த அந்த கதாபாத்திரங்களாகவே மாறி பல திருப்பங்களை கொண்ட திரைக்கதைக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
விஜய் திருமூலம் ஒளிப்பதிவு, ஜி.சாய்தர்ஷன் இசை, எஸ்.கே.முரளீதரன், ஸ்ரீவிஜய், சதீஸ்காந்த் மூவரின் பாடல்கள், மின்னல் முருகன் சண்டை பயிற்சி, எடிசன், ஜாய் மதி, சாய் கேசவ் மூவரின் நடனம். கிராமத்து காதல் கதைக்கு ஏற்றவாறு இந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்பு கச்சிதமாக இருக்கிறது.
அறிமுக இயக்குநர் எஸ்.கே.முரளிதரன் கல்வி மற்றும் சமூக சேவையின் முக்கியத்துவம் சொல்ல நினைத்து காதலை கையில் எடுத்து சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதையில் பல திருப்பங்களை புகுத்தி சுமாரான படைப்பை தந்துள்ளார்.
மொத்தத்தில் கே.பி.புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.பி.பிரசாத் தயாரித்துள்ள தில்லு இருந்தா போராடு படத்தை சும்மா தில்லோடு பார்க்கலாம்.