தினசரி சினிமா விமர்சனம் : தினசரி பேராசையால் பெரு நஷ்டம் ஏற்படும் என்பதை உணர்த்துவதுடன், பாசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் ஒரு உணர்ச்சிபூர்வமான குடும்ப நாடகம்

0
342

தினசரி சினிமா விமர்சனம் : தினசரி பேராசையால் பெரு நஷ்டம் ஏற்படும் என்பதை உணர்த்துவதுடன், பாசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் ஒரு உணர்ச்சிபூர்வமான குடும்ப நாடகம் | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள் – கதாபாத்திரம்
ஸ்ரீகாந்த் – சக்திவேல்
சிந்தியா லூர்தே – சிவானி
எம்.ஆர்.ராதாரவி – புண்ணியகோடி
எம்.எஸ். பாஸ்கர் – பழனிநாயகன்
மீரா கிருஷ்ணன் – வள்ளியம்மை
வினோதினி – காயத்ரி​
பிரேம்ஜி – பிரேம்
சாம்ஸ் – மேரேஜ் புரோக்கர்
கேஒய்பி சரத் – சரத்
சாந்தினி தமிழரசன் – ஷாலினி

தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு – சிந்தியா புரொடக்ஷன் ஹவுஸ்
தயாரிப்பாளர் – சிந்தியா லூர்தே
இசை – இளையராஜா
இயக்குனர் – ஜி.சங்கர்
2வது யூனிட் இயக்குனர் – தினேஷ் தீனா
ஒளிப்பதிவாளர் – ராஜேஷ் யாதவ்
படத்தொகுப்பு- என்.பி.ஸ்ரீகாந்த்
கலை- ஜான் பிரிட்டோ
சண்டை – ஸ்டன்னர்
நடனம் – தினேஷ் குமார்
பத்திரிக்கை தொடர்பு – குமரேசன், கே.மீடியா

ஓய்வு பெற்ற தமிழாசிரியர் பழனிநாயகன் (எம்.எஸ்.பாஸ்கர்), மனைவி வள்ளியம்மை (மீரா கிருஷ்ணன்) மற்றும் மூத்த மகள் காயத்ரி (வினோதினி) ஆகியோர் ஐடி கம்பெனியில் பணிபுரியும் இளைய மகன் சக்திவேலுக்கு (ஸ்ரீகாந்த்) பெண் பார்க்கிறார்கள். மணப்பெண் தன்னைவிட அதிக ஊதியம் பெறும் வேலையில் இருக்க வேண்டும் என்பது சக்திவேலுவின் நிபந்தனை. பணம் மட்டுமே வாழ்க்கையின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்ற நிபந்தனையை ஏற்க முடியாமல் அவரது திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் பிறந்து, தமிழ்க் கலாச் சாரத்தின் மீது பற்றுகொண்டு, அன்பை எதிர்பார்க்கும் குடும்பத் தலைவியாக மட்டும் இருக்க நினைக்கும் பெண் ஷிவானியை (சிந்தியா) பெண் பார்க்கிறார்கள். அங்கு ஷிவானி திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்ல மாட்டேன் என்று கூறும் போது சக்திவேலுவின் பெற்றோர்கள் மகனின் நிபந்தனைகளை மறைத்து பொய் செல்லி சக்திவேலுவுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். முதலிரவில் அவனுக்கும் மனைவிக்கும் ஒத்து வராமல் போகிறது. தன் குடும்பமே தன்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்த விஷயம் தெரிந்து மனமுடைந்து போகிறார். மேலும், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தனது பேராசையால் தன் பெற்றோர்களுக்கு தெரியாமல் கடன் வாங்கி தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து, அந்தப் முதலீடு ஏமாற்றப்பட, அதோடு அவருக்கு  வேலையும் போக, வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் கடன்காரர்கள் விரட்ட சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

பணம் நம்மை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்ற பேராசையுடன் சக்திவேலாவாக நடிக்கும் ஸ்ரீகாந்த், தனது நடிப்பில் தேவையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறார்.

பாசத்திற்காக ஏங்கும் மனைவி ஷிவானியாக சிந்தியா லூர்தே நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார்.

எம்.எஸ். பாஸ்கர் (பழனிநாயகன்), மீரா கிருஷ்ணன் (வள்ளியம்மை), வினோதினி (காயத்ரி), குடும்ப கதையின் ஒரு முக்கிய பகுதியாக தேவையான நடிப்பை வழங்கி அதை வலுப்படுத்தியுள்ளனர்.

மேலும், எம்.ஆர்.ராதாரவி (புண்ணியகோடி), பிரேம்ஜி (பிரேம்), சாம்ஸ் (திருமண தரகர்), கே.ஒய்.பி. சரத் (சரத்), சாந்தினி தமிழரசன் (ஷாலினி) உள்ளிட்ட அனைத்து துணை கதாபாத்திரங்களும் கதைக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் கூடுதல் பலத்தை அளித்துள்ளன.

ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ், படத்தொகுப்பு – என்.பி. ஸ்ரீகாந்த், கலை – ஜான் பிரிட்டோ, சண்டை – ஸ்டன்னர், நடனம் – தினேஷ் குமார், மற்றும் அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்பும் பாராட்டத்தக்கது.

பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை பாசத்துடன் வாழ முடியும் என்பதை இயக்குனர் ஜி. ஷங்கர் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்த முயற்சித்துள்ளார். இருப்பினும், ஒரு குடும்பக் கதையை நகைச்சுவையான மற்றும் பரபரப்பான ஸ்கிரிப்ட்டில் சொன்னால், அது பார்வையாளர்களை பெருமளவில் ஈர்த்திருக்கும்.

மொத்தத்தில் சிந்தியா புரொடக்சன் ஹவுஸ் சார்பில் சிந்தியா லூர்தே தயாரித்திருக்கும் தினசரி பேராசையால் பெரு நஷ்டம் ஏற்படும் என்பதை உணர்த்துவதுடன், பாசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் ஒரு உணர்ச்சிபூர்வமான குடும்ப நாடகம்.