தலைமைச் செயலகம் வெப் தொடர் விமர்சனம் : தலைமைச் செயலகம் அதிகார ஆளுமை, பேராசை, வஞ்சகம் அரசியலை அழுத்தமாக பேசும் பொலிட்டிக்கல் தொடராக வெளிவந்திருக்கும் இத்தொடரை அனைவரும் நிச்சயம் பார்க்கலாம்

0
267

தலைமைச் செயலகம் வெப் தொடர் விமர்சனம் : தலைமைச் செயலகம் அதிகார ஆளுமை, பேராசை, வஞ்சகம் அரசியலை அழுத்தமாக பேசும் பொலிட்டிக்கல் தொடராக வெளிவந்திருக்கும் இத்தொடரை அனைவரும் நிச்சயம் பார்க்கலாம்

தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராதிகா ​சரத்குமாரின் ராடன் மீடியா வொர்க்ஸ் தயாரித்துள்ள வெப் தொடர், ‘தலைமைச் செயலகம்’. கிஷோர், ஷ்ரேயா ரெட்டி , பரத், ரம்யா நம்பேசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா பிளாக், சித்தார்த் விபின், ஒய்ஜிஎம், சந்தான பாரதி, கவிதா பாரதி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
எழுதி இயக்கியவர் : ஜி.வசந்தபாலன்
தயாரிப்பாளர் : ராதிகா சரத்குமார், ஆர்.சரத்குமார்
தயாரிப்பு : ராடான் மீடியாவொர்க்ஸ் இந்தியா லிமிடெட்
ஒளிப்பதிவு : வைட் ஆங்கிள் ரவிசங்கர்
இசை: ஜிப்ரான்
கூடுதல் பின்னணி ஸ்கோர்: சைமன் கே கிங்
கலை இயக்குனர்: வி.சசிகுமார்
ஆக்ஷன் : டான் அசோக்
படத்தொகுப்பு : ரவிக்குமார் எம்
ஒலி வடிவமைப்பு : ராஜேஷ் சசீந்திரன்
மிக்சிங் : கவி அருண்
DI: Mangopost
VFX and CG: Shade69 Studios
நிர்வாக தயாரிப்பாளர்கள்- பூஜா சரத்குமார், கிருஷ்ணா சந்தர் இளங்கோ
லைன் புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ் – பிரபாஹர் ஜே
மக்கள் தொடர்பு AIM

தமிழக அரசியல் பின்னணியில், எட்டு எபிசோடுகளாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் மே 17-ம் தேதி முதல், ஜீ5 தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக லட்சியம், துரோகம், போராட்டம் மிகுந்த பெண்ணின் அதிகார வேட்கையின் கதையைச் சொல்கிறது. தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், முதல்வர் அருணாசலம் (கிஷோர்) 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார். சாட்சிகள் அனைத்தும் முதல்வருக்கு எதிராக உள்ள நிலையில், தீர்ப்பும் அவருக்கு எதிராக தான் வர வாய்ப்பிருப்பதாக அவரைச் சுற்றியுள்ளவர்கள் அறிகின்றனர். இந்தச் சூழலில் அவரைச் சுற்றியுள்ளவர்கள் முதல்வர் நாற்காலியை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கின்றனர். கிஷோரின் மூத்த மகளும் அமைச்சருமான ரம்யா நம்பீசன் அப்பாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முயற்சிகள் செய்தாலும், முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். அதே போல இரண்டாவது மருமகனான நிரூப் நந்தகுமாரும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். இந்த சூழலில், கிஷோரின் நெருங்கிய தோழியும் கட்சி ஆலோசகருமான கொற்றவையும் (ஷ்ரேயா ரெட்டி) முதல்வரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முயற்சிகள் செய்து வந்த நிலையில், அவரும் அப்பதவிக்கு குறி வைக்கிறார். இவர்கள் அனைவரும் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுவதோடு அதற்காகத்  தீவிரமாக இயங்க ஆரம்பிக்கிறார்கள். இதற்கிடையில், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான சுரங்க கிராமத்தில், அரசியல் பிரமுகர்கள் உட்பட பல கொலைகளை செய்து தப்பி வந்த துர்காவை தேடி, சிபிஐ போலீஸ் அலைந்து வந்த நிலையில்,  சிபிஐ அதிகாரி நவாஸ் கான் (ஆதித்யா மேனன்), இந்த பழமையான கொலை வழக்கை ஆராய்கிறார். அதே வேளையில், பரபரப்பான சென்னையில், புறநகர்ப் பகுதியில் கிடைக்கும் துண்டிக்கப்பட்ட கை மற்றும் தலையினை குறித்து டிஜிபி மணிகண்டன் (பரத்) தீவிர விசாரணையைத் தொடங்குகிறார். இந்த கதை விரிய விரிய வேறுபட்ட பல நிகழ்வுகளை ஒன்றிணைகின்றது, காலத்தால் மறைக்கப்பட்ட மறந்துபோன உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. ஜார்கண்ட் மாநிலத்தில் திடுக்கிடும் வகையில் பல கொலைகளை செய்து வந்த துர்கா யார்? அவருக்கு தமிழக அரசியலில் தொடர்பு உள்ளதா? ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் முதல்வருக்கு தண்டனை வழங்கப்பட்டதா.? இல்லையா.? அடுத்த முதல்வராக யார்? போன்ற இடைவிடாத பல கேள்விகளுக்கு மே 17, ஆம் தேதி ஜீ5 இணையத்தில் 8 எபிசோடுகளாக வெளியாகி இருக்கும் தலைமைச் செயலகம் வலைதளத் தொடர் விடை சொல்லும்.

கதையின் முக்கிய முதல்வர் கதாபாத்திரத்தில் கிஷோர் அசத்தலான நடிப்பின் மூலம் தான் ஒரு மிகச்சிறந்த குணச்சித்திர நடிகன் என்பதை உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பு என ஒவ்வொரு ப்ரேமிலும், காண முடிகிறது. அந்த அளவுக்கு கதையோடு ஒன்றி அதற்கான உழைப்பை வழங்கி உள்ளார்.

அடுத்தபடியாக கதையின் முக்கிய சவாலான கொற்றவை கதாபாத்திரத்தில் ஷ்ரேயா ரெட்டி நேர்த்தியான நடிப்பை பார்வையாலேயே வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் தூள் கிளப்பியுள்ளார்.

போலீஸ் அதிகாரியாக நடித்த பரத், சிபிஐ அதிகாரியாக வரும் ஆதித்யா மேனன், ரம்யா நம்பேசன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா பிளாக், சித்தார்த் விபின், ஒய்ஜிஎம், சந்தான பாரதி, கவிதா பாரதி ஆகியோர் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி விறுவிறுப்பான அரசியல் நாடகத்துக்கு கூடுல் பலம் சேர்த்துள்ளனர்.

ஒளிப்பதிவு வைட் ஆங்கிள் ரவிசங்கர், இசை ஜிப்ரான், கூடுதல் பின்னணி ஸ்கோர் சைமன் கே கிங், கலை இயக்குனர் வி.சசிகுமார், ஆக்ஷன் டான் அசோக், படத்தொகுப்பு ரவிக்குமார் எம், ஒலி வடிவமைப்பு ராஜேஷ் சசீந்திரன், மிக்சிங் கவி அருண், DI: Mangopost, VFX and CG: Shade69 Studios, உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் ஒட்டு மொத்த உழைப்பு விறுவிறுப்பான தொடருக்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.

தமிழ்நாட்டின் அரசியல் களப் பின்னணியில், முழுமையாக அரசியல் கட்சிகளில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றியும், நாற்காலி மற்றும் அந்த நாற்காலியை ஆக்கிரமிப்பதற்கான அனைத்து சூழ்ச்சிகளுடன், கூர்மையான அரசியலைப் பேசும் அழுத்தமான உரையாடளுடன் திரைக்கதை அமைத்து எட்டு எபிசோடுகளாக சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.

மொத்தத்தில் ராடான் மீடியாவொர்க்ஸ் இந்தியா லிமிடெட் சார்பில் ராதிகா சரத்குமார், ஆர்.சரத்குமார் தயரித்து எட்டு எபிசோடுகளாக ஜீ5 தளத்தில் வெளியாகி இருக்கும் தலைமைச் செயலகம் அதிகார ஆளுமை, பேராசை, வஞ்சகம் அரசியலை அழுத்தமாக பேசும் பொலிட்டிக்கல் தொடராக வெளிவந்திருக்கும் இத்தொடரை அனைவரும் நிச்சயம் பார்க்கலாம்.