தண்டேல் சினிமா விமர்சனம் : தண்டேல் இதயத்தைத் தொடும் உணர்ச்சிபூர்வமான காதல் கதை | ரேட்டிங்: 3/5
நடிகர்கள் :
நாக சைதன்யா – ராஜு
சாய் பல்லவி – சத்யா
பிரகாஷ் பெலவாடி – பாகிஸ்தான் சிறை அதிகாரி
திவ்யா பிள்ளை – சந்திராக்கா
ராவ் ரமேஷ்
கருணாகரன்
‘ஆடுகளம்’ நரேன்
பப்லு பிருத்விராஜ்
மைம் கோபி
கல்ப லதா
கல்யாணி நடராஜன்
மகேஷ் அச்சந்தா
கிஷோர் ராஜு வசிஷ்டா
தொழில்நுட்ப கலைஞர்கள் :
எழுத்து – இயக்கம் : சந்து மொண்டேட்டி
ஒளிப்பதிவு : ஷ்யாம் தத்
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
படத்தொகுப்பு : நவீன் நூலி
கதை : கார்த்திக் தீடா
தயாரிப்பு நிறுவனம் : கீதா ஆர்ட்ஸ்
வழங்குபவர்: அல்லு அரவிந்த்
தயாரிப்பாளர்: பன்னி வாஸ்
பத்திரிக்கை தொடர்பு – யுவராஜ்
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோர மீன்பிடி கிராமத்தில் 9 மாதங்கள் கடலில் மீன்பிடி தொழில், 3 மாதங்கள் நிலத்தில் குடும்பத்துடன் வாழ்வு என தங்களது வாழ்க்கையை நடத்துகிறார்கள் அந்த மக்கள்.அங்குள்ள மீனவர்களுடன் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கடலை நம்பியுள்ள ராஜு (நாக சைதன்யா), அவரது தந்தையை இழந்த பிறகு அவரது குடும்பத்திற்கு ஒரே ஆதரவு. தனது தாயை இழந்த கிராமத்துப் பெண் சத்யா (சாய் பல்லவி), தந்தையின் (பப்லு பிருத்விராஜ்) பராமரிப்பில் வளர்கிறார். ராஜு கடலுடனான அவரது ஆழமான தொடர்போடு, சத்யாவை ஆழமாக மற்றும் பிரிக்க முடியாத பிணைப்போடு காதலிக்கிறார். ஆனால் ராஜு தனது மக்களிடையே தண்டேல் (தலைவர்) என்ற பட்டத்தால் கௌரவிக்கப்படும் போது அவர்களின் வாழ்க்கை வியத்தகு திருப்பத்தை ஏற்படுத்துகிறது. கடலுக்கு சென்று மரணமடையும் சில மீனவர்களை பார்த்த பின், சத்யாவுக்கு பெரிய பயமாக மாறுகிறது. அவரது பாதுகாப்பிற்காக அக்கறை கொண்ட சத்யா, மீன்பிடித்தலை என்றென்றும் கைவிடுமாறு அவரை வலியுறுத்தி அவரிடம் சத்தியம் வாங்குகிறார். இருப்பினும், ஒரு மீனவராக தனது கடமையை கைவிடுவது தவறு என்று ராஜு நம்புகிறார். அவரது எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், ராஜு கடலுக்குச் செல்கிறார். தனது ஒரு பயணத்தின் போது, அவர்கள் அனைவரும் புயலில் சிக்கி தத்தளிக்கும் போது எதிர்பாராதவிதமாக ராஜுவும் அவரது குழுவினரும் தெரியாமல் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைந்து கைது செய்யப்பட்டு கராச்சி மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்கள். துன்பங்களை எதிர்கொண்டு ராஜு ஒரு உண்மையான தண்டேலாக, 22 மீனவர்களின் ஒருமித்த தலைவராக அவர்களுக்கு என்ன செய்தார்? பாகிஸ்தானில் உள்ள கராச்சி சிறையில் 22 மீனவர்களுக்கு என்ன நடக்கிறது, அவர்கள் எப்போது இந்தியாவுக்கு திரும்புவார்கள்? இந்த விஷயம் அறிந்த சத்யா கராச்சி சிறையில் இருக்கும் தன் கிராமத்து மீனவ மக்களை காப்பாற்ற என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாக சைதன்யா தனது ராஜு கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை திறம்பட வெளிப்படுத்துகிறார், காதல், ஆக்ஷன் அல்லது உணர்ச்சிகரமான தருணங்கள் என எதுவாக இருந்தாலும், அவர் நம்பத்தகுந்த வகையில் அவரது நடிப்பின் கடின உழைப்பு பிரதிபலிக்கிறது.
சாய் பல்லவி ஒரு அற்புதமான நடிப்பை ஒவ்வொரு பிரேமிலும் சிரமமின்றி வழங்கி சத்யா கதாபாத்திரத்தில் உயிர்ப்பிக்கிறார். மேலும் உணர்ச்சி மற்றும் நடனக் காட்சிகளில், அவரது ரசிகர்களை கவர்கிறார். நாக சைதன்யாவுடனான அவரது கெமிஸ்ட்ரி கதை சொல்லலை மேலும் மேம்படுத்துகிறது.
கருணாகரன், பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு பிருத்விராஜ், மைம் கோபி, கல்ப லதா, கல்யாணி நடராஜன், மகேஷ் அச்சந்தா, மற்றும் கிஷோர் ராஜு வசிஷ்டா உள்ளிட்ட அனைத்து துணை கதாபாத்திரங்கள் தண்டேலின் உலகம் உண்மையானதாக உணரப்படுவதை உறுதிசெய்து, திடமான நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு உணர்ச்சி ஆழத்தை சேர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் ஷியாம் தத்தின் காட்சி கோணங்கள் கிராமத்தின் அரவணைப்பையும், கடலின் பரந்த தன்மையையும் காட்சிகளின் தீவிரத்தையும் அழகாகப் படம் பிடித்துக், படத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன, அதே நேரத்தில் சக்திவாய்ந்த பின்னணி இசையுடன் படத்தை உயர்த்துகிறார்.
படத் தொகுப்பாளர் நவீன் நூலியின் எடிட்டிங் மென்மையான வேகத்தை உறுதி செய்கிறது.
சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள நடனக் காட்சிகள் மற்றும் அதிரடி காட்சிகள் கூடுதல் வலு சேர்த்துள்ளது.
நவம்பர் 2018 இல், ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவட்டங்களைச் சேர்ந்த 22 மீனவர்கள் குஜராத் அருகே பாகிஸ்தான் கடலோர காவல்படையினரால் வெளிநாட்டு நீர்நிலைகளில் சட்டவிரோதமாக நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இராஜதந்திர ஆலோசனைகள் காரணமாக அவர்கள் கிட்டத்தட்ட 13 மாதங்கள் கராச்சி சிறையில் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களது குடும்பங்கள் உணர்ச்சி ரீதியாகவும் நிதி ரீதியாகவும் கடினமான காலங்களைச் சந்தித்தனர். ஜனவரி 2020 இல் இறுதித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அவர்களில் 20 பேர் விடுவிக்கப்பட்டு பாதுகாப்பாக வீடு திரும்பினர்.
இந்த உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு படத்தின் முதல் பாதி ராஜு மற்றும் சத்யபாமாவின் காதல் கதையைச் சுற்றி வந்து, இரண்டாம் பாதி பாகிஸ்தானுக்கு நகரும்போது கதை இன்னும் இறுக்கமாக இருந்திருக்கக்கூடிய தருணங்கள் இருந்தாலும், அந்த நிலையற்ற வெளிநாட்டு நிலத்தில் நிஜ வாழ்க்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை பெரிதாக ஆராய்வதில் தண்டேல் ஆர்வம் காட்டவில்லை, மாறாக ராஜுவும் சத்யாவும் பகிர்ந்து கொள்ளும் ஏக்கம், அன்பு, இதில் மட்டுமே கவனம் செலுத்தி திரைக்கதை அமைத்த இயக்குனர் சந்து மொண்டேட்டி நம்மை ஒரு நெருக்கமான இடத்திற்கு அழைத்துச் செல்வதில் முழுமையாக வெற்றி பெறவில்லை. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மாறுபாடு இருந்தால் பயணத்தை இன்னும் ஆழமாக்கியிருக்கலாம்.
மொத்தத்தில் கீதா ஆர்ட்ஸ் தயாரித்துள்ள தண்டேல் இதயத்தைத் தொடும் உணர்ச்சிபூர்வமான காதல் கதை.