டைனோசர்ஸ் (Die No Sirs) விமர்சனம் : ‘டைனோசர்ஸ்’ பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு புது அனுபவம் தரும் | ரேட்டிங்: 4/5

0
637

டைனோசர்ஸ் (Die No Sirs) விமர்சனம் : ‘டைனோசர்ஸ்’ பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு புது அனுபவம் தரும் | ரேட்டிங்: 4/5

கேலக்சி பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிக்க,  எம்.ஆர்.மாதவன் இயக்கி இருக்கும் படம் டை நோ சார்ஸ் ( Die No Sirs    ).
நடிகர்கள்
உதய் கார்த்திக் – மண்ணு
ரிஷி – தனா
மாரா – துரை
சாய் பிரியா தேவா – தீபா
மானேக்ஷா – சாளையார்
கவின் ஜெய்பாபு – கிளியப்பன்
ஜானகி – சின்ன குழந்தை
அருண் – துலுக்கானம்தொழில்நுட்ப வல்லுநர்கள்
இயக்குனர் – எம் ஆர் மாதவன்
ஸ்ரீனிவாஸ் சம்பந்தம் தயாரித்தவை (கேலக்ஸி பிக்சர்ஸ்)
ரோமியோ பிக்சர்ஸ் மூலம் தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு
இசை – போபோ சசி
ஓளிப்பதிவு – ஜோன்ஸ் வி ஆனந்த்
எடிட்டர் – ஆர் கலைவாணன்
ஸ்டண்ட் – ‘ஸ்டன்னர்’ சாம்
பாடல் வரிகள் – எம் ஆர் மாதவன்
கலை இயக்குனர் – ஆர் வலம்புரிநாதன்
ஒலி வடிவமைப்பு – ஏ.எம்.செந்தமிழன் ஃ எஸ்.சதீஷ்குமார்
மிக்ஸ்ஸிங் – ஏஎம் ரஹ்மத்துல்லா (ஏஎச் ஸ்டுடியோ)
ஒப்பனை – டி தசரதன் (தாஸ்)
இணை இயக்குனர் – மாறன் கே வாசன்
இணை ஒளிப்பதிவாளர் – எம் நந்தகுமார்
நடனம் – தஸ்தா
தயாரிப்பு நிர்வாகி – சஞ்சய் கிருஷ்ணன்
நிர்வாகத் தயாரிப்பாளர் – கோகுல் ராம்
காஸ்ட்யூம் டிசைனர் – ராதிகா சிவா
காஸ்ட்யூம்ஸ் – கடலூர் எம்.ரமேஷ்
ஸ்டில்ஸ் – தேனி சீனு ஃ சுதாகர்
புரமோஷன் ஸ்டில்ஸ் – டி மனேக்ஷா
ஒலி வடிவமைப்பு ஸ்டுடியோ – கிரியேட்டிவ் பம்பா ஸ்டுடியோ
டப்பிங் – ஏவிகே ஸ்டுடியோஸ்
Vfx   – ரேமேக்ஸ் ஸ்டுடியோ
DI – Accel Media
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
எண்ணூர் பெல்ட்டில் வழக்கம் போல் லோக்கல் தமிழும் மற்றும் லந்து செய்து அலையும் காக்கா நகர் ஏரியா இளைஞர்கள் புத்திசாலி மற்றும் வலிமையான ரவுடியான சாலையார் (மானேக்ஷா) கேங்குக்காக வேலை செய்யும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். இவர்களில் சேட்டைகள், அட்டாகசங்கள் செய்வதுடன் நிறுத்திக் கொண்டு ‘கத்தி பிடிக்காதீங்க’ வன்முறை வேண்டாம் என சொல்லி சம்பவக் காரர்களிடம் இருந்து கவனமாக தப்பி  வாழ்ந்து வருகிறார் ‘டை னோ சர்ஸ்’ ( (‘Die No Sirs’) எனும் வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த மண்ணு என்கிற ‘ஆற்றல் மண்’ (உதய் கார்த்திக்). தனக்கு வரன் கேட்டு செல்லும் போது அங்கு மணப்பெண் தன் நண்பன் துரை (மாரா) பார்ப்பதை அறிந்து நண்பனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கிறார் மண்ணுவின் அண்ணன் தனா (ரிஷி). சாளையார் போட்டியாக கிளியப்பன் (பாபு) கும்பல் உள்ளது. சாளையார் அனுப்பிய எட்டு பேர் கொண்ட கும்பல் கிளியப்பனின்  மைத்துனர் மனோவை கொல்வதால் பகை அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில் சாளையார் கிளியப்பனின் மைத்துனரை கொன்ற டீமை போலீசிடம் ஒப்படைக்கிறார். அவர்களை ஜாமீனில் எடுப்பதாக கூறுகிறார்.  நட்புக்கு எடுத்துக்காட்டாக  அந்த கும்பலில் துரைக்கு பதிலாக ஜெயிலுக்கு மண்ணுவின் அண்ணன் தனா (ரிஷி) போகிறார். இந்த சமரசத்திற்காக சாளையார், கிளியப்பனிடம் இருந்து பணம் வசூலிக்க தனது ஆட்களை அனுப்புகிறார். அங்கு வரும் நபர்களில் மனோவைக் கொன்ற எட்டு பேரில் ஒருவரான துரையும் (மாரா) உடன் இருக்கிறார்.  துரையுடன் மண்ணுவும் உடன் வருகிறார், ஆனால் அந்த வீட்டிற்குள் செல்லாமல் வண்டியிலேயே இருக்கிறார்.  துரையின் துரதிர்ஷ்டவசமாக, கிளியப்பனின் ஆள் ஒருவர் (தாரா சீலன்) துரையை பார்த்து விடுகிறான். கிளியப்பனிடம் மனோவைக் கொன்ற ஒருவன் இந்த கூட்டத்தில் இருப்பதை பற்றி முழுவிவரத்தை கூற முதலில் கிளியப்பன் நம்ப மறுக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த சந்தேகத்தை தெளிவு படுத்த அவன் ஆட்களிடம் ஒரு யோசனையை கூறுகிறார். அதன் படி செயல்படும் போது துரைக்கு விஷயம் தெரியவருகிறது. ஆனால் அதை சாமாத்தியமாக சாளையாரின் கோஷ்டி சமாளிக்கிறது. கிளியப்பனும் அது உண்மை என்று நம்பும்போது, மண்ணு வீட்டிற்குள் வந்து துரை அண்ணா என்று குரல் கொடுக்கிறார். இதனை அடுத்து நடப்பது என்ன? அதை தொடர்ந்து மண்ணு சந்திக்கும் விளைவுகள் என்ன? வன்முறை வேண்டாம் என சொல்லும் மண்ணு அவரது கொள்கையில் ஜெயித்தாரா? அல்லது அவரும் ரவுடியின் சூழ்ச்சியில் விழுந்தாரா? என்பதே மீதிக்கதை.
‘கத்தி பிடிக்காதீங்க’ வன்முறை வேண்டாம் என்று இருந்துக்கொண்டு அதோ நேரத்தில் லந்து செய்தபடி, உஷாராக வலம் வரும் இளைஞன் மண்ணுவாக உதய் கார்த்திக் ஒரு கட்டத்தில் முழு கதையையும் தாங்கி செல்கிறார். நேர்த்தியான நடிப்பை தந்த கார்த்திக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது.
கிளியப்பனாக கவின் ஜெய்பாபு, தாதா சாளையராக மானேக்ஷா, துரையாக மாறா, திரைக்கதை விறுவிறுப்பாக நகர இவர்கள் மூவரும் எதார்த்தமான நடிப்பை வழங்கி கவனம் பெற்றுள்ளனர்.
ரிஷி ரித்விக், சாய் ப்ரியா தேவா, ஸ்ரீனி, கவின் ஜெய்பாபு, இயக்குனர் ரமணா, ஜானகி சுரேஷ், யாமினி சந்தர், தாராசீலன், டிஎன் அருண் பாலாஜி என அனைத்து நடிகர்கள் ஸ்கிரிப்ட்டிற்கு உயிர் கொடுத்துள்ளனர்.
போபோ சசி  இசை, பின்னணி இசை, ஜோன்ஸ் வி ஆனந்த் ஓளிப்பதிவு, ஆர்.லைவாணன் எடிட்டர், ‘ஸ்டன்னர்’ சாம் ஸ்டண்ட், ஆர்.வலம்புரிநாதன் கலை, ஏ.எம்.செந்தமிழன் மற்றும் எஸ்.சதீஷ்குமார் ஒலி வடிவமைப்பு என அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பு ஒரு சிறப்பான தாதா கதையை வித்தியாசமான படைப்பாக உருவாக இவர்களது பங்களிப்பு பெரும் பங்கு வகிக்கிறது.
வழக்கமான வடசென்னை தாதா கதை. ஆனால் வடசென்னை, மெட்ராஸ் படங்கள் போல் இல்லாமல் வித்தியாசமான ஒன்றை முன்வைக்க இயக்குனர் எம்.ஆர்.மாதவன் ஆர்வம் காட்டியுள்ளார். படத்துக்கு மிகப்பெரிய பக்க பலமாய் விளங்குவது அப்ளாஸ் அள்ளும் வசனங்கள்! நகைச்சுவையை சீரான இடைவெளியில் புகுத்தி, சமூகத்தின் ஏழ்மையான பிரிவைச் சேர்ந்த பாதிக்கப்படக்கூடிய இளைஞர்கள் வஞ்சகர்களின் வலையில் சிக்கி சீரழிந்து போகும் இவர்களின் வாழ்வில் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் ஒரு சில இளைஞர்களின் வாழ்க்கை எண்ணங்களை லைம்லைட் உரையாடல்கள் மூலம் நுட்பமாக காட்டி பார்வையாளர்களை ஒன்ற வைக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில் கேலக்சி பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரித்துள்ள ‘டைனோசர்ஸ்’ பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு புது அனுபவம் தரும்.