டேக் டைவர்ஷன் விமர்சனம்: டேக் டைவர்ஷன் பயண அனுபவத்தை இன்னும் சுவராஸ்யமாக கொடுத்திருக்கலாம்

0
177

டேக் டைவர்ஷன் விமர்சனம்: டேக் டைவர்ஷன் பயண அனுபவத்தை இன்னும் சுவராஸ்யமாக கொடுத்திருக்கலாம்

சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் மற்றும் நண்பர்களுடன் இணைந்து  தயாரிக்க சிவக்குமார், பாடினி குமார், காயத்ரி, ஜான் விஜய்,  ராம்ஸ், விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோர் நடித்துள்ளனர். டேக் டைவர்ஷன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவானி செந்தில்.இசை – ஜோஸ் பிராங்க்ளின், ஒளிப்பதிவு – ஈஸ்வரன் தங்கவேல், படத்தொகுப்பு – விது ஜீவா, நடனம்-சாண்டி,பாடல்கள்-மோகன் ராஜன், பிஆர்ஒ-சக்தி சரவணன்.

முப்பது வயது வரை திருமணத்திற்காக பெண் தேடும் அண்ணனிடம் பல குறைகளை சொல்லி நிராகரித்து வருகிறார் தம்பி சிவக்குமார். இறுதியில் அண்ணன் வற்புறுத்தலின் பேரில் முதலில் பார்த்த காயத்ரியை சிவக்குமார் சம்மதிக்க வைத்து பாண்டிச்சேரியில் நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்கிறார்.இந்த நேரத்தில் வேலை பறி போகும் சூழலில், மானேஜர்  ஜான் விஜய் பாடினி குமார் என்ற பெண்ணை அழைத்து வந்தால் வேலையை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று கண்டிஷன் போடுகிறார். அதனால் சிவக்குமார் பாடினி குமாரை தேடிச் செல்ல, தாதா ராம்ஸ்சிடம் கடன் பட்டிருக்கும் அந்தப் பெண்ணை தந்திரமாக மீட்டு காரில் பாண்டிச்சேரிக்கு நண்பரின் உதவியுடன் அழைத்துச் செல்கிறார். வழியில் பாடினி குமாரின் காதலன், காயத்ரி என்று ஒருவர் பின் ஒருவராக பயணத்தில் சேர்ந்து கொள்ள, இவர்கள் அனைவரும் பாண்டிச்சேரி சென்றார்களா? சிவக்குமாருக்கு நிச்சயம் நடந்ததா? பாடினி குமார் கடனிலிருந்து மீண்டாரா? தாதா ராம்ஸ், மேனேஜர் ஜான் விஜய் அனைவரையும் என்ன செய்தனர்? என்பதே படத்தின் மீதிக்கதை.

சிவக்குமார், காயத்ரி, ராம்ஸ், விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் மற்றும் பலர் முடிந்த வரை தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

பாடினி குமார் மற்றும் ஜான் விஜய் இவர்கள் இருவரும் மிகவும் செயற்கைத் தனமான நடிப்பை வெளிப்படுயிருக்கிறார்கள்.

இசை – ஜோஸ் பிராங்க்ளின், ஒளிப்பதிவு – ஈஸ்வரன் தங்கவேல், படத்தொகுப்பு – விது ஜீவா, நடனம்-சாண்டி என்று அனைவருமே தங்களது உழைப்பை கொடுத்து சிறப்பாக செய்துள்ளனர்.

திருமண கனவுகளோடு இருக்கும் இளைஞனின் வாழ்க்கையில் ஒரே நாளில் நடக்கும் கதையில் சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு அழைத்து வரும் பெண்ணிற்கு ஏற்பட்ட சிக்கல்கள், அதை சரி செய்ய எடுக்கும் முயற்சிகள் அதனால் திருமணம் நிற்கும் சூழ்நிலையிலும் அந்தப் பெண்ணிற்கு உதவி செய்து கடனிலிருந்து காப்பாற்றுவதாக திரைக்கதையமைத்து இயக்கியிருக்கிறார் சிவானி செந்தில். பயணத்தை மையமாக வைத்து இயக்கியிருக்கும் இப்படத்தில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து இயக்கியிருந்தால் பேசப்பட்டிருக்கும். இருந்தாலும் இயக்குனரின்  முயற்சிக்கும், உழைப்பிற்கும் பாராட்டுக்கள்.

மொத்தத்தில் சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் மற்றும் நண்பர்களுடன் இணைந்து  தயாரித்திருக்கும் டேக் டைவர்ஷன் பயண அனுபவத்தை இன்னும் சுவராஸ்யமாக கொடுத்திருக்கலாம்.