டெவில் சினிமா விமர்சனம் : டெவில் பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமர வைக்கும் திகில் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் | ரேட்டிங்: 3/5
நடிகர்கள் :
அலெக்ஸாக விதார்த்
ரோஷனாக திரிகன்
ஹேமாவாக பூர்ணா
சோபியாவாக சுபாஸ்ரீ
தொழில்நுட்ப கலைஞர்கள் :
பேனர் – மாருதி பிலிம்ஸ் மற்றும் எச் பிக்சர்ஸ்
தயாரிப்பு – ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி
இணை தயாரிப்பாளர் – பி.ஞானசேகர்
எழுதி இயக்கியவர் – ஆதித்யா
இசை – மிஸ்கின்
புகைப்பட இயக்குனர் – கார்த்திக் முத்துக்குமார்
எடிட்டர் – இளையராஜா.எஸ்
கலை இயக்குனர் – ஆண்டனி மரியா கெர்லி
பாடல் வரிகள் – மிஷ்கின்
ஒலி கலவை – தபஸ் நாயக்
ஒலி வடிவமைப்பு – எஸ்.அழகிய கூத்தன்
இணை இயக்குனர் – ஆர்.பாலச்சந்தர்
வண்ணக்கலைஞர் – ராஜராஜன் கோபால்
ஸ்டண்ட் – ராம்குமார்
ஆடை வடிவமைப்பு – ஷைமா அஸ்லம்
ஸ்டில்ஸ் – அபிஷேக் ராஜ்
விளம்பர வடிவமைப்பு – கனதாசன் டி.கே.டி
ஏகுஓ – யுசுவுகுஓ ஸ்டுடியோ
ஏகுஓ மேற்பார்வையாளர் – டி.மாதவன்
தயாரிப்பு நிர்வாகி – எஸ்.வெங்கடேசன்
மக்கள் தொடர்பு – சதீஷ் குமார்
லைன் புரொடியூசர் – எல்வி ஸ்ரீகாந்த்லக்ஷ்மன்
ஹேமா (பூர்ணா) மனவேதனையில் கார் ஓட்டி வரும் போது, எதிரே ஜாலியாக ராயல் என்ஃபீல்டு பைக்கில் வரும் ரோஷன் (திரிகன்) மீது மோதி விபத்து ஏற்படுகிறது. சாலை விபத்தில் ஏற்படும் சந்திப்பில் இருவரும் பந்தத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். முதலில் கண்களால் பேசும் இந்த சந்தர்ப்பச் சந்திப்புக்குப் பிறகு அலெக்ஸ் (விதார்த்) மற்றும் சோபியா (சுபாஸ்ரீ) என்ட்ரி ஆகும் போது என்ன நடக்கிறது என்பதே படத்தின் மையக்கரு. அலெக்ஸ், ரோஷன், ஹேமா, சோபியா ஆகிய இந்த நான்கு கதாபாத்திரங்களுக்கு உள்ள உறவு மற்றும் அவர்களுக்குள்ளான கனெக்ஷன் என்ன எழும் கேள்விகளுக்கு டெவில் விடை சொல்லும்.
ஒட்டுமொத்த படத்தை தாங்கி பிடிப்பவர் பூர்ணா தான். கணவனின் அன்பு கிடைக்காத சோகத்தில் இருக்கும் போது, கணவரின் மறுபக்கத்தை நேரில் பார்த்த பிறகு அதன் பின் சாலை விபத்தில் ஏற்படும் சந்திப்பில் புது விதமான உணர்ச்சியில் சிக்கி தவிக்கும் ஹேமா கதாபாத்திரத்தில் பன்முகத்தன்மையும் ஆழத்தையும் நேர்த்தியுடன் வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்துகிறார்.
படம் ஆரம்பித்த நீண்ட நேரத்திற்குப் பிறகு விதார்த் அலெக்ஸ் கதாபாத்திரத்தில் உறுதியான சித்தரிப்பை நிறைவு செய்து படத்தில் ஸ்டைலிஷ்ஷாகவும் வருகிறார்.
திரிகன் கதைகளத்தின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்தும் ரோஷன் கதாபாத்திரத்தில் கட்டுமஸ்தான உடல் அமைப்புடன் தனது இருப்பை உறுதி செய்துள்ளார்.
சுபாஸ்ரீ தனது கவர்ச்சியான இருப்புடன் சோபியாவாக திரையை ஒளிரச் செய்து, நீடித்த தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் அவரது கதாபாத்திரம் துண்டாக கழட்டி விடப்பட்டதால் ரசிகர்களை ஏமாற்றி அவர்களின் கனவுகளுக்கு தடை போடப்பட்டு விட்டது.
படத்தின் முதல் காட்சியிலேயே ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார் தனது அழகிய காட்சி கோணத்தில் அனைவரின் கவனத்தை கதைக்குள் ஈர்த்துவிட்டார். இரவு காட்சிகள் நன்றாக படமாக்கியதுடன் படத்தொகுப்பாளர் இளையராஜாவுடன் சேர்ந்து திரைக்கதை விறுவிறுப்பாக நகர்த்தி பார்வையாளர்களை பயமுறுத்தவும் செய்துள்ளனர்.
மியூசிக் டைரக்டராக புதிய அவதாரம் எடுத்துள்ள இயக்குனர் மிஷ்கின் தன் குருநாதர் இளையராஜாவின் ஜெராக்ஸ் என்று சொல்லலாம். இசை மற்றும் பின்னணி இசையும் படத்தின் தரத்தை உயர்த்தி உள்ளது. பல இடங்களில் தனக்கு பிடித்த வயலின் இசையை சூப்பராக பயன்படுத்தி உள்ளார். மிஷ்கின் இயக்கிய படங்களுக்கு இளையராஜா தான் இசை அமைத்தாரா அல்லது மிஷ்கின் இசை அமைத்தாரா என்ற சந்தேகத்தை அவருடைய புதிய அவதாரம் ஏற்படுத்துகிறது.
த்ரில்லர், டிராமா, ஹாரர் ஜானர்களில் கலவையாக ஒரு பெண்ணின் பார்வையில் ஹேமா கதாபாத்திரம் மூலம் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆதித்யா. சுவாரஸ்யமான கதைக்களம் இருந்தபோதிலும், கதை விரிவடையும் போது, பார்வையாளர்கள் சிக்கலான பயணத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள், இதனால் அவர்கள் தொடர்புகள் புரிந்து கொள்வதற்குள் பார்வையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. திரைப்படம் முழுவதும் பார்வையாளர்களை சஸ்பென்ஸில் வைத்திருப்பதில் கவனம் செலுத்திய இயக்குனர் கிளைமாக்ஸ் காட்சியில் தெளிவாக திரைக்கதை அமைத்து இருந்தால் பார்வையாளர்கள் குழப்பத்தில் தள்ளி இருப்பதை தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் மாருதி பிலிம்ஸ் மற்றும் எச் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் டெவில் பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமர வைக்கும் திகில் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர்.