டூடி விமர்சனம் : டூடி காதல் பிரச்சனைகளை அழுத்தமாக சொல்லும் கதைக்களம் | ரேட்டிங்: 2/5

0
154

டூடி விமர்சனம் : டூடி காதல் பிரச்சனைகளை அழுத்தமாக சொல்லும் கதைக்களம் | ரேட்டிங்: 2/5

கனெக்டிங் டாட்ஸ் நிறுவனம்; தயாரித்து கார்த்திக் மதுசூதன், ஸ்ரீதா சிவதாஸ், ஜீவாரவி, ஸ்ரீரஞ்சனி, அர்ஜுன் மணிகண்டன், அக்ஷதா, எட்வின் ராஜ், சனா ஷாலினி, ஜீவி மதுசூதன் ஆகியோர் நடித்துள்ளனர்.கதை, திரைக்கதை, வசனம் எமுதி இயக்கியிருக்கிறார் கார்த்திக் மதுசூதன்.இசை- கே.சி.பாலசாரங்கன், ஒளிப்பதிவு – மதன் சுந்தர்ராஜ், சுனில் ஜி.என், எடிட்டிங்- சாம் ஆர் டி எக்ஸ், பாடல்கள்-அரவிந்த் குமார், கலை இயக்கம் – கார்த்திக் மதுசூதன், நிஹாரிகா சதீஸ், ரத்தன் கங்காதர், பிஆர்ஒ – மணவை புவன்.

கார்த்திக் மதுசூதன் கிளப்பில்; இசைக்கலைஞராக, நினைத்த நேரத்தில் மது, மாது, பீடி பிடிப்பது என்று உல்லாசத்தை அனுபவிக்கும் நபர். நண்பனின் திருமண வரவேற்பில் ஸ்ரீதாவை சந்திக்க, அவரையும் தன் பேச்சால் மயக்க பார்க்கிறார். ஆனால் ஸ்ரீதா இதனை அறிந்து கார்த்திக்குடன் நட்புடனே பழகுகிறார். ஒரு வார காலத்தில் இவரின் பழக்க வழக்கங்களை நன்கு அறிந்திருந்தாலும் ஸ்ரீதா, கார்த்திக் மேல் காதல் கொள்கிறார். ஆனால் கார்த்திக் காதல், திருமணம் என்பதில் உடன்பாடு இல்லாதவர் என்பதால் ஸ்ரீதாவின் காதலை மறுக்கிறார். பின்னர் சென்னைக்கு திரும்பும் ஸ்ரீதா தன் பழைய காதலனை கைப்பிடித்தாரா? தன் பெற்றோரிடம் நடந்ததை சொன்னாரா? திருமணத்தை நிறுத்தினாரா? இறுதியில் என்ன நடந்தது என்பதே க்ளைமேக்ஸ்.

இதில் முக்கிய கதாபத்திரங்களாக கார்த்திக் மதுசூதன் மற்றும் ஸ்ரீதா சிவதாஸ் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சென்டிமெண்ட் காட்சிகளில் தடம் பதித்துள்ளனர்.மற்றும் ஜீவாரவி, ஸ்ரீரஞ்சனி, அர்ஜுன் மணிகண்டன், அக்ஷதா, எட்வின் ராஜ், சனா ஷாலினி, ஜீவி மதுசூதன் ஆகியோர் பக்கமேளங்கள்.

இசை- கே.சி.பாலசாரங்கன், ஒளிப்பதிவு – மதன் சுந்தர்ராஜ் இருவரின் பங்களிப்பு படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

எடிட்டிங் சாம் ஆர் டி எக்ஸ் ஷார்ப்பாக கொடுத்திருக்கலாம்.

சிலரக காதலை ஒரே படத்தில் சொல்லியிருக்கின்றனர். படிக்கும் போதே ஏற்பட்ட ஐந்து வருட காதல், ஏழு நாட்களில் புரிந்து கொண்ட சுதந்திர காதல் இதில் எதை தேர்ந்தெடுத்தாலும் மனவேதனை தான் மிஞ்சும் என்பதையறிந்து பெற்றோர்கள் பார்க்கும் இளைஞனை திருணம் செய்து கொள்ளும் பெண் என்பதாக திரைக்கதையமைத்து, காதல் குழப்பமானது, மாறக்கூடியது, முடிவெடுக்க முடியாதது என்பதை உணர்த்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர். இன்றைய இளைய சமூகத்தின் எண்ண மாற்றங்கள் நிலையானது அல்ல இப்படித்தான் இருக்கிறது என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் மதுசூதன்.

மொத்தத்தில் கனெக்டிங் டாட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் டூடி காதல் பிரச்சனைகளை அழுத்தமாக சொல்லும் கதைக்களம்.