டி3 விமர்சனம்: டி3 த்ரில்லிங் அனுபவத்தை திறம்பட கொடுத்து முத்திரை பதித்துள்ளது | ரேட்டிங்: 3/5

0
415

டி3 விமர்சனம்: டி3 த்ரில்லிங் அனுபவத்தை திறம்பட கொடுத்து முத்திரை பதித்துள்ளது | ரேட்டிங்: 3/5

பீமாஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் மனோஜ் மற்றும் ஜேகேஎம் புரொடக்ஷ்ன்ஸ் இணைந்து தயாரித்துள்ள டி3 படத்தில் பிரஜின், வித்யா பிரதீப், சார்லி, காயத்ரி யுவராஜ், ஆனந்தி, மோகமுள் அபிஷேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்கியிருக்கிறார்.ஒளிப்பதிவு-மணிகண்டன் பி.கே, எடிட்டிங்-ராஜா, இசை-ஸ்ரீஜித் எடவானா, பிஆர்ஒ-சக்தி சரவணன்.

மனைவி மாயாவுடன் (வித்யா பிரதீப் மாற்றலாகி குற்றாலத்தில் இன்ஸ்பெக்டரான விக்ரம் (பிரஜின்) வந்து தங்குகிறார். போலீஸ் நிலையத்தில் பொறுப்பேற்கும் இன்ஸ்பெக்டர் விக்ரம் (பிரஜின்) முதல் விசாரணையே சாலையில் தனியாக நடந்து செல்லும் ஒருவர் லாரியில் அடிபட்டு இறக்கிறார். அது விபத்து என்று நினைக்கும் போது மற்றொரு விபத்து அதே போல் நடக்க, இன்ஸ்பெக்டர் விவேக்கிற்கு சந்தேகம் ஏற்படுகிறது. விசாரணை தொடரும் போது, விபத்துகள் என்ற பெயரில் மூடப்பட்ட 203க்கும் மேற்பட்ட வழக்குகள் ஒரே நிலையத்தில் இருப்பதை விக்ரம் கண்டுபிடிக்கிறார். இந்த வழக்கு தனது உயிருக்கு மட்டுமல்ல, அவரது மனைவி மாயாவின் (வித்யா பிரதீப்) உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. மனைவியின் இழப்;பு, இதற்கு காரணமான குற்றவாளிகளை தேட தொடங்குகிறார். அவரால் குற்றவாளிகளை நெருங்க முடிந்ததா? அந்த இடத்தையே உலுக்கிய இந்த தொடர் குற்றங்களின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடிந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.

பிரஜின் இந்த படத்தில் தன்னுடைய முழு பங்களிப்பையும் கொடுத்து படத்தின் அத்தனை காட்சிகளுக்கும் விறுவிறுப்பை ஏற்படுத்தி தருகிறார்.மனைவியாக வித்யா பிரதீப், சார்லி, காயத்ரி யுவராஜ், ஆனந்தி, மோகமுள் அபிஷேக் ஆகியோர் படத்திற்கு உயிர்நாடிகள்.

ஒளிப்பதிவு-மணிகண்டன் பி.கே, எடிட்டிங்-ராஜா, இசை-ஸ்ரீஜித் எடவானா ஆகியோர் படத்தின் முக்கிய காட்சிகளுக்கு தங்களுடைய உழைப்பை கொடுத்து வித்தியாசத்தை கூட்டியுள்ளனர்.

ஒரு புலனாய்வு த்ரில்லர் கதையில் முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் பல கிளைக் கதைகளாக விரிவடைவதால் கதையில் கொஞ்சம் தோய்வு ஏற்படுகிறது. இருந்தாலும் வித்தியாசமான கோணத்தில் இறுதி வரை சஸ்பென்சை கொடுத்து த்ரில்லர் படத்தை மும்முரமாக இயக்கியிருக்கிறார் பாலாஜி.

மொத்தத்தில் பீமாஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் மனோஜ் மற்றும் ஜேகேஎம் புரொடக்ஷ்ன்ஸ் இணைந்து தயாரித்துள்ள டி3 த்ரில்லிங் அனுபவத்தை திறம்பட கொடுத்து முத்திரை பதித்துள்ளது.