டிராமா திரைவிமர்சனம் : டிராமா அனைத்து கலைஞர்களின் உழைப்பும் வேஸ்ட் | ரேட்டிங்: 1.5/5

0
303

டிராமா திரைவிமர்சனம் : டிராமா அனைத்து கலைஞர்களின் உழைப்பும் வேஸ்ட் | ரேட்டிங்: 1.5/5

உலகின் முதல் நான்-லீனியர், சிங்கிள் ஷாட் படம் என்று இயக்குநர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ வெளியாகி சில மாதங்களுக்குப் பிறகு இப்போது ‘டிராமா’ என்ற இன்னொரு படம் ஒரே ஷாட்டில் உருவாகியிருப்பதாகச் செல்லப்படுகிறது.
நடிகர்கள் கிஷோர் குமார், சார்லி, ஜெய் பாலா, வின்சென்ட் நகுல், வினோத் முன்னா, காவ்யா பெல்லு, மரியா பிரின்ஸ், ப்ரீத்தி ஷா பிரேம்குமார், விஜயலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஷினோஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிஜிபால், ஜெய கே டோஸ் மற்றும் ஜெசின் ஜார்ஜ் ஆகியோரின் இசை மற்றும் பிஜிபால் பின்னணி இசையமைத்துள்ளார்.
ஜெயச்சந்திரன் பிபி, டாக்டர் ஜாலி அம்புகான் ஆகியோருடன் இணைந்து ஆண்டனி ராஜ் எம் தயாரித்துள்ளார். அஜுகீழ்மாலா இயக்கியுள்ளார். மக்கள் தொடர்பு – பரணி.
காவல் நிலையத்தில் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம் நடக்கும்போது, முன்னிரவில் திடீரென மின்சாரம் போகிறது. மின்வெட்டின் போது ஒரு தலைமைக்காவலர் சார்லி மர்மமான முறையில் கொலைசெய்யப்படுகிறார். கொலையாளியைக் கண்டுபிடிக்க உயரதிகாரி கிஷோர் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. அவரைக் கொன்றது யார்? அன்றைய தினம்  காவல் நிலையத்தில் யார் யார் இருந்தார்கள்? உயரதிகாரி கிஷோர் விடிவதற்குள் கொலையாளியை கண்டுபிடித்தாரா?என்பதே மீதிக்கதை.
விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் கிஷோர், ஜெய்பாலா, காவ்யாபெல்லு, சார்லி, வின்செண்ட் நகுல் மற்றும் சில நடிகர்களுக்கு சித்தரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களை தப்பு தப்பா டிசைன் பண்ணியிருக்காங்க எந்த காவல் நிலையத்தில் உயரதிகாரி இருக்கும் போது ஒரு கான்ஸ்டபிளை வந்து இன்னொருத்தன் சைட் அடிக்கிறது, கைதி லாக்கப்பில் இருந்து தன் இஷ்டத்துக்கு வெளியே வருவதும், போவதும் என அபத்தான காட்சியமைப்புகள் பல உள்ளன.
 படத்தில் கிஷோர் மற்றும் சார்லி இவர்களது அனுபவமிக்க நடிப்பு வீணாக்கப்பட்டுள்ளது.
ஷம்சுதீனின் ஒளிப்பதிவு மற்றும் பிஜிபாலின் பின்னணி இசை ஓகே.
மிகபலவீனமான கதையை தேர்வு செய்து காவல் துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் அஜுகீழ்மாலா. இந்த கதைக்கு சிங்கள் ஷாட் தேர்வு தேவையா?  மிஸ்டர் இயக்குனர்.
மொத்தத்தில் ஜெயச்சந்திரன் பிபி, டாக்டர் ஜாலி அம்புகான் ஆகியோருடன் இணைந்து ஆண்டனி ராஜ் எம் தயாரித்துள்ள டிராமா அனைத்து கலைஞர்களின் உழைப்பும் வேஸ்ட்.