டியர் சினிமா விமர்சனம் : டியர் ஒரு முறை பார்க்கலாம் | ரேட்டிங்: 2.5/5

0
712

டியர் சினிமா விமர்சனம் : டியர் ஒரு முறை பார்க்கலாம் | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள்
ஜி.வி. பிரகாஷ் குமார் – அர்ஜுன்
ஐஸ்வர்யா ராஜேஷ் – தீபிகா
காளி வெங்கட் – சரவணன்
நந்தினி – கல்பனா
தலைவாசல் விஜய் – சண்முகம்
ரோகிணி – லட்சுமி
இளவரசு – ரங்கராஜ்
கீதா கைலாசம் – வசந்தி
ஜெ. கமலேஷ் – சந்தோஷ்
அப்தூல் லீ – பாண்டா
மகாலக்ஷ்மி சுதர்சனன் – ஜெனிஃபர்

தொழில்நுட்ப கலைஞர்கள் :
ஒளிப்பதிவு – ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
படத்தொகுப்பு – ருக்கேஷ்
எழுத்து – இயக்கம் – ஆனந்த் ரவிச்சந்திரன்
தயாரிப்பு – NUTMEG PRODUCTIONS

தயாரிப்பாளர்கள் – வருண் த்ரிபுரனெனி, அபிஷேக் ராமிஷெட்டி, ஜி.பிருத்விராஜ்
வெளியீடு – ROMEO PICTURES
மக்கள் தொடர்பு – யுவராஜ்

மனைவியின் குறட்டை கணவனின் தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் போது புதிதாக திருமணமான தம்பதிகள் சவால்களை எதிர்கொள்கின்றனர். அவர்களின் போராட்டங்கள் நீடித்த திருமணத்திற்கு தேவையான சமரசங்களை சித்தரிக்கின்றன.
சென்னையில் பிரபலமான தனியார் டிவி சேனலில் சேர்ந்து பிரபலங்களை நேர்காணல் செய்ய வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் அர்ஜுன் (ஜி.வி. பிரகாஷ்). இவருக்கு குன்னூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தீபிகாவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) திருமணம் செய்து வைக்கிறார்கள். தீபிகா தனது தாயின் ஆலோசனையின் பேரில் தனது குறட்டைப் பிரச்சனையை அர்ஜுன் வசம் திருமணத்துக்கு முன் அவரிடம் கூறாமல் மறைத்து விடுகிறார். அர்ஜுனுக்கு சின்னதாக சத்தம் கேட்டாலே தூக்கத்தில் இருந்து எழுந்து விடுவார். ஆனால் தீபிகாவுக்கு குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது என்பதை முதலிரவு அன்று அர்ஜுனுக்கு தெரிய வருகிறது. என்றாலும், தீபிகாவும் அர்ஜுனும் தங்களின் பிரச்சனையை சமாளிக்க புதுமையான வழிகளைக் தேடுகிறார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல குறட்டை பிரச்சனை தீர்வுக்கு வரவில்லை. இந்த பிரச்சனையால் தூக்கமின்மை எற்பட்டு அர்ஜுனுக்கு வேலை போகும் நிலை உருவாகிறது. இதனால் தீபிகாவிடம் விவாகரத்து கேட்கிறார் அர்ஜுன். இதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் மறுக்கிறார். நீதிமன்றம் இவர்களுக்கு சில காலம் அவகாசம் கொடுக்கிறது. இதில் குறட்டை பிரச்சனை தீர்ந்து தம்பதியினர் ஒன்று சேர்ந்தார்களா? குறட்டை தாக்குதலில் இருந்து அர்ஜுன் தப்பித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

பலம் இல்லாத ஜி.வி.பிரகாஷின் அர்ஜுன் கதாபாத்திரத்திரம் பெரிய தாக்கத்தை வெளிப்படுத்தவில்லை. இருந்தாலும் மனைவி மற்றும் குடும்பத்துடன் போராடும் மனிதராக ஜி.வி. நேர்த்தியான நடிப்பு வெளிப்படுத்தியுள்ளார்.

சவாலான கதாபாத்திரத்தை ஏற்று கச்சிதமாக நடிப்புத் திறனை வெளிப்படுத்தக் கூடிய ஐஸ்வர்யா ராஜேஷின் திறமை பலவீனமான திரைக்கதையால் முற்றிலும் வீணாகிவிட்டது, இருந்தாலும் தீபிகாவின் கதாபாத்திரத்தை வெளிப்படுத்திய விதம், உணர்ச்சிகளை வளர்த்த விதம் பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது உடல் எடையை சற்று குறைத்திருக்கலாம்.

ரோகிணி, காளி வெங்கட், இளவரசு, தலைவாசல் விஜய், நந்தினி, கீதா கைலாசம், ஜெ. கமலேஷ், அப்தூல் லீ, மகாலக்ஷ்மி சுதர்சனன் உட்பட அனைத்து துணை கதாபாத்திரங்கள் தங்கள் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர்.

குறிப்பாக அர்ஜுன் மூத்த சகோதரனாக சரவணன் கதாபாத்திரத்தில் காளி வெங்கட் உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்கள் மனதில் பதிந்துள்ளார்.

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு, ஜி.வி. பிரகாஷ் குமார் இசை, மற்றும் ருகேஷின் நேர்த்தியான படத்தொகுப்பு பலவீனமான திரைக்கதையை தொய்வில்லாமல் நகர அவர்களது பங்களிப்பு உதவியுள்ளது.

ஒரு இளம் பெண்ணின் தூக்கத்தில் ஏற்படும் குறட்டை (சவுண்ட் ஸ்லீப்பர்), அவரது கணவருடனான திருமண பந்தத்தில் சரிசெய்ய முடியாத சிக்கல்கள் ஏற்படுத்துகிறது என்பதை கதை களமாக வைத்து தான் சொல்ல நினைத்ததை தெளிவில்லாமல் பலவீனமான திரைக்கதை மூலம் தடுமாற்றத்துடன் தந்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன்.

மொத்தத்தில் வருண் த்ரிபுரனெனி, அபிஷேக் ராமிஷெட்டி, ஜி.பிருத்விராஜ் இணைந்து தயாரித்துள்ள டியர் ஒரு முறை பார்க்கலாம்.