டிமான்டி காலனி 2 விமர்சனம் : டிமான்டி காலனி -2 திகில் மற்றும் திரில்லர் திரைப்பட பிரியர்களுக்கு இது ஒரு சிலிர்ப்பூட்டும் ரோலர்கோஸ்டர் சவாரி | ரேட்டிங்: 3/5

0
364

டிமான்டி காலனி 2 விமர்சனம் : டிமான்டி காலனி -2 திகில் மற்றும் திரில்லர் திரைப்பட பிரியர்களுக்கு இது ஒரு சிலிர்ப்பூட்டும் ரோலர்கோஸ்டர் சவாரி | ரேட்டிங்: 3/5

பிடிஜி யுனிவர்சல், ஞானமுத்து பட்டரை, ஒயிட்நைட்ஸ் எண்டர்டெயின்மென்ட்  சார்பில் பாபி பாலச்சந்திரன், விஜய் சுப்ரமணியன், ஆர்.சி.ராஜ்குமார் தயாரித்து ரெட் ஜெயண்ட் வெளியீட்டில் வந்துள்ள டிமான்டி காலனி 2 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அஜய் ஆர் ஞானமுத்து

இதில் ஸ்ரீனி மற்றும் ரகுவாக அருள்நிதி, டெபியாக பிரியா பவானிசங்கர், டிமான்டேயாக ஆண்டி ஜாஸ்கெலைனன், தாவோஷியாக டிசெரிங் டோர்ஜி, ரிச்சர்டாக அருண் பாண்டியன், தயாளனாக முத்துக்குமார், அதிதியாக மீனாட்சி கோவிந்தராஜன், சாமாக சர்ஜனோ காலிட் ,ஐஸ்வர்யாவாக அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- எழுத்தாளர்கள் – அஜய் ஆர் ஞானமுத்து, வெங்கடேஷ், ராஜவேல், ஒளிப்பதிவாளர்- ஹரிஷ் கண்ணன், இசை – சாம் சிஎஸ், எடிட்டர் – குமரேஷ், பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா, யுவராஜ்

கதை நேரடியாக முதல் பாகத்தின் முடிவைத் தொடர்கிறது, கதாநாயகன் ஸ்ரீனிவாசன் (அருள்நிதி) விட்டுச் சென்ற இடத்திலிருந்து ஒரு திகிலூட்டும் முடிவு. ஸ்ரீனிவாசன் (அருள்நிதி) இறக்காமல் கோமா நிலையில் இருப்பதாக இரண்டாம் பாகத்தில் காட்டப்பட்டுள்ளது. அடுத்து, தனது காதலனின் புற்றுநோயில் இருந்து விடுபட்டு வந்து திடீரென அவனது தற்கொலை தவிர்க்க முடியாத துயரத்தை சமாளிக்கும் இளம் பெண்ணான டெபி (பிரியா பவானி சங்கர்) ஒரு திபெத்திய பேயோட்டும் நபரைப் பயன்படுத்தி காதலனின் ஆவியை வரவழைக்கிறாள், அந்தச் செயல்பாட்டில், இப்போது சுயநினைவின்றி இருக்கும் அருள்நிதியின் ஆன்மாவை அவள் கண்டுபிடிக்கிறாள். பின்னர் சீனிவாசனுக்கு ரகு என்ற இரட்டை சகோதரர் இருப்பதை அறிந்து கொள்கிறார். தம்பி ஸ்ரீனிவாசன் கட்டிடத்தில் இருந்து விழுந்த அதே நிகழ்வை அனுபவித்தது போல் அவரது மூத்த சகோதரர் ரகுவுக்கும் (அருள்நிதி) அவர் இறக்கும் அபாயம் உள்ளது. ஸ்ரீனிவாசன் இறந்தால் ரகுவும் இறந்து விடுவார் என்கிற உண்மையை ரகுவிடம் டெபி கூற. அதிர்ச்சியில் தள்ளப்படுகிறார் ரகு. டெர்பி – ரகு கூட்டணி, சீனத் துறவி மற்றும் நண்பர்கள் உதவியுடன் சீனிவாசனை உயிருடன் மீட்கும் முயற்சியில் பின்வரும் நிகழ்வுகள் திடுக்கிடும் மர்மத்தை வெளிப்படுத்துகிறது.

பணத்தாசை பிடித்த சுயநலம், உயிர் பயம் கொண்ட மனிதனாக ரகு கதாபாத்திரத்தை அருள்நிதி உடல் மொழி மற்றும் முகபாவனைகள் மூலம் சரியான மீட்டரில் சித்தரித்துள்ளார். இரட்டை வேடம் என்றாலும் ஸ்ரீனிவாசன் கதாபாத்திரத்துக்கு பெரிய வேலை இல்லை. என்றாலும் கதாபாத்திரங்களுக்கு இடையே நுட்பமான மாறுபாடுகளுடன் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

ப்ரியா பவானி ஷங்கர் தான் இந்தப் படத்தைத் தாங்குகிறார். பிரியா பவானி ஷங்கர் தனக்குக் கொடுக்கப்பட்ட அதிகமான திரை பிரவேசத்தை நேர்த்தியுடன் கையாண்டு வலுவான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

முத்துக்குமார் ரகுவின் சித்தப்பா கதாபாத்திரத்தில் படம் முழுக்க பயணித்து சிறப்பான நடிப்பை தந்துள்ளார்.

சர்ஜானோ காலித், அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ஆகியோர் குறைந்த வேடங்களில் நடித்திருந்தாலும், திரைக்கதையை நகர்த்த உதவுகிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன், இசை சாம் சிஎஸ், எடிட்டர் குமரேஷ் பங்களிப்பு திகில் கலந்த திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.

முதல் பாகத்தை போல இரண்டாம் பாகத்திலும் பல சஸ்பென்ஸ் தருணங்கள் உள்ளன. குறிப்பாக யாரெல்லாம் ஒரு குறிப்பிட்ட திகில் புத்தகத்தைப் படிக்கும் போது அதில் உள்ள மர்ம சங்கிலி யாரிடம் கிடைக்கிறதோ ஏதோ ஒரு உணர்வை உணரும் தருணத்தில் அவர்கள் மரணிக்கும் மர்மத்தை அழகாக திரைக்கதை அமைத்து டிமான்டி காலனி 3 க்கான லீட் கொடுத்து திரில்லிங்கா சொல்லியிருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.

மொத்தத்தில் பிடிஜி யுனிவர்சல், ஞானமுத்து பட்டறை, ஒயிட்நைட்ஸ் எண்டர்டெயின்மென்ட்  சார்பில் பாபி பாலச்சந்திரன், விஜய் சுப்ரமணியன், ஆர்.சி.ராஜ்குமார் தயாரித்திருக்கும் டிமான்டி காலனி -2 திகில் மற்றும் திரில்லர் திரைப்பட பிரியர்களுக்கு இது ஒரு சிலிர்ப்பூட்டும் ரோலர்கோஸ்டர் சவாரி.