ஜெயிலர் திரைவிமர்சனம் : ஜெயிலர் பக்கா மாஸ் கமர்ஷியல் என்டர்டெய்னர் | ரேட்டிங்: 4/5

0
706

ஜெயிலர் திரைவிமர்சனம் : ஜெயிலர் பக்கா மாஸ் கமர்ஷியல் என்டர்டெய்னர் | ரேட்டிங்: 4/5

நடிகர்கள்
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், தமன்னா, வசந்த் ரவி, நாக பாபு, யோகி பாபு, ஜாஃபர் சாதிக், கிஷோர், பில்லி முரளி, சுகுந்தன், கராத்தே கார்த்தி, மிதுன், அர்ஷத், மாரிமுத்து, மாஸ்டர் ரித்விக், சரவணன், அறந்தாங்கி நிஷா, மகாநதி சங்கர்

தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்
எழுத்து – இயக்கம் : நெல்சன்
இசை : அனிருத்
ஓளிப்பதிவு : விஜய் கார்த்திக் கண்ணன்
எடிட்டர் : ஆர். நிர்மல்
கலை : டி.ஆர்.கே.கிரண்
அதிரடி : ஸ்டன் சிவா
ஆடை வடிவமைப்பாளர்கள்: பல்லவி சிங், முத்துல் ஹபீஸ்
ஒலி கலவை: சுரேன். ஜி
ஒலி வடிவமைப்பு: சுரேன். ஜி – எஸ்.அழகியகூத்தன்
வண்ணக்கலைஞர்: ஆண்ட்ரியாஸ் ப்ரூக்கல்
DI ஆய்வகம் : பிரைம் சூஃபோகஸ் லிமிடெட்
VFX : மேற்பார்வையாளர் அஜய்
ஒப்பனை: சி.ஹரிநாத்
ஸ்டில்ஸ்: வி.சிற்றரசு
விளம்பர வடிவமைப்பு: கபிலன் செல்லையா
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: டி.ரமேஷ் குச்சிராயர்
நிர்வாக தயாரிப்பாளர்: ராஜா ஸ்ரீதர்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது

ஓய்வுபெற்ற ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் தனது மகன் ஏசிபி அர்ஜுன் (வசந்த் ரவி), மனைவி விஜயா (ரம்யா கிருஷ்ணன்) மற்றும் மருமகள்  மிர்னா மேனன் (ஸ்வேதா) மற்றும் அவரது பேரன் ரித்விக்வுடன் எளிமையான வாழ்க்கையை நடத்துகிறார். அவர் தனது பேரனுக்கு யூ ட்யூப் வீடியோக்களை படம்பிடிப்பதிலும், காய்கறிகள் வாங்குவதிலும் மற்றும் அவரது குடும்பத்திற்கு உதவுவதன் மூலமும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்கிறார். அவரது மகன் அர்ஜுன் (வசந்த் ரவி) ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. பழங்காலத் பொருட்கள் மற்றும் கடவுள் சிலைகளை கடத்தும் வர்மாவையும் (
விநாயகன்) அவனது கும்பலையும் அர்ஜுன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறான். இந்நிலையில், ஒரு நாள் அர்ஜுன் காணாமல் போனது காவல் துறையில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. அர்ஜுன் கொலை செய்யப்பட்டதாக செய்தி குடும்பத்தினருக்கு கிடைத்தது. முத்துவேலின் மனைவி விஜயா, அர்ஜுன் இறப்பிற்குக் காரணம், அர்ஜுனைக் கண்டிப்பான ஒழுக்கத்துடன் வளர்த்ததால் தான் என்று கூறுகிறார். அர்ஜுனின் மரணத்திற்கு பழிவாங்க முத்துவேல் கொலைவெறியுடன் ஒவ்வொரு சதிகாரர்களையும் தொடர்ந்து கொல்கிறார். இந்த நேரத்தில், முத்து வர்மா மூலம் தனது பாதையை மாற்றும்படி நேரிடுகிறது. ஓரு ஆச்சரியமான உண்மையை அறிந்துகொள்கிறார். அது என்ன? முத்து எப்படி வர்மாவை சமாளித்தார்? என்பது படத்தின் மீதிக்கதை.

இந்த படத்தில் ஈடு இணையற்ற நட்சத்திரம் ரஜினிகாந்த் ஏன் இன்றளவும் சூப்பர் ஸ்டார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி ஜெயிலர் நிரூபித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திடமான கதாபாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது குணாதிசயங்களை நெல்சன் சிறப்பாக வடிவமைத்துள்ளார். முதல் பாதியின் பெரும்பகுதியை ரஜினிகாந்த் தனது வயதை மிகவும் நுணுக்கமாக ஏற்றுக்கொண்டாலும் ரஜினி ஸ்டைல் ஒரு அங்குலம் கூட மாறவில்லை. மகனுக்கு ஷூபாலிஷ் போடுவதும், பிறகு பேரனுக்கும் ஷூ பாலிஷ்  போடுட்டு தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற பந்தா இல்லாமல் ஒரு சிறந்த தந்தையாகவும், ஒரு சிறந்த தாத்தாவாகவும் வாழ்ந்துள்ளார். மேலும் படம் முன்னேறும்போது அவர் அச்சுறுத்தும் சக்தியாக மாறுகிறார். அத்துடன் அவர் இளமையாக தோன்றும் ஃப்ளாஷ்பேக் காட்சியில் ரசிகர்களை  உற்சாகப்படுத்தியுள்ளார். முதல் பாதியில் நுட்பமான, இருண்ட நகைச்சுவையுடன் நிரம்பியுள்ளது. உண்மையில், யோகி பாபுவுடன் ரஜினிகாந்தின் காமெடி டைமிங் காட்சிகள் முதல் பாதியைக் ஜாலியாகவும் கடக்க உதவுகிறது. இரண்டாம் பாதி பல வெகுஜன காட்சிகளுடன் கேக்வாக் மூலம் ரஜினியிசத்தை அவரது ரசிகர்கள் நிறைய பார்க்கிறார்கள்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரஜினிகாந்த் ஜோடி சேர்ந்துள்ளனர். ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், தமன்னா மற்றும் கிஷோர் என ஏராளமான கேமியோக்கள் உள்ளனர். அந்தந்த துறையில் அவர்கள் கொடிக்கட்டி பறந்தாலும் சூப்பர் ஸ்டாரின் நட்புக்காக ஜெயிலர் படத்தில் கம்பீரமாக தோன்றி படத்திற்கு பெரிய மதிப்பை தந்து பான் இந்திய படமாக கொண்டு சென்றுள்ளனர்.

ஜெயிலாரின் மகனாவும், நேர்மையான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வசந்த் ரவி ஒரே முக பாவனையை வெளிப்படுத்தியுள்ளார். இருந்தாலும் திரைக்கதையின் திருப்புமுனையாக இவரது கதாபாத்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

விநாயகன், கொடூர வில்லனாக தன் ரத்தக்கண்ணால் வர்மா கதாபாத்திரத்தில் அனைவரையும் காட்சி ரீதியாக பய முறுத்திய அவரது நடிப்பு திரைப்படத்தில் உச்சத்தை எட்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, க்ளைமாக்ஸில் அவரை வீழ்த்த மூன்று சூப்பர் ஸ்டார்கள் ஒன்றாக வந்து வர்மாவை வீழ்த்தி மிகவும் அழுத்தமான அந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உயர்த்தியிருக்கிறது.

மிர்னா மேனன், தமன்னா, வசந்த் ரவி, நாக பாபு, யோகி பாபு, ஜாஃபர் சாதிக், கிஷோர், பில்லி முரளி, சுகுந்தன், கராத்தே கார்த்தி, மிதுன், அர்ஷத், மாரிமுத்து, மாஸ்டர் ரித்விக், சரவணன், அறந்தாங்கி நிஷா, மகாநதி சங்கர் ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு கச்சிதமான தேர்வு.
அனிருத் இசையில் பாடல்களுக்கு தனது ரசிகர்களை ஆட வைக்கிறார். அனிருத்தின் துடிப்பான பின்னணி இசை படத்தை உயர்த்துகிறது.


ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனின் கேமரா ரஜினிகாந்த்தை மிகச்சிறந்த முறையில் காட்சிப்படுத்தியுள்ளார். கலை இயக்குனர் டி.ஆர்.கே.கிரணின் பங்களிப்பு அற்புதம். எடிட்டர் ஆர். நிர்மல் திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார்.

முந்தைய படம் பீஸ்ட்டில் செய்த தவற ஜெயிலரில் ஏற்படாமல் பார்த்துக் கொண்டுள்ளார் இயக்குனர் நெல்சன். சூப்பர் ஸ்டாரின் ஜெயிலரில் இயக்குனர் ரிஸ்க் எடுக்காதது ஒன்று.எழுத்து அடிப்படையில் கதையின் மையமாக இருக்கும் தந்தை-மகன் பிணைப்பு, வெறுமனே தொட்டு, அப்பா மகன் நெருக்கம், பேரன்,  குடும்பம், பாசம் என ஸ்கிரிப்டில் நேர்த்தியாகக் கையாண்டு எல்லாவற்றையும் மிகவும் யதார்த்தமாக வைத்திருக்கிறார். படத்தில் டார்க் காமெடி நன்றாக வொர்க் அவுட் ஆகியுள்ளது.
மொத்தத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் பக்கா மாஸ் கமர்ஷியல் என்டர்டெய்னர்.