ஜென்டில் வுமன் சினிமா விமர்சனம் :​​ ஜென்டில்வுமன் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் பரபரப்பான க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5

0
392

ஜென்டில் வுமன் சினிமா விமர்சனம் :​​ ஜென்டில்வுமன் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் பரபரப்பான க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5

கோமலா ஹரி பிக்சர்ஸ், ஒன் டிராப் ஓஷன் பிக்சர்ஸ் சார்பில் கோமலா ஹரி, ஹரி பாஸ்கரன், பி.என். நரேந்திர குமார், லியோ லோகேன் நேதாஜி தயாரித்திருக்கும் ஜென்டில்வுமன் படத்தை எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன். வெளியீடு: உத்ரா புரொடக்ஷன்ஸ் – எஸ் ஹரி உத்ரா.

​நடிகர்கள் : லிஜோமோல் ஜோஸ் – பூர்ணி, ஹரிகிருஷ்ணன் – அரவிந்த், லோஸ்லியா மரியானேசன் – அன்னா, ராஜீவ் காந்தி -பூவேந்தன், தரணி – தீபிகா, வைராபாலன் – சோவியத், சுதேஷ் – பிரபு தோஸ்

தொழில்நுட்ப குழுவினர்கள் :
இணை தயாரிப்பாளர் : தினேஷ் குமார் டி.சி
இசையமைப்பாளர்: கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவாளர் : சா.காத்தவராயன்
எடிட்டர் :இளையராஜா சேகர்
தயாரிப்பு வடிவமைப்பாளர் : ஏ.அமரன்
பாடல் மற்றும் உரையாடல்கள் : யுகபாரதி,
அதிரடி இயக்குனர் : சுதேஷ்
நடன இயக்குனர்: அஸார்
காஸ்டூமர் :சத்யா
கலரிஸ்ட் : அதிதியா கிருஷ்ணன்
வி.எஃப்.எக்ஸ் : ஆண்டனிஜெரோம், ராம் சிவனேஷ்
மக்கள் தொடர்பு : சதீஷ் (ஏய்ம்)

எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் அரவிந்த் (ஹரி கிருஷ்ணன்) தாய், தந்தையை இழந்த மென்மையான பெண் பூரணியை (லியோமோல் ஜோஸ்) மணந்து சென்னையில் ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்பில் குடியேறுகிறார். காதல், ஊடல், கூடல் என அவர்களின் வாழ்க்கை சந்தோஷமாக செல்கிறது. இந்நிலையில், பூர்ணியின் தோழியின் சகோதரி ஒரு வேலை நேர்காணலுக்காக சென்னைக்கு வந்து வீட்டில் தங்குகிறார். அரவிந்தனின் உண்மையான முகத்திரை வெளிப்படுகிறது. அந்த பெண்ணிடம் ஒரு சமையலறை சம்பவத்தில் கீழ  விழ அரவிந்த் மயக்க மடைகிறான். அப்போது வீடு திரும்பும் பூர்ணி அங்கு கண்ட காட்சியால் அதிர்ச்சி அடைகிறாள். மேலும் அரவிந்த்தனின் முன்னாள் காதலி அன்னாவுடன் (லாஸ்லியா) தனியாக ஒரு ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வரும்  உண்மை பூரணிக்கு தெரியும் போது அவள் கோபத்தின் உச்சத்திற்கு செல்கிறாள். அப்போது தனது கணவர் மயக்கம் தெளிந்து உடல் அசையும் போது பூரணி அருகில் இருந்த அருவாளை எடுத்து தனக்கு துரோகம் செய்த தனது கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுகிறாள். பிறகு அண்ணா அரவிந்தை தேடி அவரது வீட்டிற்கு வரும்போது என்ன நடக்கிறது? அதன் பின் பூரணி  சந்திக்கும் பின்விளைவுகளை எப்படி சமாளிக்கிறார்? திருமணத்திற்குப் பிறகு அரவிந்த் – பூரணி உறவில் ஏன் அன்னா தன் காதலை கைவிடாமல் தொடர்கிறாள்? என்பதை ஒரு சிலிர்ப்பூட்டும் திருப்பத்துடன் மீதமுள்ள கதையை முன்னோக்கி நகர்த்தியுள்ளார் அறிமுக இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன்.

லிஜோமோல் ஜோஸ் சாந்தகுணமுள்ள இல்லத்தரசி பூர்ணியாக ஜொலிக்கிறார். அதே நேரத்தில் துரோம் செய்யும் கணவனை வெகுண்டெழுந்து கொலை செய்வதும், அதன் பின் அந்த சம்பவத்தை தனக்குள் புதைத்து வைத்துக்கொண்டு, டிபன் சாப்பிடுவது, போலீஸ் விசாரணையை பயமின்றி எதிர் கொள்வது, எந்த ஒரு சூழ்நிலையிலும் பதற்றத்தை வெளிக்காட்டாத முகபாவனையில் காட்சிக்கு காட்சி நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்.

பூர்ணிக்கு இணையாக நடிப்பதில் லோஸ்லியா மரியானேசன் அன்னா கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளார்.

ஹரி கிருஷ்ணன் மனைவிக்கும் காதலிக்கும் துரோகம் செய்து இடையே நடத்தும் நாடகத்தை தந்திரமாக கையாலும் குணம் கொண்ட கதாபாத்திரத்தில் அப்பாவித்தனமான முகபாவத்துடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் அரவிந்த்.

காவலர் பூவேந்தனாக வரும் ராஜிவ் காந்தி, தரணி – தீபிகா, வைராபாலன் – சோவியத், சுதேஷ் – பிரபு தோஸ் உட்பட அனைவரும்  தங்கள் பங்கை சரியாக பதிவு செய்துள்ளனர்.

கோவிந்த் வசந்தாவின் இசை மற்றும் மென்மையான பின்னணி இசையும், அடுக்குமாடிக் குடியிருப்பு, கார், வீடு சற்றி நடைபெறும் காட்சிகளை ஒளிப்பதிவாளர் சா.காத்தவராயன் க்ரைம் கதைக்கு தேவையான காட்சி கோணங்களின் மூலம் பார்வையாளர்கள் பதட்டத்துடன் படம் முழுக்க பயணிக்க வைத்துள்ளார். அதே போல எங்கேயும் தொய்வில்லாத க்ரைம் திரில்லராக, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யூகிக்க முடியாத அளவுக்கு படத்தொகுப்பாளர் இளையராஜா சேகரின் படத்தொகுப்பு சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது.

திருமணம் தாண்டிய உறவு வைத்திருக்கும் ஒரு ஆணால் பெண்கள் எந்தெந்த வகையில் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பதையும், பெண்களை ஒரு பொருட்டாக மதிக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதை ஒரு க்ரைம் திரில்லராக திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார். அறிமுக இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன்.

மொத்தத்தில் கோமலா ஹரி பிக்சர்ஸ், ஒன் டிராப் ஓஷன்பிக்சர்ஸ் சார்பில் கோமலா ஹரி, ஹரி பாஸ்கரன், பி.என். நரேந்திர குமார், லியோ லோகேன் நேதாஜி தயாரித்திருக்கும் ஜென்டில்வுமன் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் பரபரப்பான க்ரைம் த்ரில்லர்.