ஜீவி 2 விமர்சனம் : ஜீவி 2 இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் புகுத்தி அதிசயங்களைச் செய்திருக்கலாம் | ரேட்டிங்: 2.5/5

0
464

ஜீவி 2 விமர்சனம் : ஜீவி 2 இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் புகுத்தி அதிசயங்களைச் செய்திருக்கலாம் | ரேட்டிங்: 2.5/5

வெற்றி (சரவணா), கருணாகரன்- (மணி), ரோகிணி (லட்சுமி), மைம் கோபி –(கதிர்), அஸ்வினி – (பார்வையற்ற சரவணன் மனைவி கவிதா), முபாஷிர் – (ஹரி), ஜவஹர் – (ஆதில் முகமது).ஒளிப்பதிவாளர் – பிரவீன் குமார்.டி.
இசையமைப்பாளர் – சுந்தரமூர்த்தி.கே.எஸ்.
எடிட்டர் – பிரவீன்.கே.எல்.
கலை இயக்குனர் – உமேஷ் ஜே குமார்.
நடன இயக்குனர்-அப்சர்.
ஸ்டண்ட் இயக்குனர் – சுதீஷ்
தயாரிப்பு நிறுவனம் – வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் – சுரேஷ் காமாட்சி
கதை – இயக்கம் – வி.ஜே.கோபிநாத்
மக்கள் தொடர்பு : ஏ.ஜான்.

திடீர் திருப்பத்துடன் ஜீவி முதல் பாகத்தை முடிந்த இடத்திலிருந்து ரீவைண்ட் செய்தபடி தொடங்குகிறது கதை.  சரவணன் (வெற்றி) தனது வீட்டு உரிமையாளரின் மகள் கவிதாவை (அஸ்வினி) திருமணம் செய்து கொண்டு தனது வாழ்க்கையை மீண்டும் தொடங்குகிறார். சரவணனுக்கு இருந்த முக்கோண விதி பிரச்சனை முடிந்து விட்டதாக நினைத்து தொடங்கிய சந்தோஷமான வாழ்க்கைக்கு திடீரென்று சரவணனின் அக்கா மகளுக்கு அவரின் மனைவியை போலவே கண் தெரியாமல் போகிறது, முடிந்து போன முக்கோண விதி மீண்டும் தன் ஆட்டத்தை தொடங்க, சிக்கலும் கூடவே வந்து சேர்கிறது. மேலும், ஷேர்-ஆட்டோ டிரைவராக வேலை செய்யும் அவரது நண்பனான மணி (கருணாகரன்) மீண்டும் அவரது வாழ்க்கைக்கு வரும்போது, நிகழ்வுகளின் சுழற்சி மீண்டும் சரவணனின் வாழ்க்கை ஒரு சவாலான சூழ்நிலையில் தள்ளுகிறது. முந்தைய ஜீவி படத்தை போலவே, சரவணன் மீண்டும் பண நெருக்கடியை எதிர்கொள்கிறார், மேலும் அவரது புதிய நண்பர் ஹரி இடமிருந்து எந்த தடயமும் இல்லாமல் கொள்ளையடிக்க முடிவு செய்கிறார். ஆனால் முக்கோணக் கோட்பாடு அவரது வாழ்க்கையை மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பது அவருக்குத் தெரியாது. அதன் பிடியில் இருந்து சரவணன் தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியுமா? இக்கேள்விகளுக்கு விடை சொல்கிறது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் ஜீவி-2.

சரவணன் (வெற்றி)  கதாபாத்திரத்திற்கு ஏற்றதவர் போல் தெரிந்தாலும், அந்த அளவுக்கு உடல் மொழி ஒத்துழைப்பு தர மறுத்துள்ளது.

கருணாகரன் (மணி) நண்பனாக அப்பாவித்தனமாக முழிப்பது, அவருக்கும், திரைக்கதைக்கும் பெரிய பலம். அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி அவரவர் கதாபாத்திரத்துக்கு இரண்டாம் பாகத்திலும் சிறப்பாக செய்துள்ளனர்.
பணக்கார நண்பன் எப்படி இருப்பாரோ அதை அப்படியே முபாஷிர் கதாபாத்திரத்தில் காட்டியிருக்கிறார். போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நாசர் தம்பி ஜவஹர், பார்ப்பதற்கு நாசரையே ஞாபகப்படுத்துகிறார் தவிர நடிப்பின் மூலம் யாரையும் ஈர்க்கவில்லை.

ஆக்ஷன் (சுதீஷ்), கலை இயக்குனர் (உமேஷ் ஜே குமார்), நடன இயக்குனர் (அப்சர்), எடிட்டிங் (பிரவீன் கே.எல்), ஒளிப்பதிவு (பிரவீன் குமார்) மற்றும் இசை (சுந்தரமூர்த்தி கே.எஸ்) இந்த படத்தின் முதுகெலும்பு. இந்தக் கதையை பார்வையாளர்களுக்கு தடையின்றி வழங்க இந்தத் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒன்றுக்கொன்று நன்றாக பூர்த்தி செய்துள்ளனர்.

ஜீவி வி.ஜே.கோபிநாதன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரில்லர் திரைப்படமாகும். ‘ஜீவி” படம் த்ரில்லர் ரசிகர்களின் மனதை கவர்ந்து, பார்வையாளர்களுக்கு கற்பனை செய்ய முடியாத வழிகளில் பயணித்து ஒரு புதிய அனுபவமாக மாறியது. தொடர்பியல் என்பது முதல் பாகத்தில் அதன் போக்கிலேயே போகும். அதைச்சுற்றி திரைக்கதை அமைத்தது போல உணர்த்தினார் இயக்குநர். ஆனால், இந்த இரண்டாம் பாகத்தில் நமக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் தொடர்பியல், முக்கோண விதி, மையப்புள்ளி என தியரிகள் காட்ட வேண்டும் என்பதற்காக திரைக்கதையை எங்கெங்கோ அலைய விட்டிருக்கிறார்; தவிர அது கதையை நகர்த்த பயன்படவில்லை. முதல் பாகம் போல ஜீவி 2 திரைக்கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் ஜீவி 2 இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் புகுத்தி அதிசயங்களைச் செய்திருக்கலாம்.