ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம் : ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கார்த்திக் சுப்புராஜின் கேரியரில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்த மிகச்சிறந்த படம் | ரேட்டிங்: 4/5
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். கதிரேசன் எழுதி தயாரித்திருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
இதில் ராகவா லாரன்ஸ் – அல்லியஸ் சீசர், எஸ்.ஜே.சூர்யா – கிருபாய் (அ) ரே தாஸ், நிமிஷா சஜயன் – மலையரசி, இளவரசு – கார்மேகம், நவீன் சந்திரா – ரத்னா, சத்யன் – துரை பாண்டி, சஞ்சனா நடராஜன் – பைங்கிளி, ஷைன் டாம் சாகோ – ஜெயக்கொடி, அரவிந்த் ஆகாஷ் – சின்னா, அஷ்ரப் மல்லிசேரி – காரியன், வித்து – சேட்டானி ,கபில வேணு – சிந்தாமணி, தமிழ் – ஜோதி, தேனி முருகன் – சங்கையன், பாவா செல்லதுரை – எஸ்.பி.சந்தர்,ஷீலா ராஜ்குமார் – லூர்து, விஷ்ணு கோவிந்த் – முருகன், ஆதித்யா பாஸ்கர் – கோவிந்தன், சுஜாதா – லக்ஷ்மி, ரவி மாஸ்டர் – கதர், மனோஜ் – காளையன், ரத்தினம் – பெரியவர், முத்துப்பாண்டி – மாரி, ஸ்ரீனி – மதன், பழனி – ரவி, ஜெயக்குமார் – சோமு, அசோக் நவீன் – கதிர், யமுனா – ரதி, ராதாகிருஷ்ணன் – முரளி ஆகியோர் நடித்துள்ளனர்.தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை: சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் : எஸ் திருநாவுக்கரசு, எடிட்டர்: ஷபீக் முகமது அலி, தயாரிப்பு வடிவமைப்பாளர்: டி சந்தானம், சண்டைக்காட்சிகள்: திலிப் சுப்பராயன், கலை இயக்குனர்கள்: பாலசுப்ரமணியன், குமார் கங்கப்பன், நடனம்: ஷெரிப் எம், பாபா பாஸ்கர், ஒலி வடிவமைப்பாளர்: குணால் ராஜன், ஒலி கலவை: சுரேன் ஜி, ஆடை வடிவமைப்பாளர்: பிரவீன் ராஜா, ஒப்பனை: வினோத் எஸ், உடை-சுபியர், பாடல் வரிகள்: விவேக், முத்தமிழ் ஆர் எம் எஸ், ஸ்டில்ஸ்: எம் தினேஷ், விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர்: எச் மோனேஷ், நிர்வாகத் தயாரிப்பாளர் : அசோக் நாராயணன் எம், இணை தயாரிப்பாளர்: பவன் நரேந்திரன், இணை தயாரிப்பாளர்கள் கல் ராமன், எஸ் சோமசேகர், கல்யாண் சுப்ரமணியன், அலங்கார பாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார், பிஆர்ஒ-நிகில் முருகன்.
1973 ஆம் ஆண்டு பின்னணியில், அலியஸ் சீசர் (லாரன்ஸ்) மதுரையை சேர்ந்த அரசியல் செல்வாக்கு பெற்ற ஒரு ரவுடி. ஒரு சினிமா ஹீரோவுடன் (அரவிந்த் ஆகாஷ்) எதிர்பாராத சந்திப்பின் போது அலியஸ் சீசரை பார்த்து ‘கருப்பா இருக்குறவன் ஒரு போதும் ஹீரோவாக ஆக முடியாது’ என்று வெறுப்பேத்த, கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் தீவிர ரசிகரான அலியஸ் சீசருக்கு ஹீரோவாகும் ஆசை வருகிறது. மேலும் அவருக்கு ஒரு கதை சொல்ல ஒரு சில இயக்குனர்களை அழைக்கிறார். அவருக்கு சினிமா ஹீரோவாக வேண்டும் என்று ஆசை. ரே தாசன் (எஸ்.ஜே. சூர்யா) சில காரணங்களுக்காக சீசரிடம் தன்னை சத்யஜித் ரே-யிடம் சினிமா கற்ற திரைப்பட இயக்குனர் என்று அறிமுகப்படுத்துகிறார். இருவரும் சேர்ந்து ஒரு கவ்பாய் திரைப்படத்தைத் திட்டமிடுகிறார்கள். புனைகதை போலல்லாமல், அவரது இயல்பான வாழ்க்கைக் கதையை படமாக்கலாம் என்கிறார் ரே தாசன். இருவரும் நினைத்தபடி படம் பிடித்தார்களா? ரே தாசன் யார் அவரது பின்னணி என்ன? எந்த நோக்கத்துடன் ரே தாசன் அலியஸ் சீசருடன் இணைந்தார்? ரே தாசனின் அசல் நகர்வு என்ன? தாசனின் வலையில் விழுந்ததால் லாரன்ஸின் எதிர்காலம் என்ன ஆனது? போன்ற கேள்விகளுக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விடை சொல்கிறது.
ராகவா லாரன்ஸ் ஒரு உன்னதமான ஆன்டி-ஹீரோ-டு-ஹீரோ ஆர்க்கைக் கொண்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் லாரன்ஸை இரண்டு வெவ்வேறு சாயல்களைக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நன்றாக பயன்படுத்தியிருக்கிறார். லாரன்ஸ் தனக்குள்ள நடிகரைக் காட்ட அதிக வாய்ப்பை இது வரை பெறவில்லை, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் அதை பூர்த்தி செய்துள்ளது. கடந்த சில படங்களில் எமோஷனல் காட்சிகளில் அவர் செய்ததை விட இந்த படத்தில் எமோஷனல் காட்சிகளில் அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது, ஏனெனில் அவர் எல்லை மீறிச் செல்லவில்லை. மேலும் கிளைமாக்ஸ்க்கு முந்தைய ஒன்றிரண்டு காட்சிகளில் பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளார்.
நடிப்பு ராட்சசன் எஸ்.ஜே. சூர்யா, வளர்ந்து வரும் திரைப்பட இயக்குனர் ரே தாசன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி மீண்டும் தனது முழுமையான சிறந்த நடிப்பால் ஜொலிக்கிறார். லாரன்ஸுடன் அவரது ஆற்றல்மிக்க ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி படத்தின் பொழுதுபோக்கு மதிப்பிற்கு கணிசமாக பங்களிக்கிறது.
நிமிஷா சஜயனுக்கு தேவையான உணர்ச்சிகரமான ஆழத்தை கொடுக்கும் ஒரு கண்ணியமான மலையரசி கதாபாத்திரம். மற்றும் இளவரசு, நவீன் சந்திரா, சத்யன், சஞ்சனா நடராஜன், ஷைன் டாம் சாகோ, அரவிந்த் ஆகாஷ், அஷ்ரப் மல்லிசேரி, வித்து, கபில வேணு, தமிழ், தேனி முருகன், பாவா செல்லதுரை, ஷீலா ராஜ்குமார், விஷ்ணு கோவிந்த், ஆதித்யா பாஸ்கர், சுஜாதா, ரவி மாஸ்டர், மனோஜ்;, ரத்தினம், முத்துப்பாண்டி, ஸ்ரீனி, பழனி, ஜெயக்குமார், அசோக் நவீன்;, யமுனா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் தங்களின் கணிசமான பங்களிப்பை கொடுத்து ஆழம் சேர்க்கிறார்கள்.
ஒரு படத்தின் வெற்றிக்கு திரைக்குப் பின்னால் இயங்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நிருபிக்கப்பட்டுள்ளது.
கலை இயக்குனர்கள் பாலசுப்ரமணியன், குமார் கங்கப்பன் பங்களிப்பு அற்புதம். அவர்கள் உழைப்பு திரையில் காண முடிகிறது. மேலும் யானைகள் சம்பந்தப்பட்ட வனக் காட்சிகள் உட்பட விஎப்எக்ஸ் காட்சிகள் பார்வைக்கு திடமாக இருக்கிறது.
திலீப் சுப்பராயனின் ஆக்ஷன் காட்சிகள் பிரமாதமாக உருவாக்கப்பட்டுள்ளன.
சந்தோஷ் நாராயணனின் சிறந்த பின்னணி இசையும் படத்தின் தாக்கத்தை மேலும் உயர்த்துகிறது.
எஸ்.திருநாவுக்கரசுவின் அழகான அற்புதமான ஒளிப்பதிவும் பார்வை அனுபவத்தை மேம்படுத்துகின்றன.
ஷபீக் முகமது அலி எடிட்டிங் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.
காவல்துறையின் கெடுபிடிகளுக்கும், அரசியல்வாதிகளின் சதிகளுக்கும் நடுவே காடுகளில் பழங்குடியினரின் வாழ்க்கை நலிந்து கிடக்கிறது. அவர்களைக் காப்பாற்றும் எப்போதும் ஒரு மாவீரன் வருவான்! இந்தப் பின்னணியில் மலைவாழ் மக்களின் வாழ்வியலில் சில உணர்ச்சிகரமான காட்சிகளுடன் பலமான திரைக்கதை அமைத்து சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
மொத்தத்தில் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.கதிரேசன் இணைந்து தயாரித்திருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கார்த்திக் சுப்புராஜின் கேரியரில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்த மிகச்சிறந்த படம்.