ஜாலியோ ஜிம்கானா சினிமா விமர்சனம் : ஜாலியோ ஜிம்கானா ஏமாற்றம் | ரேட்டிங்: 2/5
நடிகர்கள் :
பிரபுதேவா, மடோனா செபாஸ்டின், யோகிபாபு, அபிராமி பார்கவன் , யாஷிகா ஆனந்த், ஒய்.ஜி.மகேந்திரன், மரியா, மதுசூதன் ராவ், ஜான் விஜய், ரோபோ சங்கர், சாய் தீனா, எம்.எஸ்.பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி, சிவா, புஜிதா சக்தி சிதம்பரம், ரெடின் கிங்ஸ்லி, ‘ஆடுகளம்’ நரேன், வினோத், கோதண்டம், கதிர், ஆதவன், மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்குநர் – ஷக்தி சிதம்பரம், தயாரிப்பாளர் – எம்.ராஜேந்திர ராஜன், தயாரிப்பு நிறுவனம் – டிரான்ஸ் இண்டியா மீடியா மற்றும் எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட், கலை இயக்கம் – ஜனார்த்தனன், படத் தொகுப்பு – ‘அசுரன்’, ’விடுதலை’ புகழ் ராமர், ஒளிப்பதிவு – கணேஷ் சந்திரா, நடன இயக்கம் – பூபதி ராஜா, சண்டை இயக்கம் – மகேஷ் மாத்திவ், பிரதீப், பாடல்கள் – மு.ஜெகன் கவிராஜ், பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்.
ஜாலி ஓ ஜிம்கானா படம் ஆரம்பிக்கும் போதே லாஜிக் பார்க்காம சிரிங்க என்று ஒரு குரல்வழியில் தொடங்குகிறது, ஷிவானி (மரியா) தனது வாழ்க்கையில் நடந்ததை ஒரு பாதிரியாரிடம் (யோகி பாபு) விவரிக்கிறார். செல்லம்மா (அபிராமி) மற்றும் அவரது தந்தை ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் மூன்று மகள்களான பவானி (மடானோ செபாஸ்டியன்), யாழினி (அபிராமி பார்கவன்), மற்றும் ஷிவானி (மரியா) ஆகியோருடன் சேர்ந்து வெள்ளைக்காரன் பிரியாணி என்கிற பெயரில் கடன் வாங்கி, ஓட்டல் தொடங்குகிறார்கள். ஓட்டலுக்கு பெரிய ஆர்டர் கொடுக்கும் எம்.எல்.ஏ அடைக்கல ராஜ் (மதுசூதன் ராவ்), பணம் கொடுக்காமல் ஏமாற்றுகிறார். அதனால், சண்டை வர, ஒய்.ஜி.மகேந்திரனின் குடும்பத்தையும், ஹோட்டலையும் அடித்து நொறுக்குகிறார்கள் எம்.எல்.ஏ. அடைக்கல ராஜின் அடியாட்கள். இன்னொரு பக்கம் எம்.எல்.ஏ., போலியாக மருத்துவ முகாம் நடத்தி ஏழை மக்களின் ஆதார் கார்டுகளை சுருட்டி, ஏழைகளின் பெயரில் போலியான மருத்துவக் காப்பீடு எடுத்து ஏழை மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். அப்பாவி மக்களை ஏமாற்றும் எம்.எல்.ஏ. அடைக்கல ராஜின் மருத்துவக் காப்பீடு எதிர்த்து வழக்கு தொடுக்கிறார் வழக்கறிஞர் பூங்குன்றன் (பிரபு தேவா). இந்நிலையில், பூங்குன்றத்திடம் உதவி கேட்க, அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வருகிறது ஒய்.ஜி.மகேந்திரனின் குடும்பம். ஆனால் அங்கே அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடைபெற்றது. வழக்கறிஞர் பூங்குன்றன் உட்கார்ந்த நிலையில் இறந்து கிடக்கிறார். அங்கு ஒய்.ஜி.மகேந்திரனின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போய் செய்வது அறியாது பயத்தில் இருக்கின்றனர். கொலைப்பழியில் இருந்து தப்பிக்க, பூங்குன்றத்தின் பிணத்தோடு ஹோட்டலில் இருந்து தப்பிக்கிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு சில காட்சிகள் மட்டும் வசனம் பேசி உயிருடன் நடித்திருக்கும் பிரபுதேவா 90 சதவீத காட்சிகளில் பிணமாக கச்சிதமாக நடித்துள்ளார்.
செல்லம்மாவாக அபிராமி ஒரு சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.
ஒய்.ஜி.மகேந்திரன், மடானோ செபாஸ்டியன், அபிராமி பார்கவன், மரியா, யோகி பாபு, மதுசூதன் ராவ், ஜான் விஜய், ரோபோ சங்கர், சாய் தீனா, எம்.எஸ்.பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி, சிவா, புஜிதா சக்தி சிதம்பரம், ஆகியோர் மிக சுமாரான திரைக்கதைக்கு அவர்கள் திறமை வீணடிக்கப்பட்டுள்ளது.
அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசை – பின்னணி இசை, ஜனார்த்தனன் கலை இயக்கம், ராமர் படத் தொகுப்பு, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு, பூபதி ராஜா நடனம், மகேஷ் மாத்திவ், பிரதீப் சண்டை இயக்கம் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பும் அபத்தமான திரைக்கதையால் எடுபடவில்லை.
வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு (நகைச்சுவையும் சேர்த்து) நகர்த்தி வருகிறார்கள். இந்நிலையில், காலாவதியான, அர்த்தமற்ற நகைச்சுவை களத்தை நகைச்சுவை என்ற பெயரில ஒரு சடலம், நான்கு பெண்கள் என ஒற்றை வரியில் கையாண்டிருக்கிறார் இயக்குநர் சக்தி சிதம்பரம். இயக்குனரின் முந்தைய படங்கள் உணர்ச்சிகரமான ஃப்ளாஷ்பேக் மற்றும் நகைச்சுவையுடன் அனைவரையும் மகிழ்விக்கும். ஆனால் ஜாலியோ ஜிம்கானாவில், பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை முற்றிலும் ஏமாற்றியுள்ளார்.
மொத்தத்தில் ட்ரான்சிண்டியா மீடியா, என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் ராஜன் மற்றும் நீலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ஜாலியோ ஜிம்கானா ஏமாற்றம்.