சேத்துமான் விமர்சனம்: ஆதிக்க சாதி மனிதர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டாலும், பூச்சி போன்றவர்கள் தான் பலியாகின்றனர் என்பதை உணர்த்தும் படம் ‘சேத்துமான்’ | ரேட்டிங் – 3/5

0
174

சேத்துமான் விமர்சனம்: ஆதிக்க சாதி மனிதர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டாலும், பூச்சி போன்றவர்கள் தான் பலியாகின்றனர் என்பதை உணர்த்தும் படம் ‘சேத்துமான்’ | ரேட்டிங் – 3/5

நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில், மாணிக்கம், அஸ்வின், பிரசன்னா பாலசந்திரன், சுருளி,  குமார், சாவித்திரி, கன்னிகா, அண்ணாமலை, நாகேந்திரன், குருநடிப்பில் உருவாகி  இருக்கும் திரைப்படம் சேத்துமான். இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது.
ஒளிப்பதிவு- பிரதீப் காளிராஜா, இசை – பிந்து மாலினி, எழுத்து: தமிழ், பெருமாள் முருகன், பிஆர்ஒ-குணா

இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமம் தான் படத்தின் கதைக்களம். ஆதிக்க சாதியினர் வாழும் பகுதியில் நான்கைந்து மாடுகள் திடீரென்று இறந்துவிட, அதை ஒடுக்கப்பட்ட மக்களிடம் கொடுக்க அதை அவர்கள் சமைத்து சாப்பிடுகிறார்கள். அச்சமயம் ஆதிக்க சாதியினருக்கு மாடுகளின் மரணத்தில் சந்தேகம் ஏற்படுகிறது. கறி தின்பதற்காகத்தான் அவர்கள் மாடுகளை விஷம் வைத்துக் கொன்றிருப்பார்கள் என்று எண்ணி, ஒடுக்கப்பட்டவர்களின் குடியிருப்பை சூறையாடுகின்றனர். அந்த கலவரத்தில் தாயையும் தந்தையும் இழந்தநிலையில் குழந்தை ஒன்று பிறக்கிறது. அந்த குழந்தையை வளர்த்தெடுக்கிறார் குழந்தையின் தாத்தாவான பூச்சியப்பா. அவரே சிறுவனுக்கு (குமரேசன்) முழு உலகமாக இருக்கிறார்.  குமரசேனை எப்படியாவது படிக்க வைத்து, நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என ஓயாது உழைக்கிறார் பூச்சியப்பா. கூடைப் பின்னி சந்தையில் விற்று பணம் சம்பாதிக்கும் அவர், அந்த ஊரில் உள்ள பண்ணையாரான வெள்ளையனுக்கு (பிரசன்னா பாலசந்திரன்) உதவியாகவும் இருந்த வருகிறார். பண்ணையார் வெள்ளையனுக்கு ஒருநாள் சேத்துமான் கறி (பன்றிக்கறி) சமைத்துச் சாப்பிட ஆசைப்பட்டு அவரது குழுவும் இணைந்து சேத்துமான் கறி (பன்றிக்கறி) சாப்பிட  ஆள் சேர்க்கிறார். அந்தக் கறியை பக்குவமாக சமைத்துக் கொடுக்கும் பொறுப்பை ; பூச்சியப்பன் ஏற்கிறார். கறி சமைக்கும் இடத்திற்கு சிறுவன் குமரேசனும் உடன் செல்கிறார். அதை சுவையாக சமைத்து கொடுக்கிறார் பூச்சியப்பன். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன, பேரனை ஆசைப்பட்ட மாதிரி  பூச்சியப்பா படிக்க வைத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

தாத்தா பேரனுக்கிடையே இருக்கும் எல்லையில்லா பாசப்பிணைப்பு கொண்ட கதைக்கு தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாணிக்கம், பேரனாக வரும் அஸ்வின் இடையிலான உறவை இருவரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி படத்துக்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளனர்.

பண்ணையார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரசன்னா பாலசந்திரன் பண்ணையாருக்கே உரித்தான உடல்மொழியில் அசத்தியிருக்கிறார். அத்துடன் சுப்ரமணி கதாபாத்திரத்தில் நடித்த சுருளி, ரங்கனாக வரும் குமார், வெள்ளையன் மனைவியாக வரும் சாவித்திரி ஆகியோர் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவும், பிந்து மாலினியின் இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது.

பெருமாள் முருகனின் கவனிக்க வைக்கும் வசனங்கள், மற்றும் தத்ரூபமாக காட்சிபடுத்தப்பட்ட சண்டைக் காட்சிகள் படத்திற்கு பெருந்தூண்.

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’ சிறுகதை. படத்தின் மைய உறவு, நிச்சயமாக, பூச்சிக்கும் அவரது பேரனுக்கும் இடையிலான உறவுதான். ஆனால் வெள்ளையனுக்கும் பூச்சிக்கும் இடையே உள்ள மாறும் தன்மையும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. அழுத்தமான கதையில் இரண்டு ஆதிக்க சாதி மனிதர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டாலும், பூச்சியைப் போன்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பமை மைய கருவாக வைத்து தெறிக்கும் காமெடி மற்றும் கவனிக்க வைக்கும் வசனங்களுடன் திரைக்கதை அமைத்து கச்சிதமாகச் இயக்கிய அறிமுக இயக்குநர் தமிழ் பராட்டுக்குறியவர் ஆவார். வெல்கம் டூ வெள்ளித்திரை தமிழ்.

மொத்தத்தில் நீலம் புரொடக்ஷன் தயாரித்துள்ள படத்தில் ஆதிக்க சாதி மனிதர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டாலும், பூச்சி போன்றவர்கள் தான் பலியாகின்றனர் என்பதை உணர்த்தும் படம் ‘சேத்துமான்’.