செவ்வாய்க்கிழமை சினிமா விமர்சனம் : செவ்வாய்க்கிழமை கண்டிப்பாக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் | ரேட்டிங்: 3/5

0
233

செவ்வாய்க்கிழமை சினிமா விமர்சனம் : செவ்வாய்க்கிழமை கண்டிப்பாக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் | ரேட்டிங்: 3/5

நடிகர்கள்:
பாயல் ராஜ்புத், ஸ்ரீதேஜ், நந்திதா ஸ்வேதா, அஜ்மல் அமீர், சைதன்ய கிருஷ்ணா, அஜய் கோஷ், லக்ஷ்மன் மற்றும் பலர்.
குழுவினர்:
டிஜிட்டல் மார்க்கெட்டிங்: பேச்சு ஸ்கூப்
நிர்வாக தயாரிப்பாளர்: சாய்குமார் யாதவில்லி
எடிட்டர்: குல்லப்பள்ளி மாதவ் குமார்
உரையாடல் எழுத்தாளர்கள்: தாஜுதீன் சையத், ராகவ்
கலை இயக்குனர்: மோகன் தல்லூரி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ரகு குல்கர்னி
தயாரிப்பு: சுவாதி ரெட்டி குணபதி மற்றும் சுரேஷ் வர்மா எம்
பைட் மாஸ்டர்கள்: ரியல் சதீஷ், பிருத்வி
ஒலி வடிவமைப்பாளர் மற்றும் ஒலிப்பதிவு: தேசிய விருது பெற்ற ராஜா கிருஷ்ணன்
ஒளிப்பதிவாளர்: தாசரதி சிவேந்திரா
நடன இயக்குனர்: பானு
ஆடை வடிவமைப்பாளர்: முடாசர் முகமது
இசையமைப்பாளர்: பி அஜனீஷ் லோக்நாத்
கதை, திரைக்கதை, இயக்கம்: அஜய் பூபதி.
லட்சுமிபுரம் என்ற கிராமத்தில் ஜமீன்தார் மற்றும் அவரது மனைவி  செல்வாக்குடன்  வாழ அவர்களுக்கு ஊர் மக்கள் கட்டுப்பட்டு வசிக்கிறார்கள். அந்த ஊரில் மர்ம மனிதர் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பொது சுவரில், ஊரில் உள்ள ஏதோ இருவருக்கு கள்ளக்காதல் என்று எழுதி  வைக்கின்றார். அன்றைய தினமே அவர்கள் இருவரும் மர்மமான முறையில்  இறந்து கிடக்கிறார்கள். அதற்கு அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை இதே போன்ற ஒரு சம்பவம் நடக்கிறது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை குறி வைத்து இந்த சம்பவம் நடப்பதால் அடுத்த செவ்வாய்க்கிழமை பலியாகப் போவது யாரோ என்ற அச்சத்தில் மக்கள் தவிக்கிறார்கள். இந்த வழக்கை விசாரிக்க வருகிறார் நந்திதா ஸ்வேதா. அது தற்கொலைகள் அல்ல, திட்டமிட்ட கொலைகள் என்று  போலீஸ் அதிகாரி நந்திதா ஸ்வேதா சந்தேகப்படுகிறார். அவர் விசாரணையில் இது கொலையா? தற்கொலையா? என்பதை கண்டுபிடித்தாரா? செவ்வாய்க்கிழமை குறி வைத்து அத்தகைய சம்பவம் நடைபெறுவது ஏன்? செவ்வாய்க்கிழமைக்கும் கொலைக்கும் என்ன தொடர்பு? சுவற்றில் எழுதும் மர்ம நபர் யார் அவரின் நோக்கம் என்ன? போன்ற கேள்விகளுக்கு நாயகி பாயல் ராஜ்புத்தின் பிளாஷ்பேக் பதில் சொல்லும்.

கதையின் நாயகியாக பாயல் ராஜ்புட். பாயல் ராஜ்புத் இதுவரை கண்டிராத ஒரு வழக்கத்திற்கு மாறான சவாலான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். நிம்போமேனியா என்று அழைக்கப்படும் அதீத பாலுணர்வு பிரச்சனையால் பாதிக்கப்பட்டதால், தன் ஆசைக்கு ஏற்ப எல்லோருடனும் படுக்கையை பகிரும் அத்தகைய பாத்திரத்தில் நடிக்க தைரியம் வேண்டும். அத்துடன் முக்கியமான தருணங்களில் கண்கலங்க வைத்துள்ளார் பாயல் ராஜ்புட்.

கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக அஜ்மல் அவரை காதலித்து ஏமாற்றுபவராக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் தான் கதையின் முக்கிய கரு.

நந்திதா ஸ்வேதா எஸ் ஐ வேடத்தில் முரட்டுத்தனமாகவும் கம்பீரமாக இருக்கிறார்.

ஸ்ரீதேஜ், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லக்ஷ்மன், ரவீந்திர விஜய் மற்றும் திவ்யா பிள்ளை என அனைவரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு மிகை இல்லாத நடிப்பை கொடுத்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமையில் இரண்டாவது ஹீரோ காந்தாரா படத்திற்கு இசையமைத்த அஜனீஷ் லோக்நாத். அவரது பின்னணி இசை இந்த த்ரில்லரின் இதயமும் ஆன்மாவும் ஆகும்.

குல்லப்பள்ளி மாதவ் குமார் எடிட்டிங் வேலையும் மிக அருமை.

தாசரதி சிவேந்திராவின் ஒளிப்பதிவு பணியும் படம் முழுவதும் சிறப்பாக இருந்து பல உணர்சிகரமான காட்சிகளை உயர்த்தி நிறுத்தி உள்ளது.

நிம்போமேனியா என்று அழைக்கப்படும் அதீத பாலுணர்வு பிரச்சனை மையக்கருவாக வைத்து, அந்த பிரச்சனை உள்ளவர்களை நோயாளிகளாக தான் பார்க்க வேண்டும் என்ற கருத்தையும் ஒரு திரில்லர் பாணியில் இந்திய சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதை சைலுவின் கதாபாத்திரத்தின் மூலம் சொல்லி திரைக்கதையில் பல திருப்பங்களை வைத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து இருக்கிறார் இயக்குனர் அஜய் பூபதி. கதையை விவரிப்பதற்கு இயக்குனர் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் திறமையை சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்.

மொத்தத்தில் சுவாதி ரெட்டி குணபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் இணைந்து தயாரித்துள்ள செவ்வாய்க்கிழமை கண்டிப்பாக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும்.