செல்ல குட்டி விமர்சனம் : செல்ல குட்டி காதலியின் வாழ்க்கை போராட்டம் | ரேட்டிங்: 2/5
ஸ்ரீ சித்ரா பௌர்ணவி ஃபிலிம் சார்பில் வி.மணிபாய் தயாரிப்பில், புதுமுகங்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ், புதுமுக நடிகைகள் தீபிக்ஷா, சிம்ரன் இவர்களுடன் சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா, திடியன், சாப்ளின் பாலு, மணி, லக்ஷ்மி, புஷ்பதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்க சகாயநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செல்ல குட்டி’.
இப்படத்தின் பாடல்களுக்கு டி.எஸ்.முரளிதரன் இசையமைத்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் சிற்பி பின்னணி இசையமைத்துள்ளார். பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஓம்பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாபி ஆண்டனி நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.மக்கள் தொடர்பு:-ஜே.கார்த்திக்
ஒரே வகுப்பில் படிக்கும் பள்ளி நண்பர்கள் சிவா, சூர்யா, செந்தாமரை. அனாதையான சிவா நன்றாக படிக்கும் மாணவன் என்பதால் நன்றாக பழகுகிறார் செந்தாமரை அதை காதல் என்று நினைக்கிறார் சிவா. தன் காதலை நண்பன் சூர்யா மூலம் செந்தாமரைக்கு சிவா தெரியபடுத்துகிறார். செந்தாமரை தான் சிவாவை காதலிக்கவில்லை சூர்யாவைத்தான் காதலிக்கிறேன் என்று சொல்ல, குழப்பத்தில் ஆழும் சூர்யா, நண்பன் சிவாவிற்காக செந்தாமரையின் காதலை ஏற்க மறுத்து நட்பாக தொடரலாம் என்று சொல்லி விடுகிறான். இதனால் மனமுடையும் செந்தாமரை சிவாவிடம் சரியாக பேசாமல் வெறுப்பை காட்டுகிறார். சிவா காதல் தோல்வியால் சரியாக படிப்பில் கவனம் செலுத்தாமல் போவதால் ப்ளஸ் டூ தேர்வில் தோல்வியடைகிறார் மற்ற நண்பர்கள் அனைவரும் தேர்வில் தேர்ச்சியாகின்றனர். கல்லூரியில் சேரும் நண்பர்களை பார்த்து மனம் திருந்தாமல் காதல் மயக்கத்திலேயே செந்தாமரையை சுற்றி சுற்றி வருகிறார். ஒரு கட்டத்தில் செந்தாமரைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட, சிவா என்ன செய்தார்? செந்தாமரைக்கு திருமணம் முடிந்ததா? அதன் பின் என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.
புதுமுகங்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ், புதுமுக நடிகைகள் தீபிக்ஷா, சிம்ரன் இவர்களுடன் சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா, திடியன், சாப்ளின் பாலு, மணி, லக்ஷ்மி, புஷ்பதா ஆகியோர் சிறப்பான பங்களிப்பு படத்திற்கு பலம்.
டி.எஸ்.முரளிதரன் இசை, பிரபல இசையமைப்பாளர் சிற்பி பின்னணி இசை, பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு, ஓம்பிரகாஷ் சண்டை , பாபி ஆண்டனி நடனம்; என்று அனைவரின் உழைப்பும் படத்தில் பளிச்சீடுகிறது.
90களின் காலகட்டத்தில் நடக்கும் முக்கோணக் காதல் கதையில் காதலர்களின் போக்கால் காதலியின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களே படத்தின் மையக்கதையாக இயக்கியுள்ளார் சகாயநாதன். இதில் நட்பால் காதல் பிரிவதும், அந்த நட்பு ஏற்படுத்தும் இன்னல்களை ஒரு பெண் எப்படி அவதிப்படுகிறாள் இதனால் வாழ்க்கை பாதிக்கப்படுவதை சொல்லி, விருப்பமில்லாத பெண்ணிடம் காதலை வற்புறுத்துவது தவறு என்பதை ஆணித்தரமாக பதிய வைக்க முயற்சித்திருக்கிறார் சகாயநாதன்.
மொத்தத்தில் ஸ்ரீ சித்ரா பௌர்ணவி ஃபிலிம் சார்பில் வி.மணிபாய் தயாரித்திருக்கும் செல்ல குட்டி காதலியின் வாழ்க்கை போராட்டம்.