செஞ்சி விமர்சனம் : செஞ்சி – பிரகாசம் இல்லை | ரேட்டிங்: 2/5
அறிமுக இயக்குனர் கணேஷ் சந்திரசேகர் இப்படத்தை இயக்கி நடித்துள்ளார். மாஸ்கோவைச் சேர்ந்த கெசன்யா என்கிற மாடல் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். ஏலியன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்கிரீன் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. பெங்களுரைச் சேர்ந்த ஹரீஷ் ஜிண்டே ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.வி. முத்து கணேஷ் இசை அமைத்துள்ளார். ஆனந்த் மற்றும் உன்னி கிருஷ்ணன் படத்தொகுப்பு செய்துள்ளனர்.
செஞ்சி படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்
பிரெஞ்சு கர்னல் சேவியரின் பேத்தி, சோபியா, தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு தனது மூதாதையர் வீட்டை வந்தடைகிறாள். வீட்டில் நுழையும் போதே ஒரு கெட்ட சகுனம் வருகிறது. ஆனால் அவள் அதைப்பற்றி கவலைப்படாமல் உள்ளே நுழைகிறாள். அதன் பின் அந்த வீட்டில் எதிர்பாராதவிதமாக ஒரு ரகசிய அறையை பார்க்கிறாள். அந்த அறைக்குள் நிறைய பழங்கால கலைப்பொருட்கள் எல்லாம் இருக்கின்றன. சோபியா அவற்றை ரசித்துப் பார்த்து கொண்டிருக்கும் போது அங்கே ஏதோ ஒரு அமானுஷ்யம் அவளுக்குத் தட்டுப்படுகிறது. அங்கே ஓலைச் சுவடி சோபியா கையில் கிடைக்கின்றது. பயத்திலிருக்கும் அவள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கையில் இருக்கும் ஓலைச்சுவடியில் ஏதோ ரகசியம் இருப்பதாக தோன்றவே அதை தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் ஜாக் ஆண்டர்சனை (கணேஷ் சந்திரசேகர் ) சந்தித்து இதுபற்றி விவரிக்கிறாள். அவர் பண்டைய வீட்டில் அறியப்படாத புதையலுக்கு வழிவகுக்கும் ரகசிய பனை எழுத்துக்களைக் படித்து அதற்குள் ஏதோ ஒரு ரகசியம் புதைந்திருப்பதாக தெரிவித்து, மேலும் அதில் ஒரு புதையலுக்கான ரகசிய குறியீடுகள் உள்ளதை கண்டுபிடிக்கிறார். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு அந்த புதையல் இருக்கக்கூடிய இடத்துக்கு போவதற்கான ஒரு வரைபடம் கிடைக்கிறது. அந்த வரைபடத்தை வைத்துக்கொண்டு கிடைத்த குறியீடுகளின்படி பெண் உதவியாளர் மற்றும் சோபியாவுடன் இணைந்து தேட ஆரம்பிக்கிறார். அந்த மேப்பை வைத்து, புதையலை தேடி எந்;த இடத்திற்கெல்லாம் சென்றார்கள்? அதற்கு நடுவில் அவர்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளை எல்லாம் சந்தித்தார்கள்? ஜாக்கின் உதவியுடன், சோபியா அந்த புதையல் இருக்கக்கூடிய இடத்துக்கு போய் அந்தப் புதையலை கண்டுபிடித்தார்களா இல்லையா? புதையலின் சாவியை கண்டுபிடித்தாலும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களால் தான் அந்த புதையலை அடைய முடியும் என்பதால் யார் உதவினார்கள்? என்பதுதான் படத்தின் மீதிகதை.
கணேஷ் சந்திரசேகர் அவரே தயாரித்து இயக்கி நடித்திருக்கிறார். கணேஷ் சந்திரசேகர் தன்னால் முடிந்தவரை சிறப்பாக இந்த படத்தில் கொடுக்க முயன்றுள்ளார். செஞ்சி என்றாலே அதில் உள்ள மர்மங்களும் புதைக்கப்பட்ட வரலாற்று அதிசயங்களும் தான் நினைவிற்கு வரும். ஆனால் கதை, திரைக்கதை, நடிப்பு அனைத்திலும் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் புதையலை தேடிச் செல்கிற பயணம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
வெளிநாட்டிலிருந்து வரும் ஆங்கிலேயப் பெண்மணியாக ரஷ்ய நடிகை கெசன்யா நடித்துள்ளார். இயக்குநரை விட அந்த நடிகை மிகச்சிறப்பாக நடித்து உள்ளார்.
படத்தில் சுட்டித்தனம் செய்யும் அந்த ஐந்து சிறுவர்களும் மாஸ்டர். சாய் ஸ்ரீனிவாசன், மாஸ்டர் தர்சன் குமார், மாஸ்டர் விதேஷ் ஆனந்த், மாஸ்டர் சஞ்சய், பேபி தீக்ஷன்யா மனதில் பதிகிறார்கள்.
எல்.வி.முத்து கணேஷின் இசை மற்றும் பின்னணி இசை, எடிட்டர்ஸ் ஆனந்த் ஜெரால்டு, கிருஷ்ணன் உன்னி, ஒளிப்பதிவாளர் ஹரிஷ் ஜிண்டே ஆகியோர் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் பேசப்பட்டு இருக்கும்.
மொத்தத்தில் செஞ்சி – பிரகாசம் இல்லை.