சூது கவ்வும் 2 சினிமா விமர்சனம் : சூது கவ்வும் 2 நகைச்சுவை என்ற பெயரில் படம் முழுக்க போதையில் தள்ளாடும் சிரிப்பே வராத காமெடி படம் | ரேட்டிங்: 2/5

0
498

சூது கவ்வும் 2 சினிமா விமர்சனம் : சூது கவ்வும் 2 நகைச்சுவை என்ற பெயரில் படம் முழுக்க போதையில் தள்ளாடும் சிரிப்பே வராத காமெடி படம் | ரேட்டிங்: 2/5

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் சார்பில் சி வி குமார் மற்றும் எஸ் தங்கராஜ் இணைந்து தயாரித்திருக்கும் சூது கவ்வும் 2 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.ஜெ.அர்ஜுன்.

இதில் சிவா – குருநாத்,  ஹரிஷா ஜஸ்டின் – அம்மு, கருணாகரன் – அருமை பிர​காசம், வாகை சந்திர சேகர் – கண்ணபிரான்,பாஸ்கர் – ஞாநோதயம், கவி – அசால்ட், கல்கி – காலி, அருள் தாஸ் – ரவுடி டாக்டர், யோக் ஜேபி – பிரம்மா, கராத்தே கார்த்தி – தேவனாயகம், ராதா ரவி – சத்ய சீலன் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசை (பாடல்கள்): எட்வின் லூயிஸ் விஸ்வநாத், இசை (பின்னணி): ஹரி எஸ்.ஆர், ஒளிப்பதிவாளர் -கார்த்திக் கே தில்லை, எடிட்டர்: இக்னேஷியஸ் அஸ்வின் , பாடல் வரிகள்:   லா வரதன், ஆண்ட்ரூஸ், பார்த்திபன், ஆடை வடிவமைப்பாளர்: ஸ்வேதா தங்கராஜ்,நிர்வாக தயாரிப்பாளர்கள்: ஆர்.ராகேஷ், ஹரிஹரன், சந்தோஷ், ஒலி வடிவமைப்பு:  சுகுமார் நல்லகொண்டா, ஸ்ரீகாந்த் சுந்தர், ஒலி கலவை: ஜெய்சன் ஜோஸ், டேனியல் ஜெபர்சன், விளம்பர எடிட்டர்: ரமேஷ் யுவி , பிஆர்ஓ – நிகில் முருகன்

குருநாத் (சிவா) மற்றும் கோ தாஸின் (விஜய் சேதுபதி) பாதையைப் பின்பற்றுவதற்கு முன்பே நெறிமுறை குற்ற விதிகளை அமைத்த அசல் கடத்தல்காரர். முதல் பாகத்தில் அமைச்சர் அருமை பிரகாசம் (கருணாகரன்) அரசியலில் என்ட்ரி கொடுத்து பின்பு நிதி அமைச்சராக மக்களால் 3 முறை தேர்வு செய்யப்படுகிறார். இவர் ஊழல் செய்து ஒரு கட்டத்தில் மாட்டிக்கொள்கிறார். இந்நிலையில், தனது தந்தை ஞானோதயத்தின் (எம்.எஸ்.பாஸ்கர்) கோபத்தை சம்பாதித்த நிதியமைச்சர் அமைச்சர் அருமை பிரகாசம் வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் தனது கட்சியின் வெற்றிக்காக ‘கேம் ஆப்’ மூலமாக மக்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை அள்ளலாம் ஒரு புதுமையான யோசனையை முன்வைக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். அப்படி இருக்க பல ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஆளுங்கட்சி நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான கண்ணபிரானுக்கு (வாகை சந்திரசேகர்) திடீரென நினைவு திரும்புகிறது. ஊழல்வாதியான (சத்யசீலன்) ராதாரவி முதல்வராக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். கோபம் அடந்த கண்ணபிரான் சத்யசீலனுக்கு எதிராகக் கட்சி ஆரம்பிக்கிறார். இந்நிலையில் குருநாத் 2024 இல் சிறையிலிருந்து திரும்பியதும், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மீண்டும் தொழிலை தொடங்குகிறார். நிதியமைச்சர் அமைச்சர் அருமை பிரகாசத்தை குருநாத்தும் கூட்டாளிகளும் கடத்துகின்றனர்.அதன்பிறகு பழிவாங்க துடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரி பிரம்மா (யோக் ஜேபி). மற்றும் மூன்று குண்டர்களுடன் நடக்கும் பரபரப்புடன் கூடிய குழப்பம் தான் படத்தின் மீதிக்கதை.

சிவாவின் வழக்கமான வேடிக்கையான நகைச்சுவையை குருநாத் கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தி உற்சாகப்படுத்த முயற்சிக்கிறார் ஆனால் அவரது கதாபாத்திரத்தின் எழுத்து வடிவம் படம் முழுக்க புகைத்துக் கொண்டு போதையில் தள்ளாடுகிறது.

ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், வாகை சந்திரசேகர், ஹரிஷா ஜஸ்டின், அருள்தாஸ், யோக் ஜேபி, கவி, கல்கி, கராத்தே கார்த்தி உட்பட அனைத்து அனுபவமிக்க நடிகர்களின் பங்களிப்பு குளறுபடியான திரைக்கதையால் வீணடிக்கப்படுகிறது, அவர்களின் இருப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசை மற்றும் ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசை பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே.தில்லையின் பிரேம்கள் முதல் பாகத்தின் ஒளியுணர்வை ஞாபகப்படுத்துகிறது.

எடிட்டர் இக்னேஷியஸ் அஷ்வின் பலவீனமான திரைக்கதையை கஷ்டப்பட்டு தொகுத்துள்ளார்.

அரசியல் நையாண்டி, மற்றவர்களின் கண்ணுக்குத் தெரியாத கற்பனை, போதை குறைந்தால் தெரியும் பாம்பு, காதலி, ‘சூது கவ்வும் 2’ -ல் டார்க் காமெடியாக வடிவமைக்க முயற்சித்து சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை அமைத்து பார்வையாளர்களை ஏமாற்றி விட்டார் இயக்குனர் எஸ்.ஜெ.அர்ஜுன்.

மொத்தத்தில் சூது கவ்வும் 2 நகைச்சுவை என்ற பெயரில் படம் முழுக்க போதையில் தள்ளாடும் சிரிப்பே வராத காமெடி படம்.