சுழல் 2 வோர்டெக்ஸ் வெப் சீரீஸ் விமர்சனம் : ‘சுழல் 2’ ஒரு ஈர்க்கக்கூடிய மற்றும் நன்கு செயல்படுத்தப்பட்ட க்ரைம் திரில்லர் | ரேட்டிங்: 3.5/5
நடிகர்கள் :
கதிர் – சக்கரை
ஐஸ்வர்யா ராஜேஷ் – நந்தினி
லால் – செல்லப்பா
சரவணன் – மூர்த்தி
மஞ்சிமா மோகன் – நாகம்மா
கயல் சந்திரன் – ரவி
கௌரி கிஷன் – முத்து
சம்யுக்தா விஸ்வநாதன் – நாச்சி
மோனிஷா பிளெஸ்சி – முப்பி
ஷிரிஷா-வீரா
அபிராமி போஸ் – செண்பகம்
நிகிலா சங்கர் – சந்தனம்
ரினி – காந்தாரி
கலைவாணி பாஸ்கர் – உலகு
சாந்தினி தமிழரசன் – பிரியம்வதா
அஸ்வினி நம்பியார் – மாலதி
அர்ஷ்ய லக்ஷ்மன் – சரோஜா
ஓ.ஏ.கே.சுந்தர் – திருவேங்கடம்
பாண்டி ரவி – எம்எல்ஏ அரசு
தொழில்நுட்பக் குழு :
எழுத்து – உருவாக்கம் : புஷ்கர் – காயத்ரி
இயக்குநர்கள் : பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம்
இசை : சாம் சி எஸ்
ஒளிப்பதிவு : ஆபிரகாம் ஜோசப்
படத் தொகுப்பு : ரிச்சர்ட் கெவின்
சண்டை பயிற்சி : தினேஷ் சுப்பராயன் – திலீப் சுப்பராயன் – மிரக்கிள் மைக்கேல்
ஆடை வடிவமைப்பு : சுபஸ்ரீ கார்த்திக் விஜய்
தயாரிப்பு நிறுவனம் : வால்வாட்சர் ஃபிலிம்ஸ் அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல்
சுழல் வோர்டெக்ஸ் 2 இணைய தொடரின் முதல் பாகம், முதல் எபிசோட் ஆரம்பம் முதலே சுவாரசியம் குறையாமல் கொண்டுபோய் ஒரு சூப்பர் ட்விஸ்ட்டுடன் வெளியாகி வரவேற்பு பெற்றநிலையில் அதன் தொடர்ச்சியாக சுழல் 2 உருவாகி உள்ளது. இரண்டாவது சீசனும் காளிப்பட்டினத்தின் வருடாந்திர அஷ்டகாளி விழாவின் பின்னணியைக் கொண்டுள்ளது. நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்) தனது சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்த தன் சொந்த சித்தப்பாவை கொலை செய்ததற்காக சிறைக்கு செல்கிறார். சிறையில் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்ளும் போது தனது கடந்த காலத்துடன் போராடுகிறார். நந்தினியின் நண்பரான சப்-இன்ஸ்பெக்டர் சக்கரை (கதிர்) அவருக்கு வாதாடுவதற்காக பிரபல வழக்கறிஞர் செல்லப்பா (லால்), உதவியை நாடுகிறார். கோர்ட்டில் வழக்கு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், வழக்கறிஞர் செல்லப்பா தனது தனிப்பட்ட கெஸட் ஹவுசில் கொடூரமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார். ஏற்கனவே சப்-இன்ஸ்பெக்டர் சக்கரையின் சர்வீஸ் ரிவால்வரை நந்தினி கொலை செய்ய ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதால் சக்கரை விசாரணையில் இருந்தாலும், இந்த கொலை வழக்கை விசாரிக்க அவரிடம் ஒப்படைக்கபடுகிறது. அவருக்கு ஏற்கனவே சப்-இன்ஸ்பெக்டர் சக்கரையை வெறுக்கும் இன்ஸ்பெக்டர் மூர்த்தி (சரவணன்) ஒத்துழைப்பு தரவேண்டும் என்று உயர் அதிகாரி கூறகிறார்.இந்த கொலை வழக்கை சப்-இன்ஸ்பெக்டர் சக்கரை தலைமை தாங்கி விசாரணையைத் தொடங்குகிறார். அப்போது கெஸட் ஹவுசில் உள்ள கப்போட்டில் முத்து (கௌரி கிஷன்) கைதுப்பாக்கியுடன் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது, சக்கரை மற்றும் குழுவினரால் முத்து கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார். விசாரணையின் போது சரியான துப்பு கிடைக்காததால் அனைவரும் மிகுந்த குழப்பத்துடன் இருக்கின்றனர். மேலும் கதைக்களம் விரிவடையும் போது வெவ்வேறு ஊர்களில் இருந்து ஏழு பெண்கள் சம்யுக்தா விஸ்வநாதன் (நாச்சி), மோனிஷா ப்ளெஸ்ஸி (முப்பி), ரினி (காந்தாரி), ஷிரிஷா (வீரா), அபிராமி போஸ் (செண்பகம்), நிகிலா சங்கர் (சந்தனம்), கலைவாணி பாஸ்கர் (உலகு) கொலையாளி என்று கூறி சரணடைகிறார்கள். கதைக்களம் விரிவடையும் போது இந்த கொலைக்கும் 8 இளம்பெண்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிகிறது. இந்த எட்டு பெண்களும் நந்தினி இருக்கும் அதே சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அங்கு இவர்களுக்கு என்ன நடக்pறது? அந்த எட்டு இளம்பெண்கள் யார்? வழக்கறிஞர் செல்லப்பாவுக்கும் அந்த எட்டு பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதே மீதிக்கதை.
நடிகர்கள் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் சீசனில் இருந்து சக்கரை மற்றும் நந்தினியாக தங்கள் வேடங்களில் சுழல் 2-ல் மீண்டும் தொடர்கிறார்கள். இருவரின் திடமான நடிப்பும் உணர்ச்சிபூர்வமான தொடர்பும் கதைக்கு வலுசேர்த்துள்ளது.
அமைதியும் நிதானமும் கொண்ட வழக்கறிஞராக தனது தனித்துவமான நடிப்பால் கதையின் முதுகெலும்பாக லால் தனித்து நிற்கிறார்.
உள்ளூர் காவல் நிலைய ஆய்வாளர் மூர்த்தியாக சரவணன், தனது இயல்பான வெளிப்பாடுகள் மற்றும் உடல் மொழியால் காட்சிகளில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
மஞ்சிமா மோகன் (நாகம்மா), கயல் சந்திரன் (ரவி), கௌரி கிஷன் (முத்து), சம்யுக்தா விஸ்வநாதன் (நாச்சி), மோனிஷா பிளெஸ்சி (முப்பி), ஷிரிஷா (வீரா), அபிராமி போஸ் (செண்பகம்), நிகிலா சங்கர் (சந்தனம்), ரினி (காந்தாரி, கலைவாணி பாஸ்கர் (உலகு), சாந்தினி தமிழரசன் (பிரியம்வதா), அஸ்வினி நம்பியார் (மாலதி), அர்ஷ்ய லக்ஷ்மன் (சரோஜா), ஓ.ஏ.கே.சுந்தர் (திருவேங்கடம்), பாண்டி ரவி (எம்எல்ஏ அரசு) அனைவரும் தங்கள் பாத்திரங்களுக்கு நேர்த்தியான பங்களிப்பை தந்து ஒவ்வொரு காட்சியையும் பரபரப்பான காட்சியாக மாற்றுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆபிரகாம் ஜோசப், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், எடிட்டர் ரிச்சர்ட் கெவின் ஏ. உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் பணியும் க்ரைம் த்ரில்லர் கதையின் கதைக்களத்திற்கு விறுவிறுப்பை சேர்த்துள்ளது.
புஷ்கர்-காயத்ரியால் மீண்டும் எழுதப்பட்டு, பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம் இயக்கிய இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் முதல் பாணியைப் பின்பற்றுகிறது. இரண்டாவது சீசனில், நந்தினியின் இறுதிகட்ட கொலை விசாரணை, காளிபட்டணத்தில் நடக்கும் அஷ்டகாளி திருவிழா, வழக்கறிஞர் செல்லப்பாவின் மரணம், எட்டு பெண்களின் பின்னணிக் கதைகள் மற்றும் சில சந்தேகத்திற்கிடமான கதாபாத்திரங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. புஷ்கர்-காயத்ரியின் சஸ்பென்ஸ் நிறைந்த கதைசொல்லல் மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட திருப்பங்கள் பதற்றத்தை உருவாக்குகின்றன, மேலும் இயக்குனர்கள் பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம் எட்டு எபிசோடுகளிலும் சிலிர்ப்பூட்டும் காட்சிகளுடன் பார்வையாளர்களை தங்கள் இருக்கையின் நுனியில் வைத்திருக்கிறார்கள். ஆனால் சிறையில், கைதிகள் சிறை வளாகத்தில் தங்கள் விருப்பப்படி சுற்றித் திரிவது ஏற்புடையதாக இல்லை.
மொத்தத்தில் வால்வாட்சர் ஃபிலிம்ஸ் அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல் இணைந்து தயாரித்துள்ள ‘சுழல் 2’ ஒரு ஈர்க்கக்கூடிய மற்றும் நன்கு செயல்படுத்தப்பட்ட க்ரைம் திரில்லர்.