சிவி 2 விமர்சனம் : சிவி 2 திரும்ப முடியாத திகில் பயணம் |மதிப்பீடு: 3/5

0
355

சிவி 2 விமர்சனம் : சிவி 2 திரும்ப முடியாத திகில் பயணம் |மதிப்பீடு: 3/5

துளசி சினி ஆர்ட்ஸ் சார்பில் லலிதா கஸ்தூரி கண்ணன் தயாரிப்பில் யோகி, தேஜ், ஸ்வாதி, சாம்ஸ், தாடி பாலாஜி, கோதண்டம், சந்தோஷ், குமரன் ஆகியோர் நடித்துள்ளனர்.படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் கே.ஆர்.செந்தில்நாதன்.ஒளிப்பதிவு-பி.எல்.சஞ்சய், எடிட்டர்-எஸ்.பி.அஹமத், இசை-எஃப்ஃஎஸ்.பைசல், பாடல்கள்-அரவிந்த், பாடியவர்- சிமையோ, நடனம்-டயனா, சண்டை-பில்லா ஜெகன், கலை-சுயா, பிஆர்ஒ-குமரசேன்.

ஆமானுஷ்ய சக்திகளை வைத்து போலியாக காணொலிகளை தயாரித்து பணம் சம்பாதிக்கும் தேஜ். பல கோடிகள் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஒன்பது பேர் கொண்ட கல்லூரி மாணவர்களுடன் கூட்டு சேர்ந்து பாழடைந்த மருத்துவமனைக்கு இவர்களை அனுப்புகிறார். அங்கே அவர்கள் கச்சிதமாக தேஜ் கூறியபடியே ஆமானுஷ்ய சக்தி இருப்பதாக பொய்யாக சொல்லி வீடியோ லைவ் செய்கின்றனர். இதனிடையே இறந்ததாக கருதப்படும் நர்ஸ் நந்தினி பேயாக வந்து ஒன்பது பேரையும் என்ன செய்தார்? இவர்கள் தப்பித்தார்களா? இவர்களை காணவில்லை என்று போலீசிடம் புகார் கொடுத்த பெற்றோர்களிடம் வந்து சேர்ந்தார்களா? போலீஸ் இவர்களை உயிருடன் மீட்டார்களா? என்பதே மீதிக்கதை.

யோகி, தேஜ், ஸ்வாதி, சாம்ஸ், தாடி பாலாஜி, கோதண்டம், சந்தோஷ், குமரன் கதைக்கேற்ற கதாபாத்திரரங்களாக  படத்தின் திகில் சம்பவங்களுக்கு உத்தரவாதம் தருகின்றனர்.

ஒளிப்பதிவு-பி.எல்.சஞ்சய் மற்றும் இசை-எஃப்ஃஎஸ்.பைசல் ஆகியோர் படத்தின் அதிரும்படியான காட்சிகளுக்கு  இருவரின் பங்களிப்பு சிறப்பு.

எடிட்டர் எஸ்.பி.அஹமத் முதல் பாதியை விட இரண்டாம் பாதி பயமுறுத்தியிருக்கிறார்.

ஆமானுஷ்ய சக்தியை ஆராய்ச்சி செய்ய போகும் மாணவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், இன்றைய கால கட்டத்தில் இணையதளத்தால் ஏற்படும் விவரீதங்கள், அதை பயன்படுத்தி நூதன வழியில் மோசடி செய்து பணம் சம்பாதிக்கும் கூட்டம் என்று சிவி படத்தின் தொடர்ச்சியாக சிவி 2 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கே.ஆர்.செந்தில்நாதன்.

மொத்தத்தில் துளசி சினி ஆர்ட்ஸ் சார்பில் லலிதா கஸ்தூரி கண்ணன் தயாரிப்பில் சிவி 2 திரும்ப முடியாத திகில் பயணம்.