சிறுவன் சாமுவேல் திரைவிமர்சனம்: சிறுவன் சாமுவேல் – பல விருதுகளையும் வெல்லும் குழந்தைகளுக்கான ப(பா)டம் சிறுவன் சாமுவேல் திரைவிமர்சனம்: சிறுவன் சாமுவேல் – பல விருதுகளையும் வெல்லும் குழந்தைகளுக்கான ப(பா)டம் | ரேட்டிங்: 3.5/5
தென் தமிழகத்தில் கன்னியாகுமரியில் 1990களின் பிற்பகுதியாகத் நடக்கும் கதையாக தெரிகிறது, இந்தக் கதையானது கிரிக்கெட் ஆர்வமுள்ள சிறுவன் சாமுவேல் (அஜிதன் தவசிமுத்து) சுற்றிச் சுழல்கிறது. சிறுவன் சாமுவேல் (அஜிதன் தவசிமுத்து) மற்றும் ராஜேஷ் (கே.ஜி. விஷ்ணு) இரு சிறுவர்களும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் மூத்த நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள். குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்தும் இவர்களது தந்தைமார்கள் பிள்ளைகளுக்கு ஆசைப்பட்டதெல்லாம் வாங்கித் தர முடியாத சூழலில் இருக்கிறார்கள். அத்துடன் கண்டிப்புடனும் அவர்களை வளர்க்கிறார்கள். இவர்களால் பேட் வாங்க கூட வசதி இல்லாத நிலையில் உள்ளதால், தென்னை மட்டை, பழைய மரக்கட்டை போன்றவற்றில் பேட் செய்து விளையாடி வருகின்றார்கள். நல்ல பேட் வாங்க வேண்டும் என்று சிறுவன் சாமுவேலுக்கு ஆசை ஏற்படுகிறது. கிரிக்கெட் பேட் மீது அதீத ஆசை கொள்ளும் சாமுவேல், எப்படியாவது பேட் வாங்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறான். இந்நிலையில் இவர்கள் விளையாடும் போது பணக்கார பையனின் வீடியோ கேம் திருடு போய்விட, ராஜேஷ் மீது திருட்டு பழி விழுகிறது. கோபம் அடைந்த அவனது தந்தை அவனைப் அடித்ததுடன், அவனை பள்ளியில் இருந்து நிறுத்தி தன்னுடன் கூலி வேலைக்கு அழைத்துச் சென்று விடுகிறார். ஒருமுறை திருட்டு பட்டம் கட்டப்பட்டதால் ராஜேஷ் தொடர்ந்து திருடனாகவே மற்றவர்களால் கருதப்படுகிறான். தவறு செய்யாத ராஜேஷ் மீது திருட்டு பழி விழுவதற்கு காரணமான சாமுவேல், அதனை பொருட்படுத்தாமல் பேட் வாங்க திசை மாறுகிறான். சாமுவேல் கிரிக்கெட் பேட் வைத்திருப்பது தனது நிலைமையை மாற்றும் என்பதை அவன் நினைக்கிறான். மேலும் 500 துருப்புச் சீட்டுகளுக்கு ஈடாக ஒரு கிரிகெட் மட்டையை வெல்ல முடியும் என்பதை சாமுவேல் பயணம் செய்யும் பள்ளி வேன் டிரைவர் மூலம் அறிந்து கொள்கிறான். எனவே, அவற்றைச் சேகரிக்கத் தொடங்குகிறான். கிரிக்கெட் வீரர்கள் உருவம் பொறித்த அட்டைகளை வைத்து சாமுவேல், கிரிக்கெட் மட்டை வாங்கினானா? ராஜேஷ் மீது விழும் திருட்டுப்பழியை எப்படி எதிர்கொள்கின்றான்? என்பதே படத்தின் மீதிக்கதை.

இயக்குனரின் தேவை புரிந்து கிராமத்து பின்னணியை, அந்த இடத்தின் பசுமையான பசுமையை ஒரு தெளிவான முறையில் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் வி.சிவானந்த் காந்தி.
எஸ்.சாம் எட்வின் மனோகர் மற்றும் ஜே.ஸ்டாண்ட்லி ஜான் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதையோடு ஒன்ற வைத்துள்ளார்கள்.
குமரி மாவட்டத்து வாழ்க்கையும், மற்றும் கதைக்கு தேவையான அத்தனைப் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து காட்சிபடுத்திய விதம் அருமை. முழுக்க முழுக்க சிறுவர்களுக்கான படத்தை இயக்கி சுவாரசியப்படுத்தியுள்ளார் இயக்குனர் சாது ஃபெர்லிங்டன்.
மொத்தத்தில் சிறுவன் சாமுவேல் – பல விருதுகளையும் வெல்லும் குழந்தைகளுக்கான ப(பா)டம்.