சாமானியன் சினிமா விமர்சனம் : ‘சாமானியன்’ கடன் வாங்கும் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கை மணி | ரேட்டிங்: 3.5/5

0
676

சாமானியன் சினிமா விமர்சனம் : ‘சாமானியன்’ கடன் வாங்கும் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கை மணி | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள் :
ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், மைம் கோபி, கே.எஸ்.ரவிக்குமார், சரவணன் சுப்பையா, நக்ஷா சரண், லியோ சிவக்குமார், வினோதினி, தீபா சங்கர், ஸ்ம்ருதி வெங்கட், அப்ரநதி, அறந்தாங்கி நிஷா, சரவணன் சக்தி, கஜராஜ், முல்லை, அருள் மணி , கோதண்டம், சூப்பர் குட் சுப்பிரமணி.

தொழில்நுட்ப கலைஞர்கள் :
எழுத்து – இயக்கம் : ஆர்.ரஹேஷ்
தயாரிப்பாளர் : வி.மதியழகன்
பேனர்: எட்செடெரா என்டர்டெயின்மென்ட்
இணை தயாரிப்பாளர்கள்: டி பாலசுப்ரமணியம் மற்றும் சி சதீஷ் குமார்
கிரியேட்டிவ் ஹெட் : ஸ்ரீதா ராவ்
இசை : இளையராஜா
பாடல் வரிகள் : இளையராஜா
பாடகர்கள் : இளையராஜா, கார்த்திக், ஷரத்
ஒளிப்பதிவாளர் : சி அருள் செல்வன்
எடிட்டர் : ராம் கோபி
கதை : வி கார்த்திக் குமார்
ஆடை : எஸ்பி சுகுமார்
நடன இயக்குனர் : விஷ்ணுவிமல்
மக்கள் தொடர்பு : ஏ.ஜான்
விளம்பர வடிவமைப்பாளர்கள் : சதீஷ்
VFX மற்றும் CG : பிரவீன் லியோனார்ட்
ஒலி வடிவமைப்பாளர் : அருண் மணி

சங்கரநாராயணன் (ராமராஜன்) தன் நண்பர் மூக்கனுடன் (எம்.எஸ்.பாஸ்கர்), சென்னையில் உள்ள அவர்களின் நண்பர் ஃபஸில் பாய்யின் (ராதாரவி) வீட்டிற்கு விருந்தினர்களாக வருகிறார்கள். பாயின் வீட்டு அருகில் ஒரு வங்கியில் உதவி மேலாளர் மற்றும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் (கஜராஜ்) ஆகியோர் குடி இருக்கிறார்கள். ஃபஸில் பாய் அனைவருடனும் அன்பான உறவைப் பேணி வருகிறார். அக்கம்பக்கத்தினருக்கு தன் நண்பர்கள் சங்கர நாராயணன் மற்றும் மூக்கனை அறிமுகம் செய்து, சங்கரநாராயணன் தனது பேத்தியின் பிறந்த நாளை கொண்டாட ஊருக்கு வந்திருப்பதாக அவர்களிடம் கூறுகிறார். மறுநாள், தியாகராயர் நகரில் உள்ள வங்கி ஒன்றுக்கு போகும் சங்கர நாராயணன், வெடிகுண்டும் துப்பாக்கியையும் காட்டி மிரட்டி, வங்கி ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் பிணைக் கைதிகளாக பிடித்து அவர் வங்கியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். அதை அடுத்து காவல்துறை வங்கியை சுற்றி வளைத்து மக்களை காப்பாற்ற போராடுகிறது. மறுபுறம், அவ்வங்கி கிளையின் மேலாளரின் வீட்டை மூக்கையனும், துணை மேலாளர் வீட்டை ஃபாஸில் பாயும் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். சங்கரநாராயணன், மூக்கன, ஃபஸில் பாய், இவர்கள் மூவரும் ஏன் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்? இம்மூவரின் பின்னணி என்ன, வங்கியில் பிணைக்கைதிகளாக இருப்பவர்களைக் காவல்துறை மீட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ராமராஜன் 1986 இல் வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படத்தில் கதாநாயகனாக தனது  முத்திரையை பதித்து கிராமம் சார்ந்த விஷயங்களில் திரைப்படங்கள் மூலம் பிரபலமான அவர்; தனது ஓப்பனை மற்றும் வண்ணமயமான ஆடைகளுக்காக அறியப்பட்டார். அவரது கரகாட்டக்காரன் (1989) திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து அப்போதைய நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு பெரும் போட்டியாக தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர், அவர் கடைசியாக 2012 ஆம் ஆண்டு நடித்த படம் மேதை. கிட்டத்தட்ட 13 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சாமானியன் மூலம் இளைய தலைமுறைகள் உட்பட அனைத்து வயதினர் அன்றாட வாழ்வில் சந்திக்கும் முக்கிய பிரச்சனையை பேசும் கதைகளத்தில் சாதாரண மனிதனாக மீண்டும் தனது மறுபிரவேசத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

ராதாரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் எப்போதும் போல் நேர்த்தியான நடிப்பு தந்து கதைக்களத்தை மேலும் நம்பகத்தன்மையுடன், கதையை மேலும் நம்பத்தகுந்ததாகவும் ஆக்குகிறார்கள்.

போஸ் வெங்கட், மைம் கோபி, கே.எஸ்.ரவிக்குமார், சரவணன் சுப்பையா, நக்ஷா சரண், லியோ சிவக்குமார், வினோதினி, தீபா சங்கர், ஸ்ம்ருதி வெங்கட், அப்ரநதி, அறந்தாங்கி நிஷா, சரவணன் சக்தி, கஜராஜ், முல்லை, அருள் மணி, கோதண்டம், சூப்பர் குட் சுப்பிரமணி உட்பட அனைத்து துணை கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.

இசை – பாடல் வரிகள் இளையராஜா, ஒளிப்பதிவாளர் : சி அருள் செல்வன், எடிட்டர் : ராம் கோபி, கதை : வி கார்த்திக் குமார், ஆடை : எஸ்பி சுகுமார், நடன இயக்குனர் : விஷ்ணுவிமல், ஏகுஓ மற்றும் ஊபு : பிரவீன் லியோனார்ட், ஒலி வடிவமைப்பாளர் : அருண் மணி ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு சுவாரஸ்யமான திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் வீடு வாங்குவதில் உள்ள ஆபத்துகள் குறித்தும், கடன் வாங்கிய பின், தவணையை சரியாக கட்டாத போது அவர்கள் சந்திக்கும் இன்னல்கள், அவமானங்கள் உட்பட பல பிரச்சனைகளை கோடிட்டுக் காட்டி திரைக்கதையில் விறுவிறுப்பையும், எமோஷனையும் கலந்து பேசியுள்ளார் இயக்குனர் ராஹேஷ்.

மொத்தத்தில் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள ‘சாமானியன்’ கடன் வாங்கும் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கை மணி.