சலார் பார்ட் 1 – சீஸ் பயர் சினிமா விமர்சனம் (SALAAR MOVIE REVIEW) : பிரபாஸ் ரசிகர்களுக்கு ரத்தம் தெறிக்கும் அதிரடி விருந்து | ரேட்டிங்: 3.5/5

0
364

சலார் பார்ட் 1 – சீஸ் பயர் சினிமா விமர்சனம் : பிரபாஸ் ரசிகர்களுக்கு ரத்தம் தெறிக்கும் அதிரடி விருந்து | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள் :
பிரபாஸ் – தேவா / சலார்
பிருத்விராஜ் சுகுமாரன் – வர்தராஜா / வர்த மன்னார்
ஸ்ருதி ஹாசன் – ஆத்யா
ஜெகபதி பாபு -ராஜ மன்னார்
பாபி சிம்ஹா – பாரவா
ஈஸ்வரி ராவ் – தேவாவின் தாய்
ஸ்ரேயா ரெட்டி – ராதா ராம மன்னார்
ஜான் விஜய் – ரங்கா
மைம் கோபி – பிலால்
தொழில்நுட்ப கலைஞர்கள் :
எழுத்து – இயக்கம் – பிரசாந்த் நீல்
இசை -ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு – புவன் கவுடா
எடிட்டர் – உஜ்வல் குல்கர்னி
தயாரிப்பாளர் – விஜய் கிரகந்தூர்
தயாரிப்பு- ஹோம்பாலே பிலிம்ஸ்
தமிழ்நாடு வெளியீடு – ரெட் ஜெயண்ட் மூவீஸ்
படத்தின் கதை 10 வயது நிரம்பிய இரண்டு நண்பர்களைச் சுற்றி வருகிறது, கான்சாராவில் சிறு வயதில் அங்கு தேவா – சாலர் (பிரபாஸ்) தனது உயிர் நண்பன் வர்தராஜா (ப்ரித்விராஜ்)க்காக எதிரிகளுடன் சண்டை போடுவதைக் காணலாம். சிறுவயதாக இருக்கும் போது, தேவாவின் அம்மாவுடைய (ஈஸ்வரி ராவ்) உயிரை, தன் தந்தை ராஜ மன்னாரின் (ஜெகபதி பாபு) கட்டளையையும் மீறிக் காப்பாற்றுகிறான் வரதராஜா. ராஜமன்னார் மகனான வர்தராஜா (ப்ரித்விராஜ்) தேவாவும் (பிரபாஸ்) உயிர் நண்பர்கள். ‘நாம இங்கிருந்து போயிடலாம். இனி இந்த நாட்டிற்கு நாம வரக் கூடாது” என அம்மா சத்தியம் செய்யக் சொன்ன போது, ‘நீ கூப்பிட்டா நான் வருவேன்” என தன் நண்பன் வரதாவிற்கு சத்தியம் செய்துவிட்டு கான்சாரை கிராமத்தை விட்டு இருவரும் வெளியேறி பல ஆண்டுகளாக அசாமில் நிலக்கரிச் சுரங்கங்கள் சூழப்பட்ட கிராமமான டின்சுகியாவில் வசிக்கின்றனர். அங்கு அவர் மெக்கானிக்காக வேலை செய்கிறார், அதே நேரத்தில் அவரது தாயார் (ஈஸ்வரி ராவ்) ஒரு பள்ளியை நடத்தி குழந்தைகளை நிலக்கரி சுரங்கங்களில் வேலை செய்வதைத் தடுக்கிறார். தாய்க்கு கொடுத்த வார்த்தையின்படி தேவா தனது உணர்ச்சிகள் அனைத்தையும் கட்டுப்படுத்தி ஆயுதம் எடுப்பதில்லை, கோபப்படுவதில்லை. தனது தாயுடன் ஒரு நிழலான கடந்த காலத்துடன் சாதாரண வாழ்க்கை வாழ்கிறார். 2017 ஆம் ஆண்டில், ஆத்யா (ஸ்ருதி ஹாசன்) தனது தந்தை கிருஷ்ணகாந்துக்குத் தெரியாமல் நியூயார்க்கில் இருந்து இந்தியாவுக்கு வரும் போது கதை முன்னேறுகிறது. புதிதாக ஊருக்கு வந்த ஆத்யாவை (ஸ்ருதி ஹாசன்) ஒரு குண்டர்கள் தேடும் போது அமைதி குலைகிறது. இந்நிலையில் ஆத்யாவை குண்டர்களிடமிருந்து காப்பாற்றி தேவாவின் பாதுகாப்பில் இருக்க பிலால் ஏற்பாடு செய்கிறார். இந்நிலையில் குண்டர்கள் ஆத்யாவை தேடி டின்சுகியாவிற்கு வந்து, ஆத்யாவை இழுத்துச் செல்லும் போதும் தேவா தாய்க்கு கொடுத்த வார்த்தையின்படி சும்மா நிற்கிறார். ஒரு கட்டத்தில் ஆத்யாவின் நிலையை கண்ட தாய் தன் மகன் தேவாவிடம் ஆத்யாவை காப்பாற்ற சொல்கிறார்.  அதன் பிறகு தேவாவை பற்றி ஆத்யா விசாரிக்கும் போது பிலால் தேவாவின் கடந்த கால கதையை சொல்கிறார். கடந்த காலத்தில், கான்சார் பதவி நாற்காலிக்காக அங்கு மோதல் ஏற்படுகிறது, அதன் பிறகு வர்தராஜ் மன்னார் தனது நண்பர் தேவாவிடம் உதவி கேட்கிறார். நண்பன் வரதாவுக்காக மீண்டும் கான்சாருக்குள் நுழைகிறார் தேவா. அப்படி  வர்தாவுக்கு என்ன பிரச்சனை, அதை தேவா எப்படி எதிர்கொள்கிறான், தேவாவிற்கும் கான்சாருக்கும் உள்ள உறவு என்ன, தேவா அதாவது சலாரின் வருகை கான்சாரை எப்படித் திருப்பி போடுகிறது போன்ற கேள்விகளுக்கு ரத்த ஆறாக கதை நகர்கிறது. அத்துடன் இரு சிறந்த நண்பர்களுக்கிடையே பகை ஏற்பட காரணம் என்ன என்பதை சலார் இரண்டாம் பாகத்திற்கு காத்திருக்க வேண்டும்.
பிரபாஸின் அதிரடியான ஆக்ஷன், அட்டகாசமான தோற்றம், வசனங்கள் என மிடுக்காகத் தோன்றி அவரது தீவிர ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.
பிருத்விராஜ் சுகுமாரன் வர்தராஜ் மன்னார் வேடத்தில் கச்சிதமாக பொருந்தி கண்ணியமான நடிப்பை வழங்கி பிரபாஸுடன் சேர்ந்து திரைக்கதைக்கு ஆழத்தை சேர்த்துள்ளார்.
ஸ்ருதி ஹாசனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், ஆனால் அவரது கதாபாத்திரம் முதல் பாகத்தில் பெரிய அளவில் இல்லை என்றாலும் கதை விறுவிறுப்பாக தொடர முக்கிய கதாபாத்திரமாவே அமைந்துள்ளது.
 பிரபாஸின் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த வைத்த அம்மாவாக ஈஸ்வரி ராவ் சிறப்பாக நடித்து கதையின் ஆழத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
மைம் கோபி, டினு ஆனந்த், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா, ராமச்சந்திர ராஜு, ஜான் விஜய், ரமணா, மது குருசுவாமி, சப்தகிரி, ஜான்சி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம்  கதைக்கு அடுக்குகளை சேர்க்க சிறிது நேரம் தோன்றும் கதாபாத்திரங்கள். இரண்டாம் பாகத்தில் அவர்களது பங்களிப்பு தீவிரமடையும் என எதிர்பார்க்கலாம்.
புவன் கவுடாவின் ஒளிப்பதிவு கான்சாரின் கொந்தளிப்பான சூழலின் சாரத்தை படம்பிடித்து, ஹாலிவுட் தரத்திற்கு படத்தை உயர்த்தியுள்ளார். உஜ்வால் குல்கர்னியின் படத்தொகுப்பு விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது. ரவி பஸ்ருரின் இசை மற்றும் பின்னணியில் சென்டிமென்ட் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் திரையரங்கை அதிர வைத்துள்ளார். சலாரின் சிறப்பு அம்சம் அன்பரிவின் சண்டைக்காட்சிகள்.
கேஜிஎப் 1 மற்றும் 2 படங்கள் போல் ஆக்சன் கலந்த சென்டிமென்ட்டை சலாரிலும் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல். திரைக்கதையில் அதிக அளவு வன்முறை மற்றும் இரத்தக்களரியைக் வைத்து காட்சி படுத்தி இருக்கிறார்.மொத்தத்தில் ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் பார்ட் 1 : சீஸ் பயர் பிரபாஸ் ரசிகர்களுக்கு ரத்தம் தெறிக்கும் அதிரடி விருந்து.