சர்தார் விமர்சனம்: சர்தார் அனைத்து தரப்பு ரசிகர்கள் தவறாமல் தியேட்டரில் பார்க்க வேண்டிய ஒரு ஸ்பை த்ரில்லர் | ரேட்டிங்: 4/5

0
1233

சர்தார் விமர்சனம்: சர்தார் அனைத்து தரப்பு ரசிகர்கள் தவறாமல் தியேட்டரில் பார்க்க வேண்டிய ஒரு ஸ்பை த்ரில்லர் | ரேட்டிங்: 4/5

நடிகர்கள்: கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, முனிஷ்காந்த், முரளி சர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி வில்லியம்ஸ்
எடிட்டிங் : ரூபன்
சண்டைக்காட்சி : திலீப் சுப்பராயன்.
தயாரிப்பு : எஸ்.லக்ஷ்மன் குமார்
தயாரிப்பு நிர்வாகம் : பிரின்ஸ் பிக்சர்ஸ்
இயக்கம் : பி.எஸ்.மித்ரன்
மக்கள் தொடர்பு : ஜான்சன்

சர்தார் (கார்த்தி) 1988 இல் நாடக கலைஞனாக இருக்கும் முரட்டுத்தனம் நிறைந்த ஒரு உளவாளி. வங்கதேசத்தில் வைத்து இந்திய பாதுகாப்பு ஆலோசகரை உளவுத் துறையின் மிகச்சிறந்த உளவாளியான சர்தார் (கார்த்தி) சுட்டுக்கொல்கிறார். இதனால், சர்தாரை இந்திய அரசு தேசத்துரோகியாக அறிவிக்கிறது. அதன் பின், சர்தார் இந்தியாவிற்குள் வராமல் தானாகவே ஒரு பிரச்னையில் சிக்கிக்கொண்டு வங்கதேச சிறைக்குச் செல்கிறார். கதை பின்னர் நிகழ்காலத்திற்கு மாறுகிறது.   தேசதுரோகியின் மகன் என்ற அச்சத்தால் வேட்டையாடப்படும் விளம்பர வெறி கொண்ட விஜய் பிரகாஷ் (கார்த்தி) ஒரு போலீஸ் அதிகாரி. எந்த வழக்காக இருந்தாலும் திறம்பட முடித்துக்கொடுப்பதுடன் தன்னைப் பற்றிய ‘நல்ல’ பிம்பம் வெளியே தெரிய வேண்டும் என்பதிலும் அதிக கவனத்துடன் இருக்கும் அதிகாரி. அங்கீகாரத்திற்காக அவர் செய்யும் எல்லாவற்றிலும் வாய்ப்புகளைத் தேடுகிறார். விஜய் பிரகாஷ் இந்த செயல் காரணமாக காவல் துறையின் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் பலமுறை ட்ரெண்டாகி வருகிறது. மறுபுறம், விஜய் (கார்த்தி) சிறுவயதில் இருந்தே வழக்கறிஞர் ஷாலினியை (ராஷிகன்னா) காதலிக்கிறார். இந்த காதல் கதை இப்படி நடந்து கொண்டிருக்கும் போதே.. இந்தியாவில் ‘ஒன் லைன் ஒன் பைப்’ என்ற தண்ணீர் திட்டம் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் பழைய இராணுவ ரகசியங்கள் உள்ள ஒரு முக்கியமான கோப்பு காணாமல் போனதும், சிபிஐயும் ராவும் அதைக் கண்டுபிடிக்கும் போது கதை வேறு திசையில் செல்கிறது. நீர்நிலைகளை தனியார்மயமாக்குவதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யும் ஆர்வலர் சமீரா (லைலா) மர்மமான முறையில் இறந்தபோது, தேசத்தை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கும் பொய் மற்றும் வஞ்சகத்தின் சிக்கலான வலையை உணர்ந்து கொலையாளிகளை விஜய் பிரகாஷ்   கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். இந்தச் செயல்பாட்டில் விஜய் பிரகாஷ் சர்தார் மற்றும் அவரது பணியைப் பற்றி தெரிந்துகொள்கிறார். ராத்தோர், ஒரு தீய தொழிலதிபர் (சங்கி பாண்டே) மற்றும் அவரது மோசமான திட்டங்களைத் தடுக்கக்கூடிய ஒரே மனிதர் சர்தார். 32 ஆண்டுகள் கழித்து சர்தார் எதிரிகளிடமிருந்து தப்பித்துச் செல்கிறார். யார் இந்த சர்தார்? இது என்ன ‘ஒன் லைன் ஒன் பைப்’ தண்ணீர் திட்டம்?, விஜய் பிரகாஷ்க்கும் சர்தாருக்கும் என்ன தொடர்பு?, இறுதியாக சர்தார் இந்த ‘ஒன் லைன் ஒன் பைப்’ தண்ணீர் திட்டத்தை என்ன செய்தார்? இறுதியாக, விஜய் பிரகாஷ் எவ்வாறு பணியின் ஒரு பகுதியாக எப்படி அங்கம் வகித்தார்? அது என்ன பணி என்பது மீதிக் கதை.

கார்த்தி அப்பா, மகனாக தனது கேரியருக்கு சவாலாக இரண்டு வேடங்களிலும் கதாபாத்திரங்களை வித்தியாசப்படுத்தி காட்டி அற்புதமாக நடித்துள்ளார். குறிப்பாக அவரது பல கெட் அப்கள் பாராட்டப்பட வேண்டியவை, தனது திறமையை வெளிப்படுத்தி காதல் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் கார்த்தி மிகவும் செட்டிலாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளார். கார்த்தி தனது முந்தைய படங்களை விட இந்தப் படத்தில் புதிய தோற்றத்துடன் மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறார்.

கதாநாயகியாக ராசி கண்ணா வழக்கறிஞர் வேடத்திலும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை ரஜிஷா விஜயன்  சிறப்பாக நடித்துள்ளனர்,

சங்கி பாண்டே, முனிஷ்காந்த், மற்றும் லைலா இந்த படத்தின் மற்ற முக்கிய புள்ளிகள். அனைத்து துணை கதாபாத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு தங்களின் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இசை மெல்லிசை. மேலும் அவர் வழங்கிய பின்னணி இசை படத்தின் ஹைலைட். பிஜிஎம் மூலம் பல காட்சிகளை உயர்த்தி தனது முத்திரையைக் காட்டியுள்ளார்.

படத்தின் முதுகெலும்பு, ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு,  எங்கும் அழகு குறையாமல் இந்தப் படத்தை ஸ்டைலாக அமைத்தது பாராட்டுக்குரியது.

ரூபனின் எடிட்டிங் கச்சிதம். அட்டகாசமாக சண்டைக்காட்சிகளை ரசிக்கும்படி வடிவமைத்திருக்கிறார் திலீப் சுப்பராயன்.

முக்கியமான சமூக பொறுப்புள்ள ஒரு பரபரப்பான உளவு கதையில் சிபிஐயுடன் சேர்ந்து ஒரு போலீஸ்காரர் சந்திக்கும் சிரமங்கள், ராணுவ ரகசியங்கள் என மனதைக் கவரும் காட்சிகளும் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையில் ஒட்ட வைக்கும் திரைக்கதை அமைத்து பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் விற்பனை செய்வதைப் பற்றி செறிவான செய்தியுடன் கூடிய நல்ல படமாக பிரமாதமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் மித்ரன்.

மொத்தத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்திருக்கும் சர்தார் அனைத்து தரப்பு ரசிகர்கள் தவறாமல் தியேட்டரில் பார்க்க வேண்டிய ஒரு ஸ்பை த்ரில்லர்.