சரக்கு சினிமா விமர்சனம் : சரக்கு சிறந்த அரசியல் நையாண்டி | ரேட்டிங்: 3/5
ஜெயக்குமார் இயக்கத்தில் மன்சூர் அலிகான் தயாரித்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘சரக்கு’.
ஹீரோயினாக வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். இதில் பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, பழ கருப்பையா, பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், வினோதினி, கிங்ஸ்லி, ரவி மரியா, லொள்ளு சபா மனோகர், மதுமிதா, லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
அருள் வின்சென்ட் மற்றும் மகேஷ்.டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து இருக்கிறார். படத்தின் திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியிருக்கிறார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.
மன்சூர் அலிகான் தினந்தோறும் குடித்து விட்டு வீட்டில் மனைவியை அடித்து துன்புறுத்தும் வேளையில் சரியாக கவனம் செலுத்தாத ஒரு வழக்கறிஞர். குடிப்பதற்கு தனது வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் பறிப்பது. போதை தெளிந்ததும் மனைவி மற்றும் குழந்தைகளிடம் அன்பாக இருப்பார். இப்படியாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் போது மது பிரியர்கள் சங்கம் என்று ஒரு சங்கத்தை ஆரம்பித்து ஒன்றரை கோடி குடிமகன்களை உறுப்பினர்களை சேர்த்து பெரிய அளவில் அரசாங்கத்தை திரும்பி பார்க்க வைக்கிறார். அரசிடம் மது பிரியர்களுக்காக 10 அம்ச கோரிக்கைகளை வைக்கிறார். அரசாங்கம் இந்த கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இருக்க ஒரு கட்டத்தில் அந்த துறை அமைச்சர் வீட்டின் முன்னாடி மது பிரியர்கள் சங்கத்தினர்கள் போராட்டம் நடத்த அமைச்சர் அவருடைய அடி ஆட்கள் வைத்து கூட்டத்தை கலைக்கிறார். அத்துடன் அமைச்சர் தன் கைகூலி போலீஸ் உதவியுடன் மன்சூர் அலிகானை கைது செய்து என்கவுண்டர் செய்ய சொல்கிறார். அதிலிருந்து தப்பிக்கும் மன்சூர் அலிகானை கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். குடியால் தான் தன் கணவன் கொலை பழிக்கு ஆளாகி சிறை தண்டனை அனுபவிக்கிறார் என்பதால் மன்சூர் அலிகான் மனைவி மதுவை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார். அதற்காக அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். இந்நிலையில் மன்சூர் அலிகான் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாததால் அவரை நீதிமன்றம் விடுதலை செய்கிறது. வெளியில் வந்த மன்சூர் அலிகான் குடியால் தன் குடும்பம் பட்ட கஷ்டத்தை உணர்ந்து அவர் நல்ல குடிமகனாக மாறி இந்த மதுவால் சீரழிந்த குடும்பங்களுக்காக தன் மனைவி தொடங்கிய போராட்டத்தை தொடர்கிறார். அத்துடன் சிறையில் இருக்கும் தன் மனைவியை மீட்கவும் போராடுகிறார். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து அரசாங்கத்தை எதிர்த்து போராடி வெற்றி பெற்றார்களா இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
குடி குடியை கெடுக்கும் என்ற முக்கிய கருத்தை, மையமாக வைத்து கதை எழுதி, தயாரித்து, கதாநாயகனாக மன்சூர் அலிகான் நகைச்சுவை மற்றும் சமூக சிந்தனை ஆகியவற்றின் கலவையுடன் நையாண்டி ஊடுருவி, அழுத்தமான நடிப்பு வழங்கியுள்ளார்.
கதையின் நாயகியாக வலினா பிரின்ஸ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளார்.
சிறப்பு தோற்றத்தில் பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, பழ கருப்பையா, மொட்டை ராஜேந்திரன், வினோதினி, கிங்ஸ்லி, ரவி மரியா, லொள்ளு சபா மனோகர், மதுமிதா, லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், கூல் சுரேஷ் உள்ளிட்ட அனைவரும் தங்கள் தனிப்பட்ட திறமையுடன் கதையை முன்நோக்கி நகர்த்தி அவர்களின் நுணுக்கமான நடிப்பின் மூலம், தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஆழத்தையும் நம்பகத்தன்மையும் கொண்டு வருகிறார்கள்.
அருள் வின்சென்ட் மற்றும் மகேஷ்.டி ஒளிப்பதிவு அரசியல் பின்னணியில் சாரத்தை படம்பிடித்து, பார்வைக்கு ஈர்க்கக்கூடிய சூழலை உருவாக்குகிறது.
சித்தார்த் விபின் இசை மற்றும் பின்னணி இசை படத்தின் நையாண்டி தொனியை கூட்டுகிறது.
குடி குடியை கெடுக்கும் என்பதை மையக்கருவாக கதைகளத்தில், அரசியல் சூழ்ச்சியின் சிக்கலில் மாட்டும் கதாநாயகனின் பயணத்தை பொழுதுபோக்கு, மற்றும் சிந்தனையைத் தூண்டும் வகையில் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் ஜெயக்குமார்.
மொத்தத்தில் மன்சூர் அலிகான் தயாரித்துள்ள சரக்கு சிறந்த அரசியல் நையாண்டி.