சபா நாயகன் சினிமா விமர்சனம் (SABA NAYAGAN MOVIE REVIEW) : சபா நாயகன் அனைவருடைய பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை திரும்பிப் பார்க்க வைக்கும் | ரேட்டிங்: 2.5/5

0
225

சபா நாயகன் சினிமா விமர்சனம் : சபா நாயகன் அனைவருடைய பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை திரும்பிப் பார்க்க வைக்கும் | ரேட்டிங்: 2.5/5

க்ளியர் வாட்டர் பிலிம்ஸ், ஐ சினிமா சார்பில் கேப்டன் மேகவாணன், இசைவாணன் தயாரிப்பில் சபா நாயகன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சி.எஸ்.கார்த்திகேயன்.

அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ், அருண், மறைந்த மயில்சாமி, ஜெய்சீலன், ஸ்ரீPராம், விவ்யாசாந்த், ஷெர்லின்சேத், அனீஷ், மைக்கேல் தங்கதுரை, உடுமலைப்பேட்டை ரவி, அக்ஷயா ஹரிஹரன்,  பிக்பாஸ் பாலா,  ராஸ்,  மனோகர், துளசி,  பாலமுருகன், ஷ்ரவந்தி, ரேஷ்மி நம்பியார், பாஸ்கரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை – லியோன் ஜேம்ஸ் , டிஓபி – பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் , எடிட்டர் – கணேஷ் சிவா , ஒலி வடிவமைப்பு – உதய் குமார் கலரிஸ்ட்-சண்முக பாண்டியன், ஸ்டண்ட் – பில்லா ஜகன் ,ஆர்ட் – ஜி.சி.ஆனந்தன், உடை-செல்வம் , மேக் அப் – மாரியப்பன், தயாரிப்பு மேலாளர் – செல்லதுரை,சிவகுமார், ரமேஷ்குமார், தேவேந்திரன், தயாரிப்பு மேற்பார்வை – லோகநாதன். மக்கள் தொடர்பு சதீஷ்.

சபா என்கிற அரவிந்த் (அசோக் செல்வன்) நண்பர்களுடன் போதையில் நள்ளிரவில் ரோட்டில் ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கும் போது காவல்துறை ஜீப் வருவதை கண்டு ஓட்டம் பிடிக்கிறார்கள். அப்போது தன் பைக் ஸ்டார்ட் ஆகாததால் போலீஸ்காரர்களிடம் மாட்டிக் கொள்கிறார் சபா. காவல்துறை சபாவை கைது செய்து ஜீப்பில் அழைத்துச் செல்கிறது. அன்று இரவு முழுக்க இரவு ரவுண்ட்ஸ் செல்லும் காவலர்களிடம் சபா தன் வாழ்வில் நடந்த மூன்று தோல்வியுற்ற காதல் கதைகளைச் விவரிக்கிறார். அவர் பள்ளி காதலி ஈஷா (கார்த்திகா முரளிதரன்), கல்லூரி காதலி ரியா (சாந்தினி) மற்றும் எம்பிஏ படிக்கும் போது மேகா (மேகா ஆகாஷ்) என பார்த்த இடங்களில் காதல்  எப்படித் தோன்றி, அதில் ஏற்படும் பிரச்னைகளால் எப்படி முறிந்து போகிறது என்பதை ஒவ்வொன்றாக கூறுகிறார். இறுதியாக அவர் தனது சகோதரியை அவளது பூட்டிக்கில் சந்திக்கிறார், அங்கு அவர் தனது முதல் ஸ்கூல் க்ரஷ் ஈஷாவை (கார்த்திகா முரளிதரன்) மீண்டும் சந்தித்ததாக கூறுகிறார்.  அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் சபா நாயகன் மீதிக்கதை.

பள்ளி மாணவன், கல்லூரி இளைஞன் என வெவ்வேறு தோற்றத்தில் பயணித்து, அருண்குமார் (எஸ் எஸ் கார்த்திக்), ஜெய்சீலன் (தினேஷ்), ஸ்ரீராம் கிரிஷ் (சிவ பிரகாஷ்) ஆகிய நண்பர்களுடன் ஜாலியாக மூன்று வெவ்வேறு நிலைகளில் சிக்கலான காதல் பயணத்தை அசோக் செல்வன் திறம்பட, ரசிக்கும்படியாக படத்தை ஒருங்கிணைத்து ஒரு முழுமையான என்டர்டெயினராகக் கலக்கியிருக்கிறார்.

கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ், ஆகியோர் சபாநாயகனின் காதலியாக பயணித்துள்ளனர்.

என்றென்றும் அனைவரது மனதில் நிலைத்திருக்கும் மறைந்த மயில்சாமி (போலீஸ்), விவ்யாசாந்த் (திவ்யா), ஷெர்லின்சேத் (காயத்ரி), அனீஷ் (நவீன்), மைக்கேல் தங்கதுரை (விஷ்ணு), ராஸ் (ரீது), உடுமலைப்பேட்டை ரவி (போலீஸ்), அக்ஷயா ஹரிஹரன் (ப்ரீத்தி), பிக்பாஸ் பாலா (அஷ்வின்), மனோகர், துளசி (சபா அம்மா), ரேஷ்மி நம்பியார்,  பாலமுருகன் (சபா அப்பா), ஷ்ரவந்தி, பாஸ்கரன் உட்பட அனைத்து நடிகர்களும் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.

லியோன் ஜேம்ஸ் இசை மற்றும் மூன்று ஒளிப்பதிவாளர்கள் – பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகியோரின் தொழில்நுட்ப பங்களிப்பு புத்துணர்ச்சியூட்டும் நகைச்சுவை கலந்த காதல் பயணத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளது.

எடிட்டர் – கணேஷ் சிவா விறுவிறுப்பை கூட்ட கொஞ்சம் கூடுதலாக கத்திரியை கையாண்டு இருக்கலாம். மேலும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஒலி வடிவமைப்பு – உதய் குமார் கலரிஸ்ட்- சண்முக பாண்டியன், ஸ்டண்ட் – பில்லா ஜகன, ஆர்ட் – ஜி.சி.ஆனந்தன், உடை-செல்வம், மேக் அப் – மாரியப்பன், ஆகியோரின் உழைப்பும் திரையில் தெரிகிறது.

வழக்கமான பள்ளி மற்றும் கல்லூரி கதையுடன் காதல், நட்பு, நகைச்சுவை கலந்த பள்ளி பருவ சேட்டைகள், சுவாரஸ்யமான கல்லூரிக் காதல், தொடர்ந்து முன்னாள் பள்ளி காதலியின் சந்திப்பு என திரைக்கதை அமைத்து ஜாலியாகச் சொல்ல முயன்றிருக்கிறார் புதுமுக இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன்.

மொத்தத்தில் க்ளியர் வாட்டர் பிலிம்ஸ், ஐ சினிமா சார்பில் கேப்டன் மேகவாணன், இசைவாணன் இணைந்து தயாரித்திருக்கும் சபா நாயகன் அனைவருடைய பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை திரும்பிப் பார்க்க வைக்கும்.