சட்டம் என் கையில் சினிமா விமர்சனம் (SATTAM EN KAYIL MOVIE REVIEW) : சட்டம் என் கையில் கமர்ஷியல் த்ரில்லருடன் கலந்த ஆடு புலி ஆட்டம் | ரேட்டிங்:3/5
நடிகர்கள்: சதீஷ், அஜய் ராஜ், பாவெல் நவகேதன், மைம் கோபி, ரித்திகா, கேபி சதீஷ், வித்யா பிரதீப், பாவா செல்லதுரை, ராம்தாஸ், அஜய் தேசாய் மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
திரைக்கதை – இயக்கம் : சாச்சி
தயாரிப்பாளர்கள் : பரத்வாஜ் முரளிகிருஷ்ணன், ஆனந்தகிருஷ்ணன் சண்முகம் மற்றும் ஸ்ரீராம் சத்தியநாராயணன்
ஒளிப்பதிவு : பி.ஜி. முத்தையா
படத்தொகுப்பு : மார்ட்டின் டைட்டஸ் ஏ
இசை : எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்
வசனம் : ஜே.எம்.ராஜா
தயாரிப்பு மேலாளர் : உமாமகேஸ்வர ராஜு
நிர்வாக தயாரிப்பாளர் : பா சிவா
வணிகத் தலைவர் : தினேஷ் குமார்
தயாரிப்பு : சண்முகம் கிரியேஷன்ஸ்
கலை : பசார் என்.கே.ராகுல்
பாடல் வரிகள் : ராகவ கிருஷ்ணன், நவீன் பாரதி சாய் விநாயகம்
சண்டைக்காட்சி : ராம் குமார் – சுரேஷ்
ஒலி வடிவமைப்பு : அருண் அக் – ராஜா நல்லையா
பி.ஆர்.ஓ : சதீஷ் (ஏய்ம்)
ஏற்காடு மலை பாதையில் உள்ள காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் பதவியை அடைவதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து சதி வலை விரிக்கும் முரட்டு குணமும், ஈகோ பிடித்த சப் இன்ஸ்பெக்டர் பாஷா (பாவெல் நவகீதன்) புகார் கொடுக்க வருபவர்களிடம் ரௌடித்தனமாக நடந்து கொள்கிறார். அன்று இரவு ஏற்காடு மலைப்பாதையில் கௌதம் (சதீஷ்) பதட்டத்துடன் காரை ஓட்டிச் செல்லும் போது, எதிர்பாராத நிலையில் குறுக்கே வந்த பைக் மீது கார் மோதுகிறது. ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டிய நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைகிறார். ஏற்கனவே பயத்தில் இருந்த கௌதம், உடலை தனது கார் டிக்கியில் ஏற்றி தொடர்ந்து பதட்டத்துடன் அதிவேகமாக பயணிக்கிறார். அப்போது சப் இன்ஸ்பெக்டர் பாஷாவிடம் மாட்டிக்கொள்கிறார். கௌதம் சூழ்நிலையை சமாளிக்க தான் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக கூறுகிறார். சப் இன்ஸ்பெக்டர் சக காவலரிடம் காரை சோதனை செய்ய சொல்லும் போது கௌதம் திடீரென சப்-இன்ஸ்பெக்டர் பாஷாவை அறைந்து விடுகிறார். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அதற்காகவும், காவலரை தாக்கிய அதற்காகவும் கௌதமை காவல் நிலையத்திற்கு பிடித்துச் செல்கின்றனர். உடன் கௌதம் ஓட்டி வந்த காரையும் காவல் நிலையத்திற்கு எடுத்து வருகின்றனர். சக காவலர்கள் முன்னிலையில் தன்னை கன்னத்தில் அறைந்த கௌதமை பழிவாங்க துடிக்கிறார் சப்-இன்ஸ்பெக்டர் பாஷா. அதே நேரத்தில், ஏற்காடு ரவுண்டானாவில் ஒரு இளம் பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். தகவல் அறிந்து விசாரணைக்கு வருகிறார் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் (அஜய் ராஜ்). அவரது கீழ் செயல்படும் சப்-இன்ஸ்பெக்டர் பாஷாவின் ரெளடித் தனமான செயலை பிடிக்காததால், அவருக்கு எதிராக நிற்கிறார் சப்-இன்ஸ்பெக்டர் அஜய் ராஜ். சப்-இன்ஸ்பெக்டர் பாஷாவுக்கு எதிராக கௌதமுக்கு ஆதரவாக செயல்படுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? விபத்தில் இருந்த அந்த ஆசாமி யார்? கொலை செய்யப்பட்ட அந்த இளம் பெண் யார்? காவலர்களிடம் மாட்டிக்கொண்ட கௌதம் நிலை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகன் சதீஷ் தான் என்றாலும், பவல் நவகீதன் மற்றும் அஜய் ராஜ் ஆகிய இருவருக்கும் தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சதீஷ் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவதாக நினைத்து ஆங்காங்கே சற்று ஓவர் ஆக்டிங் மட்டும் வெளிப்படுத்தி உள்ளார்.
அதே நேரத்தில் பவல் நவகீதன் மற்றும் அஜய் ராஜ் ஆகிய இருவரும் தங்களது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
மேலும் மைம் கோபி, ரித்திகா, கேபி சதீஷ், வித்யா பிரதீப், பாவா செல்லதுரை, ராம்தாஸ், அஜய் தேசாய் உட்பட அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர உறுதுணையாக இருந்துள்ளனர்.
பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு, எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசை மற்றும் பின்னணி இசை, மார்ட்டின் டைட்டஸ் படத்தொகுப்பு படத்திற்கு பலமாக இருந்து விறுவிறுப்பை கூட்டி உள்ளனர்.
இரவு நேரத்தில் காவல் நிலையத்தை சுற்றி நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து கிளைமாக்ஸ் வரை பார்வையாளர்களை இடைவிடாமல் இருக்கையின் நுனியில் அமர வைத்து ஒரு அவுட் அண்ட் அவுட் த்ரில்லராக திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் சாச்சி.
மொத்தத்தில் சண்முகம் கிரியேஷன்ஸ் மற்றும் சீட்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத்வாஜ் முரளி கிருஷ்ணன், ஆனந்த கிருஷ்ணன் சண்முகம், ஸ்ரீராம் சத்ய நாராயணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் சட்டம் என் கையில் கமர்ஷியல் த்ரில்லருடன் கலந்த ஆடு புலி ஆட்டம்.