சக்ரா விமர்சனம்

0
17

சக்ரா விமர்சனம்

சுதந்திர தனத்தன்று போலீஸ் கெடுபிடி இல்லாத இடங்களில் ஒரு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி ஏழு கோடி மதிப்பிலான நகைகள், பணத்தை கொள்ளையடித்து செல்கிறது. வசதியான வயது முதிர்ந்தவர்கள் வசிக்கும் ஐம்பது வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை நடக்கிறது. இதில் ராணுவ அதிகாரி விஷாலின் பாட்டியும் அடங்குவார். விஷாலின் வீட்டிலிருந்து நகை, பணம் தவிர அவரின் தந்தை வாங்கிய சக்ரா விருதையும் களவாடி சென்று விடுகின்றனர். இதனால் கோபமடையும் விஷால் கொள்ளையர்கள் பிடிக்க தன் காதலி போலீஸ் உயர் அதிகாரியான இந்த வழக்கை விசாரிக்கும் ஷ்ரத்தாவுடன் கை கோர்த்து விசாரணையை மேற்கொள்கிறார். விசாரணையில் திடுக்கிடும் திருப்பங்களை விஷால் சந்திக்க நேரிடுகிறது. அதனை எதிர்கொண்டு சாமர்த்தியாக கையாண்டு விசாரணையை முடித்து குற்றவாளிகளை கைது செய்தாரா? தன் தந்தையி;ன் சக்ரா விருதை கண்டு பிடித்தாரா? என்பதே க்ளைமேக்ஸ்.

விஷாலுக்குகேற்ற கதாபாத்திரமான ராணுவ அதிகாரியாக தன் பங்களிப்பை ஆக்ஷன், ரியக்ஷனோடு சிறப்பாக செய்து கை தட்டல் பெறுகிறார்.

ஷ்ரத்தா கபூர் விஷாலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அடக்கி வாசித்திருக்கும் கதாபாத்திரம். வில்லத்தனமாக மிரட்டல் பெண்ணாக ரெஜினா காசென்ட்ரா அதிர வைத்திருக்கிறார்.ரோபோ சங்கர், கே.ஆர்.விஜயா,மனோபாலா, ஷ்ருஷ்டி டாங்கே மற்றும் பலர் படத்திற்கு பக்கமேளங்கள்.

பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவும், யுவன் ஷங்;கர் ராஜாவின் பிண்ணனி இசையும் படத்தின் காட்சிகளுக்கு உத்திரவாதம் கொடுக்கின்றனர்.

ஒரு செயலியால் ஏற்படும் விபரீதங்கள், விசாரணையில் சம்பவங்களை இணைத்து துப்பறியும் சாமர்த்தியம் என்று இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் க்ரைமை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் யூகத்தில் ஜாக்கிரதையாக தகவல்களை பகிர வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு ஆக்ஷன் கலந்து ஒரு வித்தியாசமான முயற்சியோடு கதையை கொடுத்து வெற்றிபெற்றிருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன்.

மொத்தத்தில் விஷால் பிலிம் பாக்டரி தயாரிப்பில் விஷால் நடித்த சக்ரா படம் எதிரிகளை சுழன்று அடித்து உண்மையை கண்டறியும் பிரம்மாஸ்திரம்.