கோப்ரா விமர்சனம் : திறமையான கலைஞர்களின் நல்ல நடிப்பை படம் எடுத்து காட்டியுள்ள கோப்ரா-வின் சீற்றம் குறைவு | ரேட்டிங்: 3/5

0
689

கோப்ரா விமர்சனம் : திறமையான கலைஞர்களின் நல்ல நடிப்பை படம் எடுத்து காட்டியுள்ள கோப்ரா-வின் சீற்றம் குறைவு | ரேட்டிங்: 3/5

நடிப்பு: சியான் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் பலர்
இயக்குனர்: அஜய் ஞானமுத்து
தயாரிப்பாளர்: எஸ்.எஸ்.லலித் குமார்
பேனர் :  செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்  (seven screen studio)
இசையமைப்பாளர்கள்: ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு: ஹரிஷ் கண்ணன்
எடிட்டர்: புவன் சீனிவாசன்
மக்கள் தொடர்பு: யுவராஜ்

விக்ரம் பெரிய திரையில் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. தற்போது கோப்ரா படத்தின் மூலம் மீண்டும் வந்துள்ளார். விக்ரம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவான கோப்ரா விக்ரம் ரசிகர்கள் பசியை போக்குமா என்று பார்ப்போம்.
கதை:
மதி (விக்ரம்) ஒரு கணித ஆசிரியர். இதுவே அவரது தொழில் என்றாலும் தலைமறைவாகி பெரிய குற்றங்களைச் செய்கிறார். ஒரிசாவின் முதல்வர் ஸ்காட்லாந்தின் இளவரசர் ஆகியோரை ஒருவர் பின் ஒருவராக கொன்று கொண்டே இருக்கிறார். இந்தக் கொலைகளுக்கு அவர் தனது கணிதத் திறமையை பயன்படுத்துகிறார். பல்வேறு பகுதிகளில் நடந்த இந்தக் கொலைகளுக்கு பின்னால் உள்ள தொடர்பைக் கண்டுபிடிக்கும் இன்டர்போல் அதிகாரியான அஸ்லாம் (இர்பான் பதான்) ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் வந்து இவற்றின் மூளையாக யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்குகிறார். விசாரணையில், கோப்ரா என்று அழைக்கப்படும் இந்த கொலையாளி பற்றிய அதிர்ச்சித் தகவலை போலீசார் கண்டுபிடிக்கிறனர். யார் இந்த கோப்ரா? அவன் கதை என்ன? அவன் ஏன் இந்தக் குற்றங்களைச் செய்கிறார்? அவரது இலக்கு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

விக்ரம் எப்போதும் மிகவும் சிக்கலான வேடங்களில் நடித்து வருபவர். விக்ரமின் நடிப்புத் திறமை பற்றி சொல்ல புதிதாக என்ன இருக்கிறது? எந்த வேடத்தையும் சிறப்பாக செய்வதும் மிக சாதாரணமாக வேடங்களில் கூட பிரமாதமாக நடிக்கும் அவர் ‘கோப்ரா’ படத்திற்காக அவர் பல வேடங்களில் நடித்துள்ளார். எதையாவது செய்ய வேண்டும் என்ற தேடலில், ஒரு சில மாறுவேடங்களுக்காக மணிக்கணக்கில் மேக்கப் போடும் விக்ரமின் பொறுமையை பாராட்டத்தான் வேண்டும். அந்த மாறுவேடங்கள் தவிர, இரட்டை வேடத்தில் விக்ரம் அழகாக நடித்து காட்டிய மாறுபாடு ஈர்க்கக்கூடிய அவருடைய நடிப்பு மற்றும் ஸ்கிரீன் பிரசன்ஸ் நன்றாக இருக்கிறது.
திறமையான மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ நெகட்டிவ் ரோலில்; சாதாரணமாகத் தோன்றுகிறார்.

ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி (கே ஜி எஃப் புகழ்) இதில் சிறப்பு எதுவும் காணவில்லை. அவரது கதாபாத்திரம் மிகவும் சாதாரணமானது. ஓரிரு காட்சிகளில் அவரது அசைவுகள் பிரமிக்க வைக்கின்றன.

கிரிக்கெட் வீரர் இர்பான் பதானை இன்டர்போல் அதிகாரியாக நேர்த்தியாக இருக்கிறது. படத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், சிறப்பாக நடித்திருக்கிறார்.

ப்ளாஷ்பேக்கில் மிருணாளினி ரவிக்கு முக்கியமான  கதாபாத்திரம் நன்றாக செய்துள்ளார்.

கே.எஸ்.ரவிக்குமார், ரோபோ சங்கர், ஆனந்தராஜ்,மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் தங்கள் பாத்திரங்களில் படத்தில் நடித்ததன் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்தின் ஆன்மா. இன்னும் ஒரு பெரிய போனஸ் அவரது பின்னணி இசை.

புவன் சீனிவாசன் எடிட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி படத்தை 30 நிமிடங்கள் குறைத்திருந்தால் கோப்ராவின் சீற்றம் இன்னும் அதிகரித்திருக்கும்
ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவும், திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகள் ரசிகர்களை கவரும்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து ‘டிமான்டி காலனி’, இமைக்கா நொடிகள்’ போன்ற படங்கள் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர். அந்தப் படங்களைப் பார்ப்பவர்கள் விக்ரம் போன்ற சிறந்த நடிகருடன் அஜய் இயக்கும் படம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் அவரது பாணியில்  மீண்டும் ஒரு த்ரில்லர் உருவாக்க முயன்றால் பிரச்சனை இல்லை. ஆனால், விக்ரம், தன் ஸ்டைலுக்கு ஏற்ப மாறுபாடுகளுடன் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ‘கோப்ரா’ படத்தின் ஸ்கிரிப்டை எழுத ஆரம்பித்து அவருடைய எண்ணங்கள். இவற்றைச் சுற்றி இருந்திருக்கின்றன. ஒரிஜினல் கதையில் லாஜிக் இருக்கிறதா இல்லையா என்று பார்க்காமல் இஷ்டத்துக்கு காட்சிகளைக் குவித்து விட்டார். ‘கணிதத்தைப் பயன்படுத்திக் கொலைகளைச் செய்யும் ஆசிரியர்’ என்ற எண்ணம் கேட்கவே பரபரப்பாக இருந்தாலும் திரையில் அதைச் சுற்றியுள்ள காட்சிகள் நம்பவே முடியவில்லை. மாறுவேடத்தில் ஹீரோ செய்யும் கொலைகளின் பின்னணியில் உள்ள காரணங்களை இயக்குனரால் சரியாக காட்சி படுத்த முடியவில்லை. பல அவதாரங்களில் விக்ரம் மிகவும் பொருத்தமானவர் என்றாலும், அவை எதுவும் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை இயக்குனர் அஜய் ஞானமுத்து. இடைவேளைக்கு அருகில் ஹீரோ ஒன்றல்ல இருவர் என்பதை இரண்டாம் பாதியில் காட்டி சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.ஆனால் ‘கோப்ரா வின் திரைக்கதை பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிக்கும் வகையில் உள்ளன.

மொத்தத்தில் திறமையான கலைஞர்களின் நல்ல நடிப்பை படம் எடுத்து காட்டியுள்ள கோப்ரா வின் சீற்றம் குறைவு.