கோட் சினிமா விமர்சனம் : கோட் தடாலடி, அதிரடி, மாஸ் எண்டர்டெயினர் | ரேட்டிங்: 3/5
நடிகர்கள்:- விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல் அமீர், மீனாக்ஷி சௌத்ரி, பார்வதி நாயர், வைபவ், ‘யோகி’ பாபு, பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் வாசுதேவன், ‘விடிவி’ கணேஷ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், அபியுக்தா மணிகண்டன் (அறிமுகம்)
தொழில்நுட்ப கலைஞர்கள்:
எழுத்து மற்றும் இயக்கம் : வெங்கட் பிரபு
தயாரிப்பு : ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் (பி) லிட்
தயாரிப்பாளர்கள் : கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : அர்ச்சனா கல்பாத்தி
இணை கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : ஐஸ்வர்யா கல்பாத்தி
நிர்வாக தயாரிப்பாளர் : எஸ். எம். வெங்கட் மாணிக்கம்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு : சித்தார்த்தா நுனி
கலை இயக்கம் : ராஜீவன்
சண்டைப் பயிற்சி : திலீப் சுப்பராயன்
படத்தொகுப்பு : வெங்கட் ராஜன்
வசனம் : விஜி, வெங்கட் பிரபு
கூடுதல் திரைக்கதை-வசனம் : கே. சந்துரு – எழிலரசு குணசேகரன்
இணை கலை இயக்கம் : பி.சேகர் ரூ சூர்யா ராஜீவன்
பாடல்கள் : கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக்
நடனம் : ராஜு சுந்தரம், சேகர் வி ஜே, சதீஷ், உல்லி
ஆடை வடிவமைப்பு : வாசுகி பாஸ்கர் ரூ பல்லவி சிங்
படங்கள் : டி. மானெக்ஷா
விளம்பர வடிவமைப்பு : கோபி பிரசன்னா
தயாரிப்பு நிர்வாகிகள் : எம்.செந்தில்குமார், கோவிந்தராஜ், ராம்குமார் பாலசுப்ரமணியன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மத், நிகில் முருகன்
எம்.எஸ்.காந்தி (விஜய்), சுனில் (பிரசாந்த்), கல்யாண் (பிரபுதேவா) மற்றும் அஜய் (அஜ்மல் அமீர்) ஆகியோருடன் சேர்ந்து, நாசர் (ஜெயராம்) தலைமையில் சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படை (SATS), கென்யாவில் மேனன் (மோகன்) தலைமையிலான பயங்கரவாத கும்பலை ஒழிப்பதற்கான பணியை வெற்றிகரமாக முடிக்கிறார். எம்.எஸ்.காந்தி தனது தொழிலை கர்ப்பிணி மனைவியிடம் (சினேகா) மறைக்கிறார். தம்பதிகளுக்கு 6 வயதில் மகன் ஜீவன் (விஜய்) மற்றும் இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில், காந்தி தனது கர்ப்பிணி மனைவி (சினேகா) மற்றும் மகன் ஜீவன் ஆகியோரை தாய்லாந்திற்கு தன் வேலையோடு இன்பச் சுற்றுலா பயணத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு எதிரிகளின் தாக்குதலின் போது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்க எதிர்பாராத விதத்தில் மகன் ஜீவன் காணாமல் போகிறார். மகனை தேடும் போது கடத்தப்பட்டதும் விபத்தில் சிறுவன் ஜீவன் இறந்துவிட்டதை காண்கிறார் காந்தி. இந்த சோகமான இழப்பால் கணவன் மனைவியிடம் பேச்சு வார்த்தையின்றி பிரிந்து வாழ்கின்றனர். தன் சாட்ஸ் வேலையிலிருந்து விலகி, ஏர்போர்ட்டில் குடிஅமர்வு பணி செய்கிறார். மேலும் தனது மனைவியுடன் வசிக்கும் தனது மகளை கவனித்துக் கொள்கிறார். ரஷ்யாவிற்கு ஒரு வேலை பயணத்தில், அங்கு நடக்கும் கலவரத்தின் போது காந்தி , தற்செயலாக இறந்துவிட்டதாக நினைத்த மகன் ஜீவனை (இளம் விஜய்) உயிருடன் சந்திக்கிறார். காந்தி ஜீவனை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வருகிறார். காந்தி தன் மகன் ஜீவனுடன் ஒன்றாக வீடு திரும்பியதைத் தொடர்ந்து, பிரிந்து இருந்த கணவன் மனைவி மீண்டும் இணைகிறார்கள். அவர்கள் வருகைக்குப் பின் சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படை உறுப்பினர்களை உள்ளடக்கிய விசித்திரமான நிகழ்வுகள் வெளிவரத் தொடங்குகின்றன. அவர் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதாக நம்பும் போது தனது எதிரி மேனனை (மோகன்) சந்திக்கிறார். மேனனை எதிர்கொள்ள காந்தி மீண்டும் சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படை குழுவில் இணைந்து உண்மையை வெளிக்கொணரும் தேடலைத் தொடங்குகிறார். காந்தி வெற்றி பெற்றாரா? ஜீவன் உண்மையிலேயே அவர் மகனா? ஜீவனுக்கும் மேனனுக்கும் தொடர்பு என்ன? இந்தக் கேள்விகளுக்கு பல திருப்புமுனையில் திரைக்கதை பதில் சொல்கிறது.
விஜய் (காந்தி) தந்தை மற்றும் மகன் (ஜீவன்) இரு வேடங்களில் சிறந்து விளங்கி அவரது பன்முகத்தன்மையின் மூலம் ஜொலிக்கிறார். 2007 ஆம் ஆண்டு வெளிவந்த அழகிய தமிழ்மகன் படத்தில் முதன்முதலாக ஒரு கதாபாத்திரத்தில் வில்லனாக அறிமுகமானார். ஆனால் அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு, கோட்டில் விஜய் ஜீவனாக மீண்டும் வில்லத்தனமான கதையின் மையக் கதாபாத்திரத்தை அழுத்தமாக வெளிப்படுத்தி உள்ளார். அதே நேரத்தில் காந்தியாக அவரது அமைதியான மற்றும் ஸ்டைலான சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்துடன் நல்ல குடும்பத் தலைவனாகவும், மகன் ஜீவன் கதாபாத்திரத்துடன் ஜோடியாக இருவரும் வசீகரத்தை கூட்டுகிறார்கள். ஆக்ஷன் காட்சிகளில் தூள் கிளப்பியுள்ளார். இரண்டு வேடங்களையும் லாவகமாக பேலன்ஸ் செய்யும் விஜய்யின் திறமை படத்தின் மிகப்பெரிய பலம். குறிப்பாக சூப்பர் கூல் அண்ட் ஸ்டைலிஷ் வில்லன் விஜய் இந்த முறை அனைவரையும் கவர்ந்துள்ளார். விஜய் சிரமமின்றி படத்தை தனது தோளில் சுமந்து, அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார்.
வயதைக் குறைக்கும் ‘ஏஐ’ தொழில்நுட்பம் அவருக்கு புதிய தோற்றத்தைக் மிகவும் திறம்பட காட்டினாலும், ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் இளைய விஜய் தனது இளம் பருவத்தில் இருப்பதைக் காட்ட, வயதைக் குறைக்கும் வேலை கொஞ்சம் தரமற்றதாக உள்ளது. அதே நேரத்தில் மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான ‘கேப்டன்’ விஜயகாந்தை திரையில் உயிர்ப்பிக்கிறார். இருப்பினும், ‘ஏஐ’ வேலை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
பிரசாந்த் விஜய்யுடன் இணைந்து சுனில் கதாபாத்திரத்தில் திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளார். சமீபத்தில் வெளியான அந்தகன் மிகப்பெரிய வெற்றியை பிரசாந்த்க்கு தேடி தந்தது. அது போல கோட் படத்தின் மூலம் பிரசாந்த் மீண்டும் ஒரு ரவுண்ட் வலம் வரும் வகையில் அவரது கதாபாத்திரம் நேர்த்தியான நடிப்பு அமைந்துள்ளது.
ஸ்டைலிஷ் லுக்கில் வில்லானாக மோகன் தோன்றினாலும், அவருக்கு சித்தரிக்கப்பட்ட மேனன் பாத்திரம், ஆழம் இல்லாததால், அவர் பெரிய அளவில் வில்லத்தனமாக சித்தரிக்க அனுமதிக்கவில்லை.
பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல் அமீர், மீனாக்ஷி சௌத்ரி, பார்வதி நாயர், வைபவ், அமரன், யுகேந்திரன் வாசுதேவன், ‘விடிவி’ கணேஷ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், அபியுக்தா மணிகண்டன் ஆகியோர் தங்கள் வரையறுக்கப்பட்ட பாத்திரங்களில் நேர்த்தியான நடிப்பு வழங்குகிறார்கள்.
‘யோகி’ பாபு, பிரேம்ஜி இருவரும் அடக்கமாக நகைச்சுவையில் இரண்டாம் பாதியில் நகைச்சுவை நிவாரணத்தை வழங்குகிறார்கள்.
எம் எஸ் தோனி (சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் போட்டியின் போது), த்ரிஷா மற்றும் சிவகார்த்திகேயன் சிறப்பு கேமியோ பார்வையாளர்களை பரவச படுத்தினாலும் படத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ஒரு அடையாளத்தை விட்டு வைக்கத் தவறியது, மேலும் பின்னணி இசை மிகவும் பலவீனமாக உள்ளது.
சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு சாதாரணமாக தான் உள்ளது.
படத் தொகுப்பாளர் வெங்கட் ராஜன் எடிட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
திலீப் சுப்பராயனின் ஆக்ஷன் காட்சிகளும் சராசரி. கென்யா, தாய்லாந்து மற்றும் மாஸ்கோவில் ஆக்ஷன் காட்சிகள் ஒரு த்ரில்லருக்குத் தேவையான தாக்கமும் தீவிரமும் இல்லை.
வெங்கட் பிரபு, நல்ல கமர்சியல் அம்சங்களைக் கொண்ட வேடிக்கையான பொழுதுபோக்குகளுக்கு பெயர் பெற்றவர், கோட் இல் கதைக்களம் யூகிக்கக்கூடிய மற்றும் பழக்கமான டெம்ப்ளேட்டை பின்பற்றி இருக்கிறார். ஒரு பிரிந்த மகன் தனது சொந்த தந்தையைப் பழிவாங்கும் நோக்கத்துடன் தனது குடும்பத்திற்கு திரும்பும் திரைக்கதையில் விஜய்யின் வர்த்தக முத்திரை பயன்படுத்தி வழக்கமான அவரது ஆஸ்தான நடிகர்களுக்கு வாய்ப்பு அளித்து, பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் போதுமான, வணிகக் கூறுகள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்கும் தருணங்களுடன் படைத்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.
மொத்தத்தில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் (பி) லிட் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் இணைந்து தயாரித்து இருக்கும் கோட் தடாலடி, அதிரடி, மாஸ் எண்டர்டெயினர்.