கொட்டுக்காளி சினிமா விமர்சனம் : கொட்டுக்காளி பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கிறது | ரேட்டிங்: 2/5
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும், பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்குனர் – பி.எஸ்.வினோத்ராஜ்
தயாரிப்பாளர் – சிவகார்த்திகேயன்
தயாரிப்பு – சிவகார்த்திகேயன் தயாரிப்பு
இணைத் தயாரிப்பாளர் – கலை அரசு
எடிட்டர் – கணேஷ் சிவா
டோப்- சக்தி
ஒலி வடிவமைப்பாளர் – சுரேன் ஜி, எஸ். அழகிய கூத்தன்
விளம்பர வடிவமைப்பாளர் -கபிலன்
சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரங்கள் – ரகுல் பரசுராம்
நிர்வாக தயாரிப்பாளர் – பானு பிரியா
மக்கள் தொடர்பு : டி.ஒன்.
முறைப்பெண் மீனாவுக்கும் (அன்னா பென்), பாண்டிக்கும் (சூரி) திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்நிலையில் மீனாவுக்கு பேய் பிடித்துவிடுகிறது என்று நம்பும் குடும்பத்தார் அவளை ஒரு குல தெய்வத்திடம் இழுத்துச் சென்று பூஜை செய்கின்றனர். பின்னர் பேயை விரட்ட பாலமேடு பகுதியில் இருக்கும் சாமியாரிடம் பாண்டி மற்றும் மீனா குடும்பத்தினர் மோட்டார் சைக்கிள்களில் ஆண்களும், பெண்கள் ஆட்டோ ரிக்ஷாவிலும் பலி கொடுக்க சேவலுடன் பயணப்படுகிறார்கள். மீனா ஏன் பேய் பிடித்தது போல் இருக்கிறாள்? உண்மையிலேயே மீனாவுக்கு பேய் பிடித்ததா இல்லையா? இந்தப் பயணத்தில் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
மீனாவாக அன்னா பென் பெரும்பாலும் அமைதியான ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மௌனத்துடன், பிடிவாதத்துடன் போராடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
பாண்டி என்ற முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் சூரி கச்சிதமாக பொருந்தி சிறப்பாக நடித்துள்ளார்.
படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்கள் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் கிடையாது. லைவ் சவுண்ட் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
சாதி இயக்கவியல் மற்றும் பாரம்பரியம் பற்றிய நுட்பமான ஆய்வில் விடியற்காலை ஆரம்பித்து சாமியாரிடம் சென்று சேர்வது வரையிலான ஒரு சிறுகதையை 100 நிமிடங்கள் இழு இழு என்று இழுத்து பார்வையாளரின் பொறுமையை சோதிக்க கூடிய வகையில் இயக்கி உள்ளார் இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ்.
மொத்தத்தில் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் வழங்கும் கொட்டுக்காளி பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கிறது.