கேப்டன் மில்லர் சினிமா விமர்சனம் : கேப்டன் மில்லர் இந்த தை பொங்கலுக்கு பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் ஒரு சரியான அதிரடி ஆக்ஷன் ட்ரீட் | ரேட்டிங்: 4/5
கேரக்டர் பெயர்களுடன் கேப்டன் மில்லர் நடிகர்கள்
தனுஷ் – அனலீசன் ஃ மில்லர்
டாக்டர் சிவ ராஜ்குமார் – செங்கோலன்
பிரியங்கா மோகன் – வேல்மதி
சந்தீப் கிஷன் – ரஃபி
இளங்கோ குமரவேல் – கண்ணையா
நிவேதிதா சதீஷ் – தென்பசியார்
அதிதி பாலன் – சகுந்தலா
வினோத் கிஷன் – டேனியல் முத்துசாமி
அப்துல் லீ – செம்மட்டை ஃ ஸ்டீபன்
விஜி சந்திரசேகர் – பேச்சம்மா
ஜான் கொக்கன் – சேனாதிபதி
ஜெயபிரகாஷ் – ராஜாதிபதி
பிந்து பாண்டு – காளி
ராஜரிஷி – காங்காய் கருப்பு
காளி வெங்கட் – கனகசபை
அசுரன் ஜே.கே. – வின்சென்ட் பிள்ளை
ஸ்வயம்சித்தா தாஸ் – அனுசுயா
போஸ் வெங்கட் – ஒத்தக்கண் கொள்ளையன்
அருணோதயன் – அய்யாவு
சுவாதி கிருஷ்ணன் – குயிலி
ஆண்டனி – ஆண்டியப்பன்
ஐஸ்வர்யா ரகுபதி – ராக்காயி
எட்வர்ட் சோனென்ப்ளிக் – ஆண்ட்ரூ வாண்டி
அஸ்வின் குமார் – ஜேம்ஸ்
அலெக்ஸ் ஓ’நெல் – ரிலே
மார்க் பென்னிங்டன் – ஜெனரல் புல்லர்
டேவிட் ஹாரிசன் – தாமஸ்
முருகன் – மண்ணாங்கட்டி
அஷ்ரப் மல்லிசேரி – செட்டா ஃ ஒல்லாக்கா
ஸ்டண்ட் கணேசன் – ஓட்டுக்கு
தொழில்நுட்ப கலைஞர்கள்:
எழுதி இயக்கியவர் : அருண் மாதேஸ்வரன்
தயாரிப்பு நிறுவனம் : சத்ய ஜோதி பிலிம்ஸ்
தயாரிப்பாளர்கள் : செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன்
இசை : ஜி.வி.பிரகாஷ்
ஒளிப்பதிவு : சித்தார்த்தா நுனி
வசனம் : மதன் கார்க்கி
எடிட்டிங் : நாகூரன்
கலை இயக்குனர் : டி.ராமலிங்கம்
ஆடை வடிவமைப்பு : பூர்ணிமா ராமசாமி மற்றும் காவ்யா ஸ்ரீராம்
சண்டைக்காட்சிகள் : திலிப் சுப்பராயன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது, சதீஷ் (AIM)
கொரனார் தெய்வம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறிய கிராமம் மற்றும் அதன் பழங்குடியினரின் பாதுகாவலராக உள்ளது. சுமார் 600 ஆண்டுகளாக கிராமத்தையும் அதன் மக்களையும் பாதுகாத்து வரும் கொரனார் தெய்வத்தின் (ஒரு ரத்தினக் கல் வடிவத்தில்) ஒரு நாட்டுப்புறக் கதையை ஒரு பெண் விவரிக்கிறார்.
சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதையில் தமிழகத்தின் கடைகோடி கிராமம் ஒன்றில் தனது தாயாருடன் வாழ்ந்து வருகிறார் அனலீசன் (தனுஷ்). அனலீசன், அவரது தாயார் மற்றும் அவரது கிராமத்தில் உள்ள மற்றவர்கள் அந்த மாகாணத்தின் பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் ராஜாவால் அடக்குமுறைக்கு ஆளானவர்கள். ராஜாவும் இளவரசனும் பழங்குடியினரின் நிலத்தின் மீது தங்கள் கண்களை வைத்துள்ளனர், அது பழங்குடியினருக்கு வழங்கப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு சொந்தமானது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஈசனுக்கும் அவருடைய கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு அவர்கள் கட்டிய கோவிலுக்குள் நுழைய விடாமல் அந்த ராஜா அவர்களைத் தடுக்கிறார். அத்துடன் இருபுறமிருந்தும் மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். அவரது சகோதரர் செங்கோலன் (சிவராஜ்குமார்) தனது மாகாணத்தின் ராஜாவால் கிராம மக்களும் அவரும் அனுபவிக்கும் பாகுபாடுகளில் இருந்து மரியாதை மற்றும் சுதந்திரத்தை மீட்க போராடுகிறார். சகோதரர் செங்கோலன் (சிவ ராஜ்குமார்) ஒரு கிராம திருவிழாவிற்கு வருகிறார், அவரது தாயார் அங்கு நடக்கும் தாக்குதலில் கொல்லப்படுகிறார். இந்நிலையில் இராணுவ சீருடையில் தனக்கு மரியாதை கிடைக்கும் என நம்பும் அனலீசன் இராணுவத்தில் சிப்பாயாக சேருகிறார். இராணுவத்தில் அவர் மில்லர் என மறுபெயரிடப்பட்டு கேப்டன் மில்லர் என்று அழைக்கப்பட விரும்புகிறார். தனக்கென ஒரு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கும் அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரத்திற்காக போராடும் தனது சொந்த மக்களைக் கொல்லும் பணியை அவர் செய்யும் போது, தன் தவறுகளை உணர்ந்து, தனது மக்களை சுட கட்டளையிட்ட பிரிட்டிஷ் பொறுப்பு அதிகாரியை சுட்டுக் கொன்று விட்டு தப்பி ஓடுகிறார். அத்துடன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறார். தன் தவறுகளை உணர்ந்து, குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் அனலீசன் ஊர் திரும்ப, கொலைகாரன் என கூறி துரத்தியடிக்க படுகிறார். பின்னர் கொள்ளைக் கும்பல் ஒன்றுடன் கைகோக்கும் அவர், அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் மூலம் உள்ளூர் ராஜாவுக்கும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குவதுடன், ஒடுக்குமுறையில் இருந்து மக்களை மீட்டது எப்படி என்பதே படத்தின் மீதிக்கதை.
கதை தேர்வு, கடின உழைப்பு என அனைத்திலும் அக்கறையுடன் செயல்படுவதால் இன்று உலகமே போற்றும் சிறந்த நாயகனாக தனுஷ் வலம் வருகிறார். அந்த உழைப்புக்கு கிடைத்த மாபெரும் பரிசு தான் கேப்டன் மில்லர். தனுஷ் மூன்று வித்தியாசமான தோற்றங்கள் ஒவ்வொரு பிரேமிலும் அவரது பாத்திரம் கச்சிதமாக சித்தரித்து உண்மையிலேயே தனித்து நிற்கிறார். படத்தை தனது திறமையான தோள்களில் சுமந்து, மறக்க முடியாத அனுபவத்தை தருகிறார். ராணுவ உடையில் சிப்பாயாக நடக்கும்போது, நீளமான தாடியுடன் நடக்கும் போது, சண்டை காட்சியின் போது, ஆங்கிலேயர்களை நோக்கி துப்பாக்கியால் சுடும் போது அல்லது பிரியங்கா அருள் மோகன் வேல் மதியின் கைகளைப் பிடித்து வழி காட்டும் போது தனுஷ் தனது கோபத்தையும் வேதனையையும் நேர்த்தியுடன் எழுதப்பட்ட ஒவ்வொரு மாஸ் காட்சியின் மூலம் கண்களால் உணர்ச்சி வசப்படுத்தி அதை எளிதில் பார்வையாளர்களை உணர வைக்கிறார்.
சிவராஜ்குமார் மற்றும் சந்தீப் ஆகியோர் அற்புதமான கேமியோக்களை செய்துள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரரர் செங்கோலனாகவும், இசனின் சகோதரனாகவும் சிவராஜ்குமார் சரியான தேர்வு. க்ளைமாக்ஸின் போது தனுஷ் உடன் அவர்கள் சேர்ந்து தங்களுடைய ரசிகர்களுக்கு அதிரடி விருந்து படைத்துள்ளனர்.
பிரியங்கா மோகன் – வேல்மதி, சந்தீப் கிஷன் – ரஃபி, இளங்கோ குமரவேல் – கண்ணையா, நிவேதிதா சதீஷ் – தென்பசியார், அதிதி பாலன் – சகுந்தலா, வினோத் கிஷன் – டேனியல் முத்துசாமி, அப்துல் லீ – செம்மட்டை ஃ ஸ்டீபன், விஜி சந்திரசேகர் – பேச்சம்மா, ஜான் கொக்கன் – சேனாதிபதி, ஜெயபிரகாஷ் – ராஜாதிபதி, பிந்து பாண்டு – காளி, ராஜரிஷி – காங்காய் கருப்பு, காளி வெங்கட் – கனகசபை, அசுரன் ஜே.கே. – வின்சென்ட் பிள்ளை, ஸ்வயம்சித்தா தாஸ் – அனுசுயா, போஸ் வெங்கட் – ஒத்தக்கான் கொள்ளையன், அருணோதயன் – அய்யாவு, சுவாதி கிருஷ்ணன் – குயிலி, ஆண்டனி – ஆண்டியப்பன், ஐஸ்வர்யா ரகுபதி – ராக்காயி, எட்வர்ட் சோனென்ப்ளிக் – ஆண்ட்ரூ வாண்டி, அஸ்வின் குமார் – ஜேம்ஸ், அலெக்ஸ் ஓ’நெல் – ரிலே, மார்க் பென்னிங்டன் – ஜெனரல் புல்லர், டேவிட் ஹாரிசன் – தாமஸ், முருகன் – மண்ணாங்கட்டி, அஷ்ரப் மல்லிசேரி – செட்டா ஃ ஒல்லாக்கா, ஸ்டண்ட் கணேசன் – ஓடுக்கு ஆகியோர் கோபம், வலி, வேதனை, ஆக்ரோஷம் என அனைத்தையும் சிறந்த நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி அந்த அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து கேப்டன் மில்லரின் வெற்றிக்கு கடுமையாக உழைத்திருப்பது நன்றாகவே தெரிகிறது.
கேப்டன் மில்லர் முதல் நாயகன் தனுஷ் என்றால் படத்தின் அடுத்த நாயகன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. ‘தி கில்லர் கில்லர்’ பாடலுடன் ஒரு இசை விருந்து படைத்ததுடன், அவர் படத்தில் எல்லா உணர்ச்சிகளையும் தனது அற்புதமான பின்னணி இசையுடன் வெளி கொண்டு வருகிறார்.
ஆரம்பம் முதல் இறுதி வரை நிரம்பியுள்ள துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள், நெருப்பு மற்றும் இரத்தக்களரிகளுடன் பயணிக்கும் தாக்கமான காட்சிகளை தன் கேமரா கோணங்களிலும் நகர்வுகளாலும் தன் பெயரை அழுத்தமாகப் பதிக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி.
எடிட்டிங் : நாகூரன் கொஞ்சம் நீளத்தை குறைத்து இருக்கலாம்.
கலை இயக்குனர் டி.ராமலிங்கம் உழைப்பு பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூர்ணிமா ராமசாமி மற்றும் காவ்யா ஸ்ரீராம் காலத்திற்கு ஏற்றார் போல கச்சிதமாக ஆடை வடிவமைத்துள்ளனர்.
சண்டைக்காட்சிகள் – திலிப் சுப்பராயன்: படத்தில் இரண்டு பெரிய ஆக்ஷன் காட்சிகள் உள்ளன – படத்தில் மில்லர் மற்றும் அவரது கும்பல் ஒரு டிரக்கை கொள்ளையடிக்கும் காட்சி அற்புதமானது, மற்றொன்று அங்கு முழு நேரமும் பைக்கில் ஆக்ஷன் செய்கிற காட்சி பரபரப்பானது. பிரமிக்க வைக்கும் லாங் ஷாட்கள் மற்றும் அழுத்தமான பின்னணி ஸ்கோருடன், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கேப்டன் மில்லர் இந்த ஆண்டிற்கு ஒரு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது.
படத்தின் இயக்குனரும் எழுத்தாளருமான அருண் மாதேஸ்வரன் ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டிஷர்களிடமிருந்து மட்டுமல்ல, ஒடுக்குமுறையாளர்களிடமிருந்தும் சுதந்திரத்திற்கான போராட்டத்தைப் மையக்கருவாக வைத்து ஒரு கற்பனைக் கதையை ஆறு அத்தியாயங்களில் இறுக்கமான திரைக்கதை அமைத்து பிரமிக்க வைக்கும் மற்றும் ஆக்ஷன் நிரம்பிய படமாகத் படைத்துள்ளார்.
மொத்தத்தில் சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்திருக்கும் கேப்டன் மில்லர் இந்த தை பொங்கலுக்கு பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் ஒரு சரியான அதிரடி ஆக்ஷன் ட்ரீட்.