கேஜிஎஃப் (KGF) அத்தியாயம் 2 விமர்சனம்: இந்திய மொழிகளுக்கு இடையே உள்ள எல்லைகளை மழுங்கடித்து வெற்றி கொடி கட்டும் படங்களில் ஒன்று கேஜிஎஃப் (KGF) அத்தியாயம் 2  | ரேட்டிங் – 4/5

கேஜிஎஃப் (KGF) அத்தியாயம் 2 விமர்சனம்: இந்திய மொழிகளுக்கு இடையே உள்ள எல்லைகளை மழுங்கடித்து வெற்றி கொடி கட்டும் படங்களில் ஒன்று கேஜிஎஃப் (KGF) அத்தியாயம் 2  | ரேட்டிங் – 4/5

நடிகர்கள்: யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ்
இசை: ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு: புவன் கவுடா
தயாரிப்பாளர்: விஜய் கிரகந்தூர்
எடிட்டர்: உஜ்வல் குல்கர்னி
எழுத்தாளர்-இயக்குனர்: பிரஷாந்த் நீல்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

கேஜிஎஃப் அத்தியாயம் 2, நட்சத்திர நடிகர்-இயக்குனர் இரட்டையர் யாஷ் மற்றும் பிரசாந்த் நீல் கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹை வோல்டேஜ் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் கேஜிஎஃப். நான்கு ஆண்டுகளுக்கு முன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து பாக்ஸ் ஆபிஸில் பல கோடிகளை வசூலித்தது அனைவரும் அறிந்ததே. அப்போதிலிருந்து சினிமா ரசிகர்களுக்கு கேஜிஎஃப்  அத்தியாயம்-2 படத்தின் மீது தீவிர ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. நான்கு முறைக்கு மேல் தள்ளிப்போன கேஜிஎஃப் அத்தியாயம் 2 உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா என்று பார்ப்போம்.
கேஜிஎஃப்-ன் முதல் படத்திலேயே தங்கச் சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் கடவுளாக ராக்கி வருகிறார். அவர் அவர்களை சித்திரவதை செய்து மற்றும் அவர்களின் உயிரைப் பறிப்பவர்களை கொடூரமாகக் கொள்கிறார். இதன் மூலம் தொழிலாளர்கள் ராக்கியை கடவுளாக கருதுகின்றனர். ராக்கி இறுதியாக தங்கச் சுரங்கத்தின் உரிமையாளரான கருடனைக் கொள்கிறார். இந்த வரிசையில் கேஜிஎஃப் ராக்கிக்கு சொந்தமாகிறது. அங்கிருந்து கேஜிஎஃப் அத்தியாயம் 2 தொடங்குகிறது.

முதல் பாகத்தில் ராக்கி பாயின் கதையை பிரபல எழுத்தாளர் ஆனந்த் வாசிராஜு (ஆனந்த் நாக்) சொல்கிறார், பாகம் 2ல் அவரது மகன் விஜயேந்திரவசிராஜு (பிரகாஷ் ராஜ்) கதை சொல்கிறார். கருடனைக் கொன்ற பிறகு, ராக்கி பாய் (யாஷ்) தங்கச் சுரங்கத்தைக் கைப்பற்றுகிறார். கருடன் தந்த சித்ரவதையில் இருந்து தப்பித்த தொழிலாளிகள் ராக்கியை ராஜாவாக கருதுகிறார்கள்.

கே.ஜே.எஃப் சாம்ராஜ்ஜியத்தில் தன்னை எதிர்கொள்ள முடியாது என்று நினைக்கும் நேரத்தில் ‘நாராச்சி லைம் ஸ்டோன் கார்ப்பரேஷன்” உருவாக்கிய சூர்யவர்தனின் சகோதரர் ஆதிரா (சஞ்சய் தத்) திரையில் தோன்றுகிறார். அதே நேரத்தில் ராக்கிபாய் அரசியல் ரீதியாகவும் சவால்களை எதிர்கொள்கிறார். இந்தியப் பிரதம மந்திரி ரமிகா சென் (ரவீனா டாண்டன்) அவனது சாம்ராஜ்யத்தைப் பற்றி அறிந்து அவர் மீது போர் பிரகடனம் செய்கிறார். ஒருபுறம் ஆதிரா, மறுபுறம் ரமிகா சென் மிரட்டும் போது ராக்கிபாய் என்ன செய்தார்? அவர் தனது சாம்ராஜ்யத்தை எவ்வாறு பாதுகாத்தார்? எதிரிகள் வைத்த தடைகளை எப்படி முறியடித்தார்? தன்னைக் கடவுளாகக் கருதும் தொழிலாளிகளுக்கு ஏதாவது செய்தாரா? அம்மாவிடம் கொடுத்த வாக்குறுதிக்காக கடைசியில் என்ன செய்தார்? என்பதுதான் மீதிக்கதை.

ஒவ்வொரு அடியிலும் உயர்ந்து நிற்கும் வீரம், அம்மா சொன்ன வார்த்தைகள், அந்த வார்த்தைகளின் தாக்கத்தில் வளர்ந்த பையன். இப்படித்தான் போனது, அதை தொடர கே.ஜே.எஃப் 2. கருடனை கொன்ற ராக்கி பையனாக, முதல் பாகத்தில் காட்டப்பட்ட அதே மேனரிசத்துடனும், இரண்டாம் பாகத்திலும் ராக்கி கதாபாத்திரத்தில் யஷ் வாழ்கிறார். யஷ் தனி ஒருவனாக படத்தை தன் தோள் மேல் சுமந்து செல்கிறார். மான்ஸ்டராக, மாஸ் ஹீரோவாக மனதில் நிற்கிறார். இவரது அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கு பெரிய பலம். படத்தின் ஓப்பனிங்கில் ராக்கி பாயின் அறிமுகம் வேறு லெவலில் உள்ளது. தனித்துவமான டயலாக் டெலிவரியால் ஈர்க்கப்பட்டார். யஷ் ஆக்ஷன் காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீPநிதி ஷெட்டி அழகான தேவதையாக வந்து ரசிக்க வைக்கிறார்.

பாலிவுட் ஸ்டார் ஹீரோ சஞ்சய் தத் நடிப்பு அடுத்த லெவல்.

ரவீனா டாண்டன் ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதியாக பாரதப்பிரதமராக கதாபாத்திரத்தில் தோன்றி தனது வேலையை மிகவும் உறுதியுடன் செய்துள்ளார்.

ராவ் ரமேஷ், அனந்த் நாக் வேடத்தில் பிரகாஷ் ராஜ், ஈஸ்வரிராவ், மாளவிகா அவினாஷ், சரண் சக்தி  ஆகியோர் அற்புதமாக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஈர்த்துள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படம் ஒரு மேஜிக். காட்சி அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது.  ஒளிப்பதிவாளர் புவன் கவுடாவின் விஷ{வல் ட்ரீட் படத்தில் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் அவர் தனது ஃப்ரேமிங்கில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.

திரைக்கதை சுவாரஸ்யமாக செல்ல உஜ்வல் குல்கர்னியின் எடிட்டிங் உதவியுள்ளது, ஏனெனில் படத்தில் தேவையற்ற காட்சிகள் இல்லை.

இசையமைப்பாளர் ரரவி பஸ்ரூரின் இசை படத்திற்கு முதுகெலும்பாக உள்ளது. ரீ-ரெக்கார்டிங்கே படத்திற்கு உயிர்மூச்சு. இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் அம்மா பாடலுடன் உணர்ச்சிகரமான காட்சிகளிலும் படத்தை ஒரு படி மேலே கொண்டு செல்ல முடிந்தது.

கேஜிஎஃப் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் வன்முறைக்கும், அதிரடிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கேஜிஎஃப் முதல் பாகத்தில் ரசிகர்களுக்கு நல்ல விருந்தளித்த இயக்குனர் பிரசாந்த் நீல், இரண்டாம் பாகத்திலும் அதையே தொடர்கிறார். எனவே, முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மாஸ் ரசிகர்களை மகிழ்விக்கிறது என்றே சொல்லலாம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திரைக்கதை சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இயக்குநராக பிரசாந்த் நீலின் வெற்றி பாராட்டுக்குரியது.  இத்துடன் ராக்கிபாயின் பயணம் இன்னும் முடியவில்லை. மூன்றாம் பாகம் இருப்பதாகவும் படத்தில் குறிப்பைக் கொடுத்துள்ளார் இயக்குநராக பிரசாந்த் நீல்.

மொத்தத்தில் இந்திய மொழிகளுக்கு இடையே உள்ள எல்லைகளை மழுங்கடித்து வெற்றி கொடி கட்டும் படங்களில் ஒன்று ஹோம்லே பிலிம்ஸ் தயாரித்துள்ள கேஜிஎஃப் (KGF) அத்தியாயம் 2