கூரன் சினிமா விமர்சனம் : கூரன் விலங்குகளின் தாய்மை பாசத்தைக் காட்டும் ஒரு நெகிழ்ச்சியான மற்றும் உணர்ச்சிபூர்வமான படம் | ரேட்டிங்: 3/5

0
380

கூரன் சினிமா விமர்சனம் : கூரன் விலங்குகளின் தாய்மை பாசத்தைக் காட்டும் ஒரு நெகிழ்ச்சியான மற்றும் உணர்ச்சிபூர்வமான படம் | ரேட்டிங்: 3/5

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, சத்யன், பாலாஜி சக்திவேல்,  ஜார்ஜ் மரியான், கவிதா பாரதி, இந்திரஜா, இயக்குனர் நிதின் வேமுபதி மற்றும் பலர் நடித்​துள்ளனர்.

திரைக்கதை வசனம் எஸ். ஏ. சந்திரசேகர், இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார்.மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு  செய்துள்ளார்.  சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். கலை இயக்கம் வனராஜ். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார். கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார். மக்கள் தொடர்பு : சக்தி சரவணன்.

கொடைக்கானலில் சாலை ஓரமாக ஜான்சி என்கிற நாய் தன் குட்டியுடன் நடந்து செல்லும் போது போதையில் கார் ஓட்டி வந்த நபர் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து குட்டி மீது மோதி செல்கிறது. அந்தத் தாய் நாய் குரைத்துக் கொண்டே காரைத் துரத்திச் செல்கிறது.  தாய் கண் முன் குட்டி துடிதுடித்து இறந்து விடுகிறது. தனது குட்டியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு கொடைக்கானல் காவல் நிலையத்தில் தாய் நாய் புகார் அளிக்க முயற்சிக்கும் போது காவல் நிலையத்தில் உள்ளவர்களுக்கு ஒன்றும் புரியாமல் அதை விரட்டுகிறார்கள். ஆனால் அந்த தாய் நாய் காவல் நிலையத்தையே சுற்றி திரிகிறது. இந்நிலையில், வேறு ஒரு விஷயத்திற்காக காவல் நிலையம் வரும் ஓய்வுபெற்ற வழக்கறிஞர் தர்மராஜின் (எஸ்.ஏ.சந்திரசேகர்) கவனத்தை ஈர்க்கிறது, மேலும் தாய் நாய் அவரைப் பின்தொடரத் தொடங்குகிறது. விரைவில், தனது குட்டியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராடும் தாய் நாயின் அமைதியின்மைக்கான காரணத்தை தர்மராஜ் கண்டுபிடிக்கிறார் மற்றும் குட்டி நாய் சாவுக்கு செல்வாக்கு மிக்க தொழிலதிபர் சேகர் ராஜாவின் (கவிதா பாரதி) மகன் ரஞ்சித் ராஜா (இயக்குனர் நிதின் வேமுபதி) தான் என்பதை தெரிந்துக் கொள்கிறார். 10 அண்டுகள் கழித்து தாய் நாய்க்கு நீதி வாங்கிக் கொடுக்க மீண்டும் களத்தில் இறங்குகிறார். அதன் பின் நடப்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு அனுபவமிக்க வழக்கறிஞராக தனது முழுஅனுபவத்தையும் வசன உச்சரிப்பு, உடல் மொழி, மிகையற்ற பாவனைகள் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தி அந்தப் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி உள்ளார்.

கூரன்’ படத்தின் மையப்பாத்திரமாக ஜென்ஸி மற்றும் பைரவா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நாய் படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக காட்சிக்கு காட்சி வலம் வர உதவிய அதன் பயிற்சியாளரை பாராட்டலாம். நன்கு பயிற்சி பெற்ற, வெளிப்படையான நடிப்பு, பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

போதையில் கார் ஓட்டி குட்டி நாயை கொன்ற கதாபாத்திரத்தில் இயக்குனர் நிதின் வேமுபதி எரிச்சலூட்டும் வகையில் அவரது உடல் மொழி அமைந்து இருந்தது. தொடர்ந்து நடிக்கும் ஆசை இருந்தால் அவர் நிச்சயம் நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

ரஞ்சித் ராஜாவின் தந்தையாக கவிதா பாரதி, நீதிபதியாக ஒய்.ஜி. மகேந்திரன், ரஞ்சித் ராஜாவின் வழக்கறிஞரரக பாலாஜி சக்திவேல், நாயின் குரைப்பு ஒலியை மொழிபெயர்க்கும் பாத்திரத்தில் சத்யன், பார்வையற்ற ஆண்டனியாக ஜார்ஜ் மரியான், சரவண சுப்பையா, மற்றும் இந்திரஜா ஆகியோர் தாங்கள் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்து திரைக்கதை நகர்வுக்கு பக்கபலமாக இருந்துள்ளனர்.

அனைத்து விலங்குகளும் மனிதர்களைப் போன்றவை தான், அவற்றுக்கும் அன்பு, பாசம், நன்றி போன்ற அனைத்து உணர்வுகள் உண்டு.  இந்த உலகில் வாழ்வதற்கு அனைத்து விலங்குகளும்  உரிமை உண்டு. அவை அனைத்தையும் மனிதன் அழிக்கக்கூடாது, துன்புறுத்தக் கூடாது என்கிற கருத்தை ஒரு நாயை வைத்து திரைக்கதை அமைத்து ஒளிப்பதிவாளர் மார்டின் தன்ராஜ், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், கலை இயக்குனர் வனராஜ் மற்றும் பீ. லெனின் மேற்பார்வையில் படத்தொகுப்பாளர் மாருதி எடிட்டிங் உட்பட அனைத்து சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்புடன் தரமான படமாக படைத்துள்ளார் இயக்குனர் நிதின் வேமுபதி.

மொத்தத்தில் கனா புரொடக்ஷன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ள கூரன் விலங்குகளின் தாய்மை பாசத்தைக் காட்டும் ஒரு நெகிழ்ச்சியான மற்றும் உணர்ச்சிபூர்வமான படம், செல்லப்பிராணி பிரியர்களும், குழந்தைகளும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் கூரன்.