குழந்தைகள் முன்னேற்ற கழகம் சினிமா விமர்சனம் : குழந்தைகள் முன்னேற்ற கழகம் குழந்தைகளின் அரசியல் கலாட்டா | ரேட்டிங்: 2/5
மீனாட்சி அம்மான் மூவிஸ் சார்பில் அருண்குமார் சம்மந்தம் மற்றும் சங்கர் தயாள்.என் தயாரித்திருக்கும் குழந்தைகள் முன்னேற்ற கழகம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சங்கர் தயாள்.என்.
இதில் செந்தில், யோகிபாபு, இமயவர்மன், (இயக்குநர் சகோதரர் மகன்) அத்வைத் ஜெய் மஸ்தான் (இயக்குநர் மகன்) ஹரிகா கொயிலம்மா (அன்டே சுந்தரனிகி) பவாஸ் (மாஸ்டர்), பருத்திவீரன் சரவணன், சுப்பு பஞ்சு, லிசி ஆண்டனி, ப்ராங்க்ஸ்டர் ராகுல், அர்ஜுனன், பிச்சைக்காரன் மூர்த்தி, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வையாபுரி, கம்பம் மீனா, கும்கி அஸ்வின், அஷ்மிதா சிங், வைகா ரோஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள்:- ஒளிப்பதிவு:- ஜே. லக்ஷ்மேன், எடிட்டர்: ரிச்சர்ட் கெவின் .ஏ, இசை இயக்குனர்: “சாதக பறவைகள்” ஷங்கர், கலை இயக்குநர்: சி.கே. முஜிபூர் ரஹ்மான், நிர்வாக தயாரிப்பாளர்- பாண்டியன் நன்மாறன், நடனக் கலை- ராதிகா, அபு, பத்திரிக்கை தொடர்பு –ஏய்ம் சதீஷ்.
ஆளும் அரசியல் கட்சியின் தலைவரான பக்கிரிசாமியின் (செந்தில்) கட்சியில் சமநிலையில் இருந்து அதிகாரத்துக்காக போட்டி போடும் ஊழல் அரசியல்வாதிகள் ஆதிமூலம் (யோகிபாபு) மற்றும் சாணக்கியர் (சுப்பு பஞ்சு). ஆதிமூலத்துக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவிக்கு பிறந்தவன் பல்லவன் (இமயவர்மன்), வீட்டில் வேலை செய்ய வந்த வடமாநில பெண் தான் இரண்டாவது மனைவி. இவர்களுக்குப் பிறந்த மகன் அலெக்சாண்டர் (அத்வைத்). இரண்டு மகன்களும் ஒரே பள்ளியில் படிப்பதுடன், இவர்களுக்குள் நடக்கும் அக்கப்போர்களை இருவரும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருவருக்கும் அரசியல் தலைவர் ஆகும் ஆசை இருக்கிறது. பல்லவன் தன் கீழ் அலெக்சாண்டர் அடிமையாக இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவன். அலெக்சாண்டர் பிரதமராக ஆகி அண்ணன் பல்லவன் அவன் கீழ் இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவன். அண்ணன் பல்லவன் அவரது அரசியல் ஆசையை ஆதரிப்பது போல், அலெக்சாண்டர் பள்ளிப் பேரவையின் மாணவர் சங்கத் தேர்தலில் தொடங்கி பல்லவனின் திட்டங்கள் அனைத்தையும் தவிடுபொடி ஆக்குகிறான். பள்ளி பருவத்தில் தொடங்கும் அண்ணன் பல்லவன், தம்பி அலெக்சாண்டர் அரசியல் ஆட்டம் அவர்கள் பெரியவர்கள் ஆனதும், இருவரும் நினைத்தது போல் அவர்கள் அரசியல் எண்ணம் நிறைவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையும் கதாபாத்திரமும் எப்படி இருந்தால் எனக்கு என்ன பணம் வந்தால் போதும் என்று நடிக்க ஒப்புக் கொள்ளும் யோகிபாபு இன்னும் எத்தனை நாளைக்கு பார்த்து அலுத்துப் போன நடிப்பால் ரசிகர்களை ஏமாற்றுவார் தெரியவில்லை.
செந்தில், அவரது தனித்துவமான நகைச்சுவையை நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் காணும் போது ரசிகர்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இமயவர்மன், (இயக்குநர் சகோதரர் மகன்), அத்வைத் ஜெய் மஸ்தான் (இயக்குநர் மகன்), பள்ளிப் பருவ இளைஞர்கள் வெளிப்பாடுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர்.
ஹரிகா கொயிலம்மா (அன்டே சுந்தரனிகி) பவாஸ் (மாஸ்டர்), பருத்திவீரன் சரவணன், சுப்பு பஞ்சு, லிசி ஆண்டனி, ப்ராங்க்ஸ்டர் ராகுல், அர்ஜுனன், பிச்சைக்காரன் மூர்த்தி, பள்ளி முதல்வராக சித்ரா லட்சுமணன், அலுவலக உதவியாளராக (மறைந்த) மயில்சாமி, வையாபுரி, கம்பம் மீனா, கும்கி அஸ்வின், அஷ்மிதா சிங், வைகா ரோஸ் உட்பட அனைத்து நடிகர்களும் நகைச்சுவை கலந்த திரைக்கதைக்கு சுவாரசியத்தை கூட்டுகிறார்கள்.
ஒளிப்பதிவு:- ஜே. லக்ஷ்மேன், எடிட்டர்: ரிச்சர்ட் கெவின் .ஏ, இசை இயக்குனர்: ‘சாதக பறவைகள்” ஷங்கர், கலை இயக்குநர்: சி.கே. முஜிபூர் ரஹ்மான், நடனம்: ராதிகா, அபு ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பணி படத்திற்கு வலு சேர்த்துள்ளது.
அரசியல் வாரிசுகள் அரசியல் தந்திரம், காய் நகர்த்தல், தில்லுமுல்லு என பள்ளி பருவத்திலேயே நன்றாக புரிந்து வைத்து, அதை அந்த வயதில் எப்படி நடைமுறைப் படுத்துகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக வாரிசு அரசியல் மற்றும் பள்ளி அளப்பறைகளை நகைச்சுவையாக சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் சங்கர் தயாள்.என்.
மொத்தத்தில் மீனாட்சி அம்மான் மூவிஸ் சார்பில் அருண்குமார் சம்மந்தம் மற்றும் சங்கர் தயாள்.என் தயாரித்திருக்கும் குழந்தைகள் முன்னேற்ற கழகம் குழந்தைகளின் அரசியல் கலாட்டா.