‘குருமூர்த்தி’ விமர்சனம்: குருமூர்த்தி கவர்ச்சி கலந்த மசாலா படம் | ரேட்டிங்: 2.5/5
பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சிவசலபதி, சாய் சரவணன் இணைந்து தயாரித்திருக்கும் படம் குருமூர்த்தி. இந்தப் படத்தை பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.பி.தனசேகர் இயக்கியிருக்கிறார்.
படத்தொகுப்பு : எஸ். என். பாசில்
இசை : சத்யதேவ் உதய சங்கர்,
மக்கள் தொடர்பு : சக்திசரவணன்ராம்கி ஒரு பெரிய தொழிலதிபர். அவருடைய சின்ன வீட்டம்மாவுக்கு ஒரு வீடு வாங்குவதற்காக மனைவிக்கு தெரியாமல் கணக்கில் வரவு வைக்கப்படாத பணத்திலிருந்து 5 கோடி ரூபாய் எடுத்துச் செல்கிறார். செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது. அவசரமாக ஒரு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று ஒரு பெட்டிக் கடையில் நிறுத்தி தண்ணீர் கேட்கிறார். கடையில் சிறு பிரச்சனை ஏற்படுகிறது. கடையில் அந்தச் சலசலப்பின் முடிவில் திரும்பிப் பார்த்தால் காரில் உள்ள பணப்பெட்டி காணாமல் போய்விடுகிறது. அந்த பணத்தை அங்கே, அப்போது சுற்றி திரிந்துக்கொண்டிருந்த மூன்று பேர் கொண்ட திருட்டுக் கும்பலிலிருந்த ஒருவன் காரில் உள்ள பணப்பெட்டியை திருடிச் சென்று விடுகிறான். பணப்பெட்டியை தேயிலைத் தோட்டத்தில் எங்கோ மறைத்து விடுகிறான். யாருக்கும் தெரியாமல் தான் மட்டும் அந்த பணப்பெட்டியை சுருட்டிவிட வேண்டும் என்று நினைத்தும், பயத்தினால் மறைத்த பணப்பெட்டி இன்னொருவர் கையில் கிடைக்க இப்படி அந்தப் பெட்டி வெவ்வேறு ஆட்களுக்குக் கை மாறுகிறது. கடையில் நடக்கும் தகராறை பார்த்து இன்ஸ்பெக்டர் நட்டி ராம்கியிடம் விசாரிக்கும் விஷயம் அறிந்து வரிகட்டாமல் வைத்துள்ள பணத்தை பற்றியும் அவரது அஜாக்கிரதையால் காணாமல் போனது பற்றி அறிவுரை கூறுகிறார். இன்ஸ்பெக்டர் நட்டி தலைமையில் காணாமல் போகும் 5 கோடி ரூபாய் பணப்பெட்டியைத் தேடிப் போலீஸ் துரத்தி ஓடுவதும் பெட்டி கைமாறிக் கைமாறி கண்ணாமூச்சி ஆடுவதும் தொடர்கிறது. இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் நட்டியின் குடும்பக் கதை இணைந்து கொள்கிறது. பிரசவ வலியில் துடிக்கும் மனைவி, தன் மன நெருக்கடியை மறைத்துக் கொண்டு கடமையே கண்ணாக மதித்து பெட்டியைத் தேடும் நட்டி என சென்டிமெண்ட் கலந்து செல்லும் போலீஸ் விசாரணைக் கதையாக நகர்கிறது. ஒரு நேர்மையான போலீஸ்காரர் ஒரு தொழிலதிபரின் கணக்கில் வராத ₹5 கோடி பணம் நிரப்பப்பட்ட சூட்கேஸைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். பணப்பெட்டி யாரிடம் இருக்கிறது? கடைசியில் அதை மீட்டெடுக்க முடிந்ததா? என்பதே பணப்பெட்டியின் பயணக்கதை.கர்ணன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தவர் நட்டி நட்ராஜ். கர்ணன் படத்தில் தான் எடுத்து கொண்ட கதாபாத்திரம் நெகட்டிவ் கதாபாத்திரம் என்றாலும் மிக சிறந்த முறையில் தன் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி பலரையும் வியக்க வைத்தவர். குருமூர்த்தி என்கிற டைட்டில் ரோல் ஏற்று போலீஸ் இன்ஸ்பெக்டராக பெரும்பாலும் ஜீப்பில் சுற்றிக் கொண்டிருக்கும் அவருடைய சிறப்பான நடிப்புத் திறனை வெளிக்கொண்டு வந்திருக்கலாம்.
போலீஸ் டிரைவராக ரவிமரியா, உடன் பயணிக்கும் ஹெட் கான்ஸ்டபிள் ஆக மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், குடுகுடுப்பைக்காரராக வரும் ஜார்ஜ், பாய்ஸ் ராஜன், மோகன் வைத்யா, யோகிராம், கவர்ச்சிக்கு சஞ்சனா சிங், மற்றும் அஸ்மிதா ஆகியேரின் பங்களிப்பு சிறப்பு. இருந்தாலும் ரவிமரியா, மனோபாலாவின் யானை லத்தி போன்ற காமெடிகள் துளிக்கூட சிரிப்பு வரவில்லை என்பது நிஜம். ஒரு போலீஸ் அதிகாரி முன் இவர்கள் இருவரும் மாமன் மச்சான் மொழியில் பேசிக் கொள்ளும் விதம் ஏற்புடையதாக இல்லை.
தேவராஜ் ஒளிப்பதிவில் மலைபிரதேச தேயிலைத் தோட்டமுள்ள பகுதிகள், பசுமையான மலைச்சரிவு கண்களுக்கு இதமான காட்சிகள் குளிர்ச்சியாக இருக்கின்றன.
சத்யதேவ் உதய சங்கர் இசை மற்றும் பின்னணி இசை ஓகே.சூட்கேஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கைமாறுவதும், அதை வேறு இடத்திற்கு மாற்றிய பிறகு அல்லது வேறு ஒருவரிடம் தொலைத்த பிறகு போலீஸ்காரர் இந்த நபர்களுக்குள் தடுமாறுவது போன்ற தொடர் காட்சிகளாக தனசேகர் கதைக்களத்தை உருவாக்கி திருடன் போலீஸ் காமெடி கலந்த மசாலா சஸ்பென்ஸ் ஜானரில் திரைக்கதை அமைத்து படமாக கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் கே.பி.தனசேகரன். இன்றைய சினிமாவை அப்டேட் செய்து கடுமையாக உழைத்தால் எதிர்காலத்தில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
மொத்தத்தில் சிவசலபதி, சாய் சரவணன் இணைந்து தயாரித்திருக்கும் ‘குருமூர்த்தி’ கவர்ச்சி கலந்த மசாலா படம்.