குடும்பஸ்தன் சினிமா விமர்சனம் : குடும்பஸ்தன் நடுத்தரக் குடும்பம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மனதை கவரும் தருணங்களுடன் பார்வையாளர்களை கவரும் நல்லதொரு பொழுதுபோக்கு சித்திரம் | ரேட்டிங்: 4/5
நடிகர்கள் :
மணிகண்டன் – நவீன்
குரு சோமசுந்தரம் – ராஜேந்திரன்
சான்வே மேகனா – வெண்ணிலா
ஆர்.சுந்தரராஜன் – பழனிசாமி
குடச்சனத் கனகம் – சுப்புலட்சுமி
நிவேதிதா ராஜப்பன் – அனிதா
ஷன்விகா ஸ்ரீ – அனிதா ராஜேந்திரனின் மகள்
முத்தமிழ் – சிம்சன்
பிரசன்னா பாலச்சந்திரன் – மனோகரன்
ஜென்சன் திவாகர் – அமீர்
அனிருத் – குட்டி தம்பி
பாலாஜி சக்திவேல் – மோகன் ரேம்
அபிலாஷ் – மாணிக்சந்த்
டிஎஸ்ஆர் ஸ்ரீனிவாசன் – பதிவாளர்
காயத்திரி – வீட்டு உரிமையாளர்
வர்கீஸ் – ராஜேந்திரனின் எம்.டி
தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்கம் : ராஜேஷ்வர் காளிசாமி
ஓளிப்பதிவு : சுஜித் என் சுப்ரமணியம்
படத்தொகுப்பு : கண்ணன் பாலு
இசை : வைசாக்
இணை திரைக்கதை : என்.கிருஷ்ணகாந்த்
வசனம் : பிரசன்னா பாலச்சந்திரன்
கதை – திரைக்கதை : பிரசன்னா பாலச்சந்திரன், ராஜேஷ்வர் காளிசாமி
ஒலி வடிவமைப்பாளர் : அந்தோணி பி.ஜே.ரூபன்
சண்டைப் பயிற்சி : தினேஷ் சுப்பராயன்
ஆடை வடிவமைப்பாளர் : மீரா. எம்
கலை இயக்குனர் : சுரேஷ் கல்லேரி
தயாரிப்பு : எஸ். வினோத்குமார்
தயாரிப்பு நிறுவனம் : சினிமாகாரன்
பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர், டி.ஒன்
தனியார் நிறுவனம் ஒன்றில் கிராபிக்ஸ் டிசைனராக பணிபுரியும் நவீன் (மணிகண்டன்) மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான வெண்ணிலாவை (சான்வே மேகனா) காதலித்து அவசர அவசரமாக இரு குடும்ப எதிர்ப்பையும் மீறி நண்பர்கள் உதவியுன் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் இரு குடும்பங்களும் திருமணப் பதிவாளரை நோக்கி சாபங்களை விடுகின்றனர். பிறகு கட்டுப்பாடுகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்படாத சூழ்நிலைகளுக்கு மத்தியில், நவீன் ஒரு நிலையான வேலையில் இருப்பதால், வெண்ணிலா ஐஏஎஸ் தேர்வுகளுக்கு தயாராகி வருவதால், தம்பதியினர் நவீனின் பெற்றோருடன் வசிக்கச் செல்கிறார்கள், ஆனால் நவீன் தாயார் சுப்புலட்சுமி (குடச்சனத் கனகம்) மருமகள் வெண்ணிலாவை இன்னும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளவில்லை. வெண்ணிலா கர்ப்பமாகும் போது, தம்பதியினர் எதிர்காலத்தில் தங்களுக்கு இருக்கும் பொறுப்பை உணரும்போது எல்லாம் மாறுகிறது. அதிக சம்பளம் வாங்கும், நன்கு செட்டில் ஆன வேலையில் இருக்கும் மைத்துனர் ராஜேந்திரன் (குரு சோமசுந்தரம்) நவீனின் திறன்கள் மற்றும் வேலையைப் பற்றி எப்போதும் தாழ்வாக பேசி அவமானப்படுத்துகிறார். இருவரின் ஈகோ மோதல், அதை தொடர்ந்து ஒரு மோசமான மார்க்கெட்டிங் போது நடைபெறும் சம்பவத்தால் தனது நண்பருக்காகவும் தனது சுயமரியாதையை பேணுவதற்காகவும் நவீன் தனது வேலையை இழக்கிறார். அதே நேரத்தில் நவீனின் வங்கிக் கணக்கு காலியாக அதைத் தொடர்ந்து அதிகரித்து வரும் செலவுக்கான திட்டங்களின் அணிவகுப்பு முதல் கடனுக்கு வழிவகுக்கிறது. நவீன் ஒரு சாதாரண ₹20,000 கடனுடன் தொடங்க குடும்பத் தேவைகளை சமாளிக்க அது எப்படியோ ₹3 லட்சம் கடனாகப் பெருகி, அவரைத் தூக்கமின்றித் தள்ளும்போது, மைத்துனர் ராஜேந்திரன் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற நெருக்கடியும் அவரது மன அழுத்தம் மேலும் அதிகரிக்கிறது. அடுத்தடுத்து அவர் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவை கலந்த எமோஷனலுடன் திரைக்கதை நகர்கிறது.
ஒவ்வொரு படத்திலும் மணிகண்டன் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் மூலம் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றுள்ளார். குடும்பஸ்தனிலும் நவீனாக ஒரு நடுத்தர வர்க்க மனிதனின் சாரத்தை யதார்த்தமான மற்றும் ஈர்க்கக்கூடிய நடிப்பின் மூலம் அவரது வெற்றிப் பயணம் தொடர்கிறது. அவரது உடல் மொழியும், முக பாவனையும் கதைக்கு நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துகிறது.
திரைக்கதைக்கு முதுகெலும்பாக மைத்துனர் ராஜேந்திரன் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் தனது தனித்துவமான நடிப்பு திறன் மற்றும் அவரது கூர்மையான கருத்துக்களும் கதைக்கு வலு சேர்த்துள்ளார். மேலும் மணிகண்டன் உடன் இணையும் காட்சிகள் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. இருவருடைய கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது.
வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ளும் போது தனது கணவரின் பக்கத்தில் நிற்கும் ஒரு பெண்ணின் அமைதியான வலிமையை வெண்ணிலாவாக நடிக்கும் சான்வே மேக்கனா, அவரது கதாபாத்திரம் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
துணை கதாபாத்திரங்களாக ஆர்.சுந்தரராஜன் (பழனிசாமி), குடச்சனத் கனகம் (சுப்புலட்சுமி), நிவேதிதா ராஜப்பன் (அனிதா), ஷன்விகா ஸ்ரீ (அனிதா ராஜேந்திரனின் மகள்), முத்தமிழ் (சிம்சன்), பிரசன்னா பாலச்சந்திரன் (மனோகரன்), ஜென்சன் திவாகர் (அமீர்), அனிருத் (குட்டி தம்பி), பாலாஜி சக்திவேல் (மோகன் ரேம்), அபிலாஷ் (மாணிக்சந்த்), டிஎஸ்ஆர் ஸ்ரீனிவாசன் (பதிவாளர்), காயத்திரி (வீட்டு உரிமையாளர்), வர்கீஸ் (ராஜேந்திரனின் எம்.டி), ஆகியோர் நடுத்தர வர்க்க குடும்பங்களின் போராட்டங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நேர்த்தியான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர்.
நாம் அனைவரும் நம் குடும்ப வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் சந்தித்த, எதிர்கொண்ட பிரச்சினைகள், இன்றும் நம்மில் பலர் இந்த பிரச்சினைகளுக்கு விடையாக மேலும் கடன் பட்டு அவமானப்பட்டு கொண்டிருக்கும் அந்த சூழலை அப்படியே நம் கண்முன் நிறுத்தி எளிதில் ‘கனெக்ட்’ செய்து கொள்ளும்படி திரைக்கதை அமைத்து தேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் ஓளிப்பதிவாளர் சுஜித் என் சுப்ரமணியம், படத்தொகுப்பாளர் கண்ணன் பாலு, இசையமைப்பாளர் வைசாக், வசனகர்த்தா பிரசன்னா பாலச்சந்திரன், சண்டைப் பயிற்சியாளர் தினேஷ் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளர் மீரா. எம், கலை இயக்குனர் சுரேஷ் கல்லேரி ஆகியோரின் கூட்டணி பங்களிப்புடன் சீரியஸான கதைக்களத்தை ஜாலியாக ரசிக்கும்படி காட்சி படுத்தி உள்ளார் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி.
மொத்தத்தில் தயாரிப்பாளர் எஸ். வினோத்குமார் தயாரித்துள்ள குடும்பஸ்தன் நடுத்தரக் குடும்பம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மனதை கவரும் தருணங்களுடன் பார்வையாளர்களை கவரும் நல்லதொரு பொழுதுபோக்கு சித்திரம்.